என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 14 ஆகஸ்ட் 2024
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பிறர் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். எதிர்பார்த்த தகவல் அலைபேசி மூலம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. வரன்கள் வாயில் தேடிவரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2024
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். கவுரவம் அந்தஸ்து உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2024
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். வியாபாரப் போட்டிகள் அகலும். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 11 ஆகஸ்ட் 2024
விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள் தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்தும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 10 ஆகஸ்ட் 2024
விரயங்கள் கூடும் நாள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். அரைகுறையாக நின்ற பணியை தொடருவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 9 ஆகஸ்ட் 2024
நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மறதி அதிகரிக்கும். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயம் கிடைக்கும். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024
திறமைகள் பளிச்சிடும் நாள். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சனைகள் அகலும். வரவேண்டிய பணத்தை வசூலிக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024
பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வெளியூர் பயணத்தால் அலைச்சல்கள் உண்டு. கையிருப்புகள் கரையும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மாற்றங்கள் செய்ய முன்வருவீர்கள். இல்லத்தினர்களுடன் விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 4 ஆகஸ்ட் 2024
விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். உடன்பிறப்புகள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சனைகள் உருவாகும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 3 ஆகஸ்ட் 2024
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறியவேண்டிய நாள். தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.






