என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 25 டிசம்பர் 2024
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு பிற இனத்தாரின் உதவி கிடைக்கும். நேற்றைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன் - 24 டிசம்பர் 2024
வாழ்க்கைத் தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 23 டிசம்பர் 2024
வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். வரவை விட செலவு கூடும். பெற்றோர் நலனில் அக்கரை தேவை. கடிதங்கள் சுபச்செய்தியைக் கொண்டு வந்து சேர்க்கும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 22 டிசம்பர் 2024
பொன்னான நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாங்கப் போட்ட திட்டங்கள் கைகூடலாம்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024
பொதுவாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். நிதிநிலை உயரும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024
தீட்டிய திட்டங்கள் திசைமாறிச் செல்லும் நாள். கூட்டாளிகள் விலகலாம். கூடுதல் முயற்சி செய்தாலும் காரியங்கள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். வாகன பழுதுகளால் வாட்டம் கொள்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024
விரயத்திற்கேற்ற லாபம் வந்து சேரும் நாள். வீடு, இடம் வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். விவாகத்தில் ஏற்பட்ட விவகாரங்கள் அகலும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024
பகை நட்பாகும் நாள். பணவரவு திருப்தி தரும். உள்ளத்திலொன்றும், உதட்டில் ஒன்றும் வைத்துப் பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். தொழில் சீராக நடைபெறும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024
சுபச்செய்திகள் வீட்டை முற்றுகையிடும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். முன்னேற்றம் கிடைக்க நண்பர்கள் வழிகாட்டுவர். உத்யோகம் சம்மந்தமாகக் கடல் தாண்டி வரும் தகவல் மகிழ்ச்சி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்திலிருந்து வந்து சேரும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024
நெருக்கடி நிலை அகலும் நாள். பொருள்வரவு திருப்தி தரும். காலை நேரத்தில் காதினிக்கும் செய்தியொன்று வந்து சேரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.






