search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் டீசர்
    X
    ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் டீசர்

    ஸ்கோடாவின் விஷன் ஐ.என். கான்செப்ட் கார் டீசர் வெளியானது

    ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐ.என். கான்செப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது புதிய எஸ்.யு.வி. மாடலின் கான்செப்ட் வெர்ஷன் டீசரை வெளியிட்டுள்ளது. ஸ்கோடா விஷன் ஐ.என். என அழைக்கப்படும் புதிய கார் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    முதற்கட்ட டீசர்களில் புதிய காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அசத்தல் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் இந்த கார் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்தியாவில் இந்த கார் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புதிய ஸ்கோடா காரின் வடிவமைப்பு அதிக ரக்கட் தோற்றத்தில், முன்புற கிரில் பெரிதாகவும், முன்புற பம்ப்பர் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. காரின் முன்புற கிரில் ஸ்கோடாவின் பாரம்பரிய வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. இதில் பெரிய ஏர் இன்டேக்குகள், ஸ்கஃப் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் டீசர்

    காரின் பின்புறம் மெல்லிய எல்.இ.டி. டெயில்லைட்கள், ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. புதிய ஸ்கோடா கார் ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    எனினும் புதிய காரில் ஸ்கோடா கமிக் மாடலில் உள்ள அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். காரின் உள்புறத்தில் பெரிய மிதக்கும் வகையிலான தொடுதிரை டிஸ்ப்ளே, ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது. 

    ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் காரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

    ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு, உற்பத்தி பணிகள் பின்னர் துவங்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் இதன் விற்பனை 2021 ஆண்டில் துவங்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×