search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கிரயான் என்வி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
    X
    கிரயான் என்வி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இந்தியாவில் கிரயான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

    கிரயான் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.



    டெல்லியை சேர்ந்த கிரயான் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. கிரயான் என்வி என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிநவீன வடிவமைப்பில், பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

    அதன்படி ஸ்கூட்டரின் முன்புறம் டூயல் ஹெட்லேம்ப் டிசைன், எல்.இ.டி. இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்களை கவரும் வகையில் ஸ்கூட்டரில் கூர்மையான கோடுகளும், கிரீஸ்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் உள்ள இருக்கைகள் பெரிதாக இருப்பதால், ஓட்டுபவருக்கு அதிக சவுகரியத்தை வழங்குகிறது.

    கிரயான் என்வி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    அம்சங்களை பொருத்தவரை புதிய ஸ்கூட்டரில் கீலெஸ் ஸ்டார்ட், சென்ட்ரல் லாக்கிங், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரிவர்ஸ் அசிஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜியோ-டேகிங், மொபைல் சார்ஜிங், சைடு ஸ்டான்டு சென்சார், அலாய் வீல் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

    கிரயான் என்வி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 250 வாட் BLDC மோட்டார் மற்றும் 48 வோலட் VRLA பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 60 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கிலோமீட்டர் வரை செல்லும்.

    இந்த ஸ்கூட்டரின் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. கிரயான் என்வி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இ-ஏ.பி.எஸ். வசதியுடன் வருகிறது. இத்துடன் இந்த ஸ்கூட்டர் சூப்பர் வைட், சூத்திங் புளூ மற்றும் ஃபெய்ஸ்டி ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×