search icon
என் மலர்tooltip icon

    பைக்

    135 கி.மீ. வேகம்.. 221 கி.மீ. ரேன்ஜ்.. இந்தியாவில் அறிமுகமான புது எலெக்ட்ரிக் பைக்
    X

    135 கி.மீ. வேகம்.. 221 கி.மீ. ரேன்ஜ்.. இந்தியாவில் அறிமுகமான புது எலெக்ட்ரிக் பைக்

    • முதல் எலெக்ட்ரிக் பைக் என்ற பெருமையை பெற்றது.
    • மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 8.9 நொடிகளில் எட்டிவிடும்.

    ஆர்க்ஸா எனர்ஜீஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆர்க்ஸா மண்டிஸ் என்று அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் பைக் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் சலுகை பெற முடியாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த பைக்குடன் 1.3 கிலோவாட் சார்ஜர் ஒன்றும் வழங்கப்படுகிறது.

    இந்த எலெக்ட்ரிக் பைக் அல்ட்ராவைலெட் நிறுவனத்தின் F77 மாடலின் பேஸ் வேரியண்டிற்கு போட்டியை ஏர்படுத்தும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆர்க்ஸாவின் புதிய மண்டிஸ் எலெக்ட்ரிக் பைக், இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் லிக்விட் கூல்டு மோட்டார் கொண்ட முதல் எலெக்ட்ரிக் பைக் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    இதில் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 28 ஹெச்.பி. பவர், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 135 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.9 நொடிகளில் எட்டிவிடும்.

    ஆர்க்ஸா மண்டிஸ் மாடலில் 8.9 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP67 தர பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியை 1.3 கிலோவாட் சார்ஜர் பயன்படுத்தினால் 5 மணி நேரத்தில் 80 சதவீதம் வரையிலும் 3.3 கிலோவாட் சார்ஜர் பயன்படுத்தினால் 2.5 மணி நேரத்தில் 80 சதவீதம் வரையிலும் சார்ஜ் செய்திட முடியும். இந்த பைக் முழு சார்ஜ் செய்தால் 221 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    புதிய ஆர்க்ஸா மண்டிஸ் எலெக்ட்ரிக் பைக்கில் முழுமையான டிஜிட்டல் 5 இன்ச் டி.எஃப்.டி. டேஷ்போர்டு, லினக்ஸ் சார்ந்த ஒ.எஸ்., முழுமையாகவே எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. சார்ஜிங்கை பொருத்தவரை ஆர்க்ஸா மண்டிஸ் மாடலுடன் 1.3 கிலோவாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இது வேண்டாம் என்பவர்கள் 3.3 கிலோவாட் ப்லிட்ஸ் சார்ஜரை வாங்கிக் கொள்ளலாம்.

    தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஆர்க்ஸா மண்டிஸ் எலெக்ட்ரிக் பைக்கின் வினியோகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் ஆகும். இந்த கட்டணம் முதலில் முன்பதிவு செய்யும் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் என்று ஆர்க்ஸா தெரிவித்து உள்ளது. அதன்பிறகு முன்பதிவு செய்வோருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய ஆர்க்ஸா மண்டிஸ் எலெக்டிரிக் பைக்கின் விலை ரூ. 3.6 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் ஒற்றை வேரியண்டிலேயே கிடைக்கிறது. இது அல்ட்ராவைலட் F77 மாடலுக்கு நேரடி போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×