search icon
என் மலர்tooltip icon

    பைக்

    அதிக ரேன்ஜ், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் புதிய செட்டாக் ஸ்கூட்டர் அறிமுகம்
    X

    அதிக ரேன்ஜ், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் புதிய செட்டாக் ஸ்கூட்டர் அறிமுகம்

    • மணிக்கு அதிகபட்சம் 73 கிமீ வேகத்தில் செல்லும்.
    • இதில் 3.2 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் 2024 செட்டாக் பிரீமியம் மற்றும் அர்பேன் வேரியண்ட்களை அறிமுகம் செய்திருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்து 001 மற்றும் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 463 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இரண்டு புதிய ஸ்கூட்டர்களிலும் டெக்பேக் பெயரில் அதிக அம்சங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், இதனை வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகின்றன. புதிய ஸ்கூட்டர்களில் பிரீமியம் வேரியண்ட் 5-இன்ச் அளவில் டி.எஃப்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இத்துடன் இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 73 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 3.2 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 127 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இது செட்டாக் ஸ்கூட்டரின் முந்தைய வேரியண்ட் வழங்கியதை விட அதிகம் ஆகும்.

    அதிக ரேன்ஜ் மட்டுமின்றி புதிய ஸ்கூட்டருடன் 800 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பிரீமியம் வேரியண்டை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 15.6 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும். இதுதவிர செட்டாக் மாடலின் பூட் ஸ்பேஸ் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×