search icon
என் மலர்tooltip icon

    பைக்

    விரைவில் இந்தியா வரும் ஏத்தர் 450 அபெக்ஸ் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    விரைவில் இந்தியா வரும் ஏத்தர் 450 அபெக்ஸ் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • ஏத்தர் 450X மாடலில் இருக்கும் ரேபிட் வார்ப் மோட்-ஐ விட வேகமானது.
    • ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கியது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஏத்தர் 450 அபெக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஏத்தர் உருவாக்கியதிலேயே அதிவேகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் புதிய வார்ப் பிளஸ் மோட் உள்ளது. ஏத்தர் 450X மாடலில் இருக்கும் ரேபிட் வார்ப் மோட்-ஐ விட வேகமானது ஆகும்.

    புதிய ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த மாடல் ஜனவரி 6-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பத்து ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில், ஏத்தர் 450 அபெக்ஸ் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடல் தோற்றத்தில் ஏத்தர் 450S மற்றும் ஏத்தர் 450X மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. இதன் பின்புறம் இருக்கும் ஒரே மாற்றம் பின்புற பாடிவொர்க்கில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. முன்னதாக 2020 ஆண்டு சீரிஸ் 1 கலெக்டர்ஸ் எடிஷன் மாடலில் இருந்ததை போன்ற டிரான்ஸ்பேரன்ட் பாடி பேனல்கள் புதிய மாடலிலும் வழங்கப்படுகின்றன.

    ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலின் விலை ஏத்தர் 450X மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் பேட்டரி பேக் மற்றும் ரேன்ஜ் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது.

    Next Story
    ×