என் மலர்

  ஆட்டோமொபைல்

  இந்தியாவில் ஏத்தர் 450 வாரண்டி நீட்டிப்பு
  X

  இந்தியாவில் ஏத்தர் 450 வாரண்டி நீட்டிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வாரண்டியை நீட்டித்து வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் ஃபேம் II சான்று பெற்ற ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வாரண்டியை இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  ஃபேம் I சான்றளிக்கப்பட்ட ஏத்தர் 450 வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பதில் இனி மூன்று ஆண்டுகளுக்கு வாரண்டி நீட்டிக்கப்படும். இந்த நடவடிக்கையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்க இருக்கிறோம். ஃபேம் 2 சான்று பெற்ற அனைத்து ஏத்தர் 450எஸ் ஸ்கூட்டர்களும் மூன்று ஆண்டுகள் வாரண்டியுடன் கிடைக்கும். இவை மேக் இன் இந்தியா பேட்டரி பேக் உடன் வழங்கப்படுகிறது. என ஏத்தர் எனர்ஜி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  ஏத்தர் 450 மாடல் ஃபேம் II (FAME II) திட்டத்தில் கிடைப்பதால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ.27,000 வரை மானியம் கிடைக்கும். இதன் மூலம் ஏத்தர் 450 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1,23,230 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏத்தர் 450 ஸ்கூட்டரில் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரஷ்லெஸ் டி.சி. மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

  ஏத்தர் 450 கொண்டிருக்கும் மோட்டார் 20.5 என்.ம். டார்க் செயல்திறன் வழங்கும். இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் எட்டும்.

  இவற்றுடன் 7-இன்ச் கேபாசிட்டிவ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நேவிகேஷன் அசிஸ்ட், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, சார்ஜிங் பாயின்ட் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் ஓவர்-தி-ஏர் மென்பொருள் மற்றும் ஃபம்வேர் அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×