என் மலர்tooltip icon

    பைக்

    அட்வெஞ்சர் பிரிவில் புது பைக் அறிமுகம் செய்த சிஎப் மோட்டோ
    X

    அட்வெஞ்சர் பிரிவில் புது பைக் அறிமுகம் செய்த சிஎப் மோட்டோ

    • இந்த மோட்டார் சைக்கிளில் 449 சிசி பேரலல் டுவின் லிக்விட் கூல்டு மோட்டார் இடம் பெற்றுள்ளது.
    • உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிஎப் மோட்டோ நிறுவனம், 450 MT என்ற அட்வெஞ்சர் டூரர் மோட்டார்சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை கால கொண்டாட்டத்தையொட்டி, இது சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மோட்டார் சைக்கிளில் 449 சிசி பேரலல் டுவின் லிக்விட் கூல்டு மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,500 ஆர்.பி.எம். மில் 44 பி.எச்.பி. பவரையும், 6,250 ஆர்.பி.எம்.மில் 44 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்தும். 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் வகையில் இதன் என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது.

    உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எந்த இந்திய நிறுவனம் இதனை சந்தைப்படுத்தும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

    புதிய ஜிஎஸ்டி விதிகளின்படி, இது 40 சதவீத வரி விதிப்பு பிரிவில் (ஆடம்பர பொருள்) இடம் பெறுகிறது. சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் ரூ.3.99 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×