என் மலர்

  ஆட்டோமொபைல்

  இந்திய சாலைகளில் சீறும் டிரையம்ப் டைகர்
  X

  இந்திய சாலைகளில் சீறும் டிரையம்ப் டைகர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் 800 டைகர் எக்ஸ்.சி.ஏ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #Triumph  இங்கிலாந்தை சேர்ந்த பிரபல மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப், இந்தியாவில் சாகச பயணம் மேற்கொள்வோருக்காக ‘800 டைகர் எக்ஸ்.சி.ஏ.’ மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.15.16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  சாலைப் பயணம் தவிர்த்து சாகசப் பயணம் மேற்கொள்வோருக்காக கரடு, முரடான சாலைகளிலும் எளிதாக செல்லும் வகையில் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக விளங்கும் இந்த மாடல் தற்சமயம் இந்தியாவில் அறிமுகமாகிறது.

  இதில் முந்தைய மாடல்களை விட மேம்பட்ட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது 800 சி.சி. என்ஜின் திறன் கொண்டிருக்கிறது. 95 பி.எஸ். திறனுடன், ஒவ்வொரு விதமான சாலைகளுக்கேற்ப ஓட்டும் விதத்தை தேர்வு செய்யும் முறை உள்ளது. அந்த வகையில் இதில் 6 விதமான டைரிவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் சாலையின் தன்மைக்கேற்ப ஓட்டும் நிலையை தேர்வு செய்து கொள்ளலாம்.  இதில் ‘பிரெம்போ பிரேக்’ சிஸ்டம் உள்ளது. சொகுசான பயணத்தை உறுதி செய்ய இதில் உள்ள சஸ்பென்ஷன் உதவுகிறது. ஹேண்டில்பாரின் உயரத்துக்கேற்ப அமைந்துள்ள சுவிட்ச் அமைப்புகள், எல்.இ.டி. லைட், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன்புறம் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் உள்ளது. 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது.

  இது 94 பி.ஹெச்.பி. திறனை 9,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 79 நியூட்டன் மீட்டர் இழுவிசை திறனை 8,050 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது. பி.எம்.டபிள்யூ., எப் 850 ஜி.எஸ்., ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின், டுகாட்டி மல்டிஸ்டிராடா 950, கவாஸகி வெர்சிஸ் ஆகிய மாடலுக்குப் போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.
  Next Story
  ×