
முன்பதிவு துவங்கியது முதல் இதுவரை சுமார் ஆயிரக்கணக்கானோர் ஹெக்டார் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில், எம்.ஜி. மோட்டார் இந்திய சந்தையில் ஹெக்டார் காருக்கான முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், கார் டெலிவரிக்கு வரும் வரை வாடிக்கையாளர்களுக்கு, வாரத்திற்கு 1000 புள்ளிகள் வழங்கப்படும். இந்த புள்ளிகள் பிற்காலத்தில் இலவச கார் பாகங்கள், ப்ரீபெய்ட் பராமரிப்பு தொகுப்பு ஆகியவற்றிற்கு பயன்படும்.
இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஹெக்டார் நிறுவனம் நாட்டில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் ஒவ்வொரு 2 வார காத்திருப்பு காலத்திலும், ஒரு பெண் குழந்தைக்கு இலவச கல்வி வழங்கப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.