search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    செகன்ட் ஹேண்ட் எலெக்ட்ரிக் வாகனம் வாங்குறீங்களா? இதையெல்லாம் மறக்க வேண்டாம்!
    X

    செகன்ட் ஹேண்ட் எலெக்ட்ரிக் வாகனம் வாங்குறீங்களா? இதையெல்லாம் மறக்க வேண்டாம்!

    • இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
    • தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக பேட்டரி பேக் பாழாகும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கணிசமான அளவுக்கு அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத திறன், எளிய பயன்பாடு மற்றும் பராமரிப்பு மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மானியம் உள்ளிட்டவை எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

    உலகம் முழுக்க செகன்ட் ஹேண்ட் எனப்படும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை விலைக்கு வாங்கி, அதனை மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இதே வழக்கம் வாகன பயன்பாட்டிற்கு அதிகம் பொருந்தும். அந்த வகையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனம் வாங்க திட்டமிடுகின்றீர்களா? இவ்வாறு செய்யும் முன் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எனினும், இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனையாகும் அளவுக்கு எலெகட்ரிக் வாகனங்கள் விற்பனையாவதில்லை. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையான விற்பனையை எலெக்ட்ரிக் வாகனங்கள் எட்டுவதற்கு மேலும் சில காலம் ஆகும்.

    எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சீராக இருந்து வருகிறது. இதே போன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் துறை மீதான விருப்பமும் அதிகரித்து வருவதால், பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை கணிசமான அளவுக்கு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் திட்டத்தை ஒத்திவைப்பது, தற்காலிகமாக ரத்து செய்வது போன்ற முடிவுகளை எடுக்கின்றனர்.

    பேட்டரி பேக் ஆயுள்:

    எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏற்படும் சிக்கல்களில் ஒன்று இது. தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக பேட்டரி பேக் பாழாகும் வாய்ப்புகள் உண்டு. சீரற்ற சார்ஜிங் பழக்கங்கள் இதனை வெகு விரைவில் ஏற்படுத்த செய்யும். பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் வாகனங்களில் என்ஜினில் ஏற்படும் விசித்திர சத்தம் கொண்டு என்ஜின் கோளாறை கண்டறிந்து விடலாம். எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை பேட்டரியை முழுமையாக தீர்ந்து போக செய்து அதன்பிறகு மீண்டும் முழு சார்ஜ் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்யும் போது பேட்டரியை சார்ஜ் செய்ய, குறிப்பிட்ட நிறுவனம் தெரிவித்ததை விட அதிக நேரம் ஆகும் பட்சத்திலோ அல்லது விரைவில் சார்ஜ் இறங்கும் பட்சத்திலோ பேட்டரி பாழாகி இருப்பதை உறுதிப்படுத்தி விடலாம். ஒருவேளை பேட்டரி பாழாகும் பட்சத்தில் அதனை எளிதில் சரி செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ முடியும்.

    தேய்மானம்:

    பிரீமியம் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விரைந்து தேய்மானம் ஆகிவிடும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டும் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரீமியம் மாடலாகவே கருதப்படுகின்றன. இதன் காரணமாகவே பயன்படுத்தப்பட்ட எலெர்க்ரிக் வாகனத்தை வாங்க விரும்புகின்றனர்.

    பராமரிப்பு:

    பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களை பராமரித்தல் மிகவும் எளிமையான காரியம் ஆகும். இதன் பவர்டிரெயினில் அசையும் பாகங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். இதன் காரணமாக பராமரிப்பு கட்டணம் பெருமளவு குறைவு ஆகும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை மாற்றுவதற்கான கட்டணம் அதிகம் ஆகும்.

    எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதால், ஏற்படும் மின் கட்டண செலவு குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும்.

    சார்ஜிங் உள்கட்டமைப்பு:

    எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் போது சார்ஜிங் உள்கட்டமைப்பு மிகவும் அத்தியாவசியமானது ஆகும். ஏத்தர் 450 போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஃபாஸ்ட் சார்ஜர்களுக்கு சப்போர்ட் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்குவோர், வீட்டில் ஃபாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்து வைப்பது அதிக பயனுள்ளதாக இருக்கும்.

    பயன்பாடு மற்றும் பராமரிப்பு கட்டணம்:

    எலெக்ட்ரிக் வாகனங்களை பராமரிப்பது மிகவும் எளிய காரியம் ஆகும். இதற்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் மிகவும் குறைவு ஆகும். தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் கட்டணம் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உபயோகிப்பாளர்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பம்:

    எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள தொழில்நுட்பம் முன்பு இருந்ததை விட பெருமளவு அதிநவீனமாக மாறிவிட்டன. இவற்றில் எளிதில் மென்பொருள் அப்டேட் வழங்கும் நிலை வந்துவிட்டது. சமீபத்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பழைய மாடலை விட பல விஷயங்களில் மேம்பட்டவைகளாகவே இருக்கின்றன.

    Next Story
    ×