search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ஹோண்டாவின் அடுத்த அதிரடி.. புதிய நிறத்தில் அறிமுகமான 2024 ADV 160
    X

    ஹோண்டாவின் அடுத்த அதிரடி.. புதிய நிறத்தில் அறிமுகமான 2024 ADV 160

    • ஹோண்டா நிறுவனம் தனது ADV 160 மாடலை ஏற்கனவே அறிமுகம் செய்தது.
    • ஹோண்டா ADV 160 மாடல் ஏற்கனவே மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் அட்வென்ச்சர் ஸ்டைல் ஸ்கூட்டர் மாடலை ஜூம் 160 பெயரில் சமீபத்திய EICMA 2023 நிகழ்வில் அறிமுகம் செய்தது. ஆனால் ஹோண்டா நிறுவனம் தனது ADV 160 மாடலை ஏற்கனவே அறிமுகம் செய்து, அதனை 2024 ஆண்டிற்கும் அப்டேட் செய்துவிட்டது.

    2024 ஹோண்டா ADV 160 மாடல் பியல் பாஸ்போரஸ் புளூ எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர மேட் பிளாக், பியல் ஸ்மோக்கி கிரே மற்றும் மேட் தலியா ரெட் என மூன்றுவிதமான நிறங்களில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஹோண்டா X-ADV மாடலில் ரக்கட் தோற்றம் கொண்ட பாடிவொர்க் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடலில் உயரமான விண்ட் ஸ்கிரீன், ஸ்டெப்-அப் சீட் உள்ளது. ADV 160 மாடலில் 156சிசி, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 16 ஹெச்.பி. பவர், 15 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், eSP தொழில்நுட்பம், ACG ஸ்டார்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவைதவிர ஸ்மார்ட் கீ, ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி, எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் இதுவரை தனது ADV 160 மாடலை இந்தியாவில் அறிவிக்கவில்லை.

    எனினும், இந்திய சந்தையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாக இருக்கும் ஹீரோ ஜூம் 160 மாலுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

    Next Story
    ×