என் மலர்

    பைக்

    வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான வவுச்சர்களை வழங்கும் கவாசகி
    X

    வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான வவுச்சர்களை வழங்கும் கவாசகி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • கவாசகி மோட்டார்சைக்கிள்களுக்கான சலுகைகள் இந்த மாத இறுதி வரை வழங்கப்படுகிறது.

    கவாசகி இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட சில மாடல்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதில் குட் டைம்ஸ் வவுச்சர் சலுகையின் கீழ் கவாசகி இந்தியா தனது குறைந்த விலை நின்ஜா 300 மோட்டார்சைக்கிளுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது.

    இத்துடன் ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் முறையே Z650 மற்றும் W800 மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் குட் டைம்ஸ் வவுச்சரை மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த சலுகை இன்று (பிப்ரவரி 1) துவங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. இதோடு மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மாடல்களின் ஸ்டாக் இருப்புக்கு ஏற்றவாரு சலுகைகள் வழங்கப்படும். கவாசகி நின்ஜா 300 எக்ஸ்-ஷோரூம் மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் என துவங்குகிறது.

    கவாசகி Z650 மற்றும் W800 மாடல்களின் விலை முறையே ரூ. 6 லட்சத்து 43 ஆயிரம் மற்றும் ரூ. 7 லட்சத்து 33 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. கடந்த மாதம் கவாசகி இந்தியா நிறுவனம் நின்ஜா 400, நின்ஜா 1000 SX மற்றும் நின்ஜா ZX-10R மாடல்களின் விலையை மாற்றியமைத்தது.

    Next Story
    ×