search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்தியாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட மெர்சிடிஸ் AMG GT6 கான்செப்ட்
    X

    இந்தியாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட மெர்சிடிஸ் AMG GT6 கான்செப்ட்

    • இந்த கான்செப்ட் மாடல் மே மாதம் வரை காட்சிக்கு வைக்கப்படும்.
    • பாரத் மொபிலிட்டி கண்காட்சியில் மெர்சிடிஸ் EQG கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது AMG GT6 கான்செப்ட் மாடலை நீட்டா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் காட்சிக்கு வைத்துள்ளது. இந்த கான்செப்ட் கார் இந்த ஆண்டு மே மாதம் வரை காட்சிக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக மெர்சிடிஸ் நிறுவனம் தனது விஷன் மெர்சிடிஸ் மேபேக் 6 எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை காட்சிக்கு வைத்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாரத் மொபிலிட்டி கண்காட்சியில் மெர்சிடிஸ் EQG கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது. 2013-இல் வெளியான கிரான் டூரிஸ்மோ வீடியோ கேமில் இந்த கார் இடம்பெற்று இருந்தது.


    இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு கண்காட்சிகளில் இந்த கான்செப்ட் கார் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், தான் தற்போது மெர்சிடிஸ் AMG GT6 கான்செப்ட் மாடல் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடல் பாரம்பரியம் மிக்க 300 SL ரேஸ் கார் நினைவாக அமைகிறது.

    இந்த காரின் கிரில் பகுதியில் எல்.இ.டி.-க்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் முன்புற ஹின்ஜ் கொண்ட பொனெட் மற்றும் எல்.இ.டி. ஹெட்லேம்ப் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. டிசைனை பொருத்தவரை இந்த கார் லோ-ஸ்லங் பாடி, கல்-விங் ரக கதவுகள், இன்டகிரேட் செய்யப்பட்ட டிஃப்யூசர் மற்றும் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    மெர்சிடிஸ் AMG GT6 கான்செப்ட் மாடல் 2017-இல் வெளியான ஜஸ்டிஸ் லீக் திரைப்படத்தில் புரூஸ் வேன் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. AMG GT6 கான்செப்ட் மாடலில் 585 ஹெச்.பி. பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்ட V8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் AMG E 63 S மாடலிலும் உள்ளது.

    Next Story
    ×