என் மலர்
கார்

ஆல் வீல் டிரைவ் வேரியண்ட்... அசத்தல் அப்டேட் பெற்ற மினி கன்ட்ரிமேன் JCW..!
- இந்த கார் ஒரு லிட்டருக்கு 15.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- பிரிட்டிஷ் ரேசிங் கிரீன், லெஜண்ட் கிரே மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.
மினி கன்ட்ரிமேன் JCW ஆல் வீல் டிரைவ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 300 எச்.பி. பவரையும், 400 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் உள்ளது.
இந்த கார் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.4 நொடிகளில் எட்டும். மேலும், அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த பிரிவில் மற்ற மாடல்களுடன் ஒப்பிடும் போது, இந்த கார் ஒரு லிட்டருக்கு 15.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தோற்றத்தை பொறுத்தவரை 19 இன்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள், சி-பில்லரில் JCW பேட்ச், பெரிய ரூப் ஸ்பாய்லர்கள், கருப்பு நிறத்தில் கன்ட்ரிமேன் எழுத்துக்கள், 4 எக்சாஸ்ட் இடம் பெற்றுள்ளன.
இந்த கார் பிரிட்டிஷ் ரேசிங் கிரீன், லெஜண்ட் கிரே மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். விங் மிரர்கள் கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். உள்புறம் 9.4 இன்ச் வட்ட வடிவ டச் ஸ்கிரீன் கூடிய OLED இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஹார்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூப், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, ஆட்டோபார்க் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்திய சந்தயைில் புதிய கன்ட்ரிமேன் JCW விலை ரூ.64.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






