search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் ஏத்தர் 450 விநியோகம் துவக்கம்
    X

    இந்தியாவில் ஏத்தர் 450 விநியோகம் துவக்கம்

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விநியோகம் செய்ய துவங்கி இருக்கிறது. #Ather



    பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஏத்தர் 450 மாடல் ஃபேம் II (FAME II) திட்டத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு ரூ.27,000 வரை மானியம் கிடைக்கும்.

    பெரும்பாலான உற்பத்தியாளர்களை போன்றே, ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் தனது வாகனங்களில் ஃபேம் II தேவைகளை பூர்த்தி செய்யும் வரை விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் முதல் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது.



    புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப ஸ்கூட்டர் அப்டேட் செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து ஏத்தர் நிறுவனம் தனது வாகனங்களின் விநியோகத்தை மீண்டும் துவங்கி இருக்கிறது. அந்த வகையில் அடுத்த சில வாரங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் ஸ்கூட்டர் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஏத்தர் 450 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1,23,230 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏத்தர் 450 ஸ்கூட்டரில் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரஷ்லெஸ் டி.சி. மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகள் மூன்று ஆண்டுகள் / வரம்பற்ற கிலோமீட்டர் வாரண்டியுடன் கிடைக்கிறது.

    ஏத்தர் 450 கொண்டிருக்கும் மோட்டார் 20.5 என்.ம். டார்க் செயல்திறன் வழங்கும். இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் எட்டும்.



    ஏத்தர் 450 மாடலில் இன்பில்ட் ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டரை பின்புறமாக பார்க் செய்யும் போது மோட்டாரை பின்புறமாக இழுக்கும். மோட்டார் பின்புறம் இழுக்கும் வேகம் மணிக்கு 5 கிலோமீட்டர் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இவற்றுடன் 7-இன்ச் கேபாசிட்டிவ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நேவிகேஷன் அசிஸ்ட், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, சார்ஜிங் பாயின்ட் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் ஓவர்-தி-ஏர் மென்பொருள் மற்றும் ஃபம்வேர் அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×