search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    மீண்டும் துவங்கிய டொயோட்டா ஹிலக்ஸ் பிக்கப் முன்பதிவு!
    X

    மீண்டும் துவங்கிய டொயோட்டா ஹிலக்ஸ் பிக்கப் முன்பதிவு!

    • இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் முதல் பிக்கப் டிரக் கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமானது.
    • பெரும் வரவேற்பை அடுத்து ஹிலக்ஸ் மாடலுக்கான முன்பதிவை நிறுத்துவதாக டொயோட்டா அறிவித்து இருந்தது.

    ஜப்பானை சேர்ந்த கார் உற்பத்தியாளரான டொயோட்டா தனது ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் டொயோட்டா ஹிலக்ஸ் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் டொயோட்டா ஹிலக்ஸ் கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    விலை விவரங்கள்:

    டொயோட்டா ஹிலக்ஸ் 4x4 MT ஸ்டாண்டர்டு ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம்

    டொயோட்டா ஹிலக்ஸ் 4x4 MT ஹை ரூ. 35 லட்சத்து 80 ஆயிரம்

    டொயோட்டா ஹிலக்ஸ் 4x4 AT ஹை ரூ. 36 லட்சத்து 80 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் ஒற்றை டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இதில் உள்ள 2.8 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் 201 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது. இதில் உள்ள 4x4 வசதி மூலம் ஹிலக்ஸ் பிக்கப் டிரக்-ஐ மிக கடினமான பாதைகளிலும் பயணிக்க முடியும்.

    அளவீடுகளை பொருத்தவரை டொயோட்டா ஹிலக்ஸ் 5325mm நீளம், 1855mm அகலம், 1815mm உயரம், 3085mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதில் உள்ள லோடு ஏற்றும் பகுதி மட்டும் 1500mm நீளம் ஆகும். இதில் 435 கிலோ வரையிலான எடையை கொண்டு செல்ல முடியும். ஹிலக்ஸ் மாடல் இருவித டிரைவ் மோட்கள், டயர் ஆங்கில் மாணிட்டர் மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்களை கொண்டுள்ளது.

    Next Story
    ×