search icon
என் மலர்tooltip icon

    கார்

    கார் மாடல்களுக்கு ரூ. 46 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு
    X

    கார் மாடல்களுக்கு ரூ. 46 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு

    • மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • இவை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கின்றன.

    மாருதி சுசுகி அரினா கார் மாடல்களுக்கு ரூ. 46 ஆயிரம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்ட வடிவில் வழங்கப்படுகின்றன.

    ஜூன் மாத சலுகைகள் ஆல்டோ, செலரியோ, ஸ்விப்ட், வேகன் ஆர் மற்றும் எஸ் பிரெஸ்ஸோ போன்ற ஹேச்பேக் மாடல்கள், டிசையர் செடான் மற்றும் பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் எர்டிகா எம்.பி.வி. அல்லது CNG மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    மாருதி சுசுகி செலரியோ - ரூ. 46 ஆயிரம் வரையிலான சலுகைகள்

    மாருதி சுசுகி வேகன் ஆர் - ரூ. 46 ஆயிரம் வரையிலான சலுகைகள்

    மாருதி சுசுகி ஆல்டோ 800 - ரூ. 31 ஆயிரம் வரையிலான சலுகைகள்

    மாருதி சுசுகி இகோ - ரூ. 24 ஆயிரம் வரையிலான சலுகைகள்

    மாருதி சுசுகி டிசையர் - ரூ. 22 ஆயிரம் வரையிலான சலுகைகள்

    மாருசி சுசுகி பிரெஸ்ஸா - ரூ. 22 ஆயிரம் வரையிலான சலுகைகள்

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ - ரூ. 16 ஆயிரம் வரையிலான சலுகைகள்

    Next Story
    ×