என் மலர்tooltip icon

    விருச்சகம் - வார பலன்கள்

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    19.9.2022 முதல் 25.9.2022 வரை

    அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறிடும் இன்பமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் பங்குதாரருடன் இணைந்து தொழிலுக்கு சொந்தமான இடம் வாங்க ஏற்ற நேரம். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். 2, 5-ம் அதிபதி குரு வக்ரம் பெற்றதால் வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும்.

    சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் மகன், மகள் வீட்டிற்குச் சென்றுவரலாம்.

    நோய் பாதிப்புகள் அகலும். எதிரிகள் தொல்லை குறையும். விருச்சிக ராசி வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை மன நிறைவு தரும். பாகப்பிரிவினை சுமூகமாகும். பெண்கள் தங்க நகைகளை அத்தியாவசியமாக இருந்தால் மட்டும் மாற்றவும்.

    20.9.2022 அன்று மதியம் 2.23 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமற்ற அவசர முடிவுகளைத் தவிர்ப்பது அவசியம். அமாவாசையன்று சிவப்பு துவரை தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    12.9.2022 முதல் 18.9.2022 வரை

    எதிர்காலத் தேவைக்கான திட்டமிடுதல் சாதகமாகும் வாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் புதனுடன் இணைவதால் ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

    இந்த கிரகச்சேர்க்கைக்கு குரு பார்வை இருப்பதால் தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றமும் லாபமும் மகிழ்சியைத் தரும். தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும்.வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக உயர்வு உண்டு. நோய், நொடிகள் நிவர்த்தியாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.சிலருக்கு பல் தொந்தரவு ஏற்படலாம். சிலருக்கு மறு திருமணம் நடக்கும். பெண்கள் கணவரிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும்.

    18.9.2022 மதியம் 1.43 க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பேச்சில் நிதானம் தேவை. சுலபமாக முடிக்க வேண்டிய செயல்களில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். முக்கியமான நிர்வாகப் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது.வெள்ளிக்கிழமை துர்க்கையை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    5.8.2022 முதல் 11.9.2022 வரை

    சுமாரான வாரம். 2, 5-ம் அதிபதி குரு 5-ல் வக்ரமாக இருப்பதால் சிலர் குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்ய ஆர்வம் உண்டாகும். தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றில் முன்னேற்றமான வகையில் நல்ல பலன்கள் நடக்கும். உத்தியோகஸ்தர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பார்கள்.

    வேலைக்காக அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சிலர் பூர்வீகத்தில் சொந்த வீடு வாங்குவார்கள் அல்லது கட்டுவார்கள். விவசாயிகளுக்கு வயல்கள் வாங்கும் யோகம் உள்ளது. பங்கு சந்தை முதலீட்டை தவிர்ப்பது நல்லது. நண்பர்களை நம்பி ஏமாற்றம் அடையலாம் என்பதால்ஜாமீன், பண விசயத்தில் எச்சரிக்கை தேவை. கணவன்-மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும். தடைபட்ட திருமணங்கள் தாமாக நடக்கும்.

    மனைவி வழிச் சொத்தில்மாறுபட்ட கருத்து கொண்ட மாமனார் உங்களுடன் ஒத்துப் போவார்.

    காஞ்சி காமாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    29.8.2022 முதல் 4.9.2022 வரை

    மனதாலும் உடலாலும் பட்ட வேதனைகள் தீரும் காலம். வெகு சில நாட்களில் நிம்மதி இரட்டிப்பாகும். சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். வேற்று மதத்தினர், இனத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் நட்பு, கூட்டணி மூலம் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். போதைக்கு அடிமையான சிலர் மருத்துவத்தால் குணமடைவார்கள். அரசு உயர் அதிகாரிகளின் தனித் திறமை மிளிரும்.

    பங்குச் சந்தை முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். தடைபட்ட வாடகை வருமானம் கிடைக்கும்.அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். அறியாமல் வாங்கிய வில்லங்க சொத்திற்கு உரிய பட்டா மற்றும் முறையான ஆவணங்கள் கிடைக்கும். மாணவர்க ளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

    பருவப் பெண்களின் மனதிற்கு பிடித்த மணாளனே மாலையிடுவார். வாழ்க்கை இழந்த ஆண், பெண்களுக்கு மறுமணம் நடக்கும். குழந்தை பாக்கியத்தில் காலதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் தொழில் அல்லது உயர்கல்விக்கு இடம் பெயர நேரும் அரசின் உதவிகள், கடன்கள் கிடைக்கும். திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    22.8.2022 முதல் 28.8.2022 வரை

    அமோகமான பலன்களை பெறக்கூடிய வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கையுடன் தர்ம சிந்தனையும் அதிகரிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஏற்றம் உண்டு. முதலீடு செய்த பணத்தினால் வரவு இரட்டிப்பாகும்.

    உங்களின் அக்கறையற்ற போக்கால் கவலைப்பட்ட பெற்றோர்கள் வளர்ச்சி கண்டு மனம் மகிழுவார்கள். லாபாதிபதி புதனால் அரசு வகை பாராட்டுகள் பரிசுகள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் ஆதாயங்கள் அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

    24.8.2022 காலை 6.56 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. எடுக்கும் முடிவுகளில் பின்வாங்காமல் எதிர்த்து போராடும் பிடிவாத குணம் இருப்பதே சில நேரங்களில் பேராபத்தை தருகிறது என்பதால் சிந்தித்து செயல்படவும். பிறரை நம்பி செயல்படாமல் இருப்பது நல்லது. கால பைரவரை தீபம் ஏற்றி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    15.8.2022 முதல் 21.8.2022 வரை

    அனைத்து காரியங்களும் தடையில்லாமல் நடக்கும் வாரம்.2,5-ம் அதிபதி குரு 5-ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுவதால் வாக்கு சாதுர்யத்தால் வியாபாரத்திற்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்‌. நடக்குமா என்ற காரியத்தை தன்னம்பிக்கையோடு நடத்தி காட்டுவீர்கள். வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தி அவமானத்தை துடைப்பீர்கள். வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்புகளைவேரோடு பிடுங்கி எறிவீர்கள். எதிரிகள் ஒதுங்குவார்கள்.

    தொழிலுக்காக விண்ணப்பம் செய்த லைசென்ஸ் கிடைக்கும். 7-ம் அதிபதி சுக்ரன் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணை தொழிலுக்காக கடல்கடந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது.எதிர்பாராத இடங்களில் இருந்து பிள்ளைகளின் திருமணத்திற்கு தேவையான பண வரவு கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் இப்போது நல்ல முன்னேற்றம் தரும்.

    மாணவர்களுக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். தள்ளிப் போன திருமண காரியங்கள் கூடி வரும்.பெண்கள் குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லாதீர்கள். தினமும் விநாயகர் அகவல் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    8.8.2022 முதல் 14.8.2022 வரை

    எண்ணங்கள், திட்டங்கள், கனவுகள் நிறைவேறும். ராசி அதிபதி செவ்வாய் ராகுவுடன் இணைந்ததால் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட கடன் நெருக்கடி, நோய் தாக்கம், எதிரி தொல்லைகள் குறையும். ராசிக்கு குருப் பார்வை மற்றும் லாப அதிபதி புதன் 10-ல் நிற்பதால்தொழில் மற்றும் உத்தி யோகத்தில் வைராக்கியத்துடனும், விடா முயற்சியுடனும் செயல்பட்டு சாதனை புரிவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு இந்த வாரம் வேலை கிடைத்து விடும்.

    சோம்பேறியாக ஊர் சுற்றித் திரிந்தவர்களுக்கு கூட உழைக்கும் எண்ணம் தோன்றும். அரசின் ஒப்பந்ததாரர்கள், குத்தகை தாரர்கள் அதிக வருமானம் பெறுவார்கள். வீடு, மனையில் புதிய முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பாளர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு மறுமணத்திற்கு வரன் அமையும்.

    சிலருக்கு மருமகள், மருமகன் வரும் நேரமிது. கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் ஓடி வரும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் கூடும். பெண்கள் அழகாகவும் இளமையாகவும் இருப்பார்கள். சகோதர சகோதரிகளுக்கு தேவை யான உதவியைச் செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    1.8.2022 முதல் 7.8.2022 வரை

    அமைதியான வாரம். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் வசீகரமான தோற்றப் பொலிவு உண்டாகும். உங்களின் முன்னேற்றம் ஆச்சரியப்படும் விதத்தில் இருக்கும். உடலில் இருந்த பிணிகள் ஓடி ஒளியும். தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும். இழுபறியாக கிடந்த அனைத்து விசயங்களும் சாதகமாகும்.

    சொல்வாக்கு, செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். உணவுப் பொருள் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களுக்கும் ஏற்ற காலம். சிலருக்கு குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்யும் ஆர்வம் அதிகமாகும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் ஆடம்பரச் செலவு செய்யும் வகையில் வாழ்வாதாரம் உயரும்.9ல் உள்ள சூரியனால் குரு தீட்சை, ஆன்மீகப் பெரியோர்களின் ஆசி கிட்டும்.

    தந்தையின் வாரிசு அரசு வழி வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு கைகூடும். தாய்மை அடைந்த பெண்களுக்கு இந்த வாரம் குழந்தை பிறக்கும். பணி நிரந்தரம் இல்லாத பெண்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வரும். மருத்துவ சிகிச்சை வெற்றி தரும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். செவ்வாய்கிழமை சிவ தலங்களுக்கு சென்று வருவது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசி பலன்கள்

    25.7.2022 முதல் 31.7.2022 வரை

    சாதாரணமான வாரம். கூட்டுத் தொழில் மீது உருவான வழக்குகள் முடிவுக்கு வரும். சிலருக்கு பகுதி நேர வேலை கிடைக்கும். சம்பளம் குறைவாகவும் வேலை அதிகமாகவும் இருக்கும். பங்குச் சந்தை ஆர்வலர்கள் நிதானித்து செயல்படவும். ஞாபக மறதி உண்டாகும். அரசியல்வாதிகளின் எண்ணங்கள் ஈடேறும்.

    கமிஷன் அடிப்படையான தொழில் செய்பவர்கள் காட்டில் அடை மழை தான். தொழில் விருத்திக்காகசிலர் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கக் கூடும். மறுதிருமண முயற்சி தடையின்றி நடக்கும் சிலருக்கு விரும்பிய பெண்ணை நிச்சயம் செய்யும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் கவனத்தை செலுத்துவது நல்லது.

    சிலர் பிள்ளைகளின் கல்விக்காக இடம் பெயர நேரும். ராசி அதிபதி செவ்வாய் 6-ல் ஆட்சி பலம் பெற்று ராகுவுடன் இணைவதால் நம்பியவர்களே துரோகம் செய்துஎதிரிகளாவார்கள். 25.7.2022 பகல் 11. 32 மணி முதல் 28.7.2022 அன்று காலை 12.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டு விலகும். பிரதோசத்தன்று சிவனுக்குதிருமஞ்சனம் அபிசேகம் செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    18-7-2022 முதல் 24-7-2022 வரை

    கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாயே6ம் அதிபதியாகி ராகுவுடன் இணைவதால்கடன் பிரச்சினை உண்டாகலாம் அல்லது சிலருக்கு விண்ணப்பித்த கடன் கிடைக்கும். பண விசயத்தில் கவனம் தேவை.

    முதலீட்டாளர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. 10-ம் அதிபதி சூரியன் 9-ல் அஷ்டமாதிபதி புதனுடன் இணைந்ததால் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலையை விட்டுவிடும் எண்ணம் தோன்றும்.

    பூர்வீக சொத்து சம்பந்தமாக உங்களுக்கும் சகோதரருக்கும் கைகலப்பு ஏற்பட வாய்ப்புண்டு. 3-ல் சனி இருப்பதால் சித்தப்பா உங்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார்.வாழ்க்கைத் துணை, வியாபார பங்குதாரரிடம் அனுசரித்து செல்ல வேண்டிய காலம்.சில சங்கடங்கள் நிலவினாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனியாக மறையும்.

    எந்த காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன் உண்டாகும். முருகன் கோவிலில் உல வாரப் பணியில் ஈடுபடவும். வயது முதிர்ந்தவர்களுக்கு உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    11.7.2022 முதல் 17.7.2022 வரை

    தர்மசிந்தனைகள் மேலோங்கும். 2,5-ம்அதிபதி குருவால் உங்கள் வாக்கு நிறைவேறும்.ஆன்லைன், பங்கு சந்தை வர்த்தகங்கள் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும்.சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நடக்கும்.

    ராசி, 6-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று ராகுவுடன் சேர்க்கை பெற்றதால் வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். சொத்து தொடர்பாக சகோதர, சகோதரிகளுடன் மன பேதம்ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளது. ஆனால் நீங்கள் எதார்த்தமாக விட்டுக் கொடுப்பீர்கள். சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் உண்டாகும்.

    எவர் தடுத்தாலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். பெற்றோர்களின் நல் ஆசிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். அடமான நகைகளைகள் மீளும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. பெண்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். விவசாயிகள் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரும். மொத்தத்தில் சங்கடங்கள் விலகி சாதகமான முன்னேற்றம் ஏற்படும்.செவ்வாய் கிழமை முருகனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசி பலன்கள்

    4-7-2022 முதல் 10-7-2022 வரை

    மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய வாரம். 7ல் ஆட்சி பலம் பெற்ற சுக்ரன் தம்பதிகளிடையே நல்ல புரிதலை ஏற்படுத்தும். திருமணத்தடைகள் அகலும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்தை வாடகை்கு விட்டு வருமானம் சம்பாதிப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

    உற்றார், உறவினர்கள் நண்பர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.நல்ல வசதியான வாடகை வீட்டிற்கு இடம் பெயரும் வாய்ப்பு உள்ளது. 1,6-ம் அதிபதி செவ்வாய்6-ல் ஆட்சி பலம் பெற்று ராகுவுடன் சேர்க்கை பெறுவதால் எந்தச் செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல்ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

    அலைச்சல் மிகுதியாகும்.வேலைப் பளு அதிகமாகும். முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு மிகும். பங்குச் சந்தை முதலீடுகள்நிலை தடுமாற வைக்கும். அரசு அங்கீகாரமற்றவங்கிகளில்முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும்.

    ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் குருவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். ஆனாலும் கவனம் தேவை. உத்தியோக ரீதியான மறைமுக எதிர்ப்புகள் அகல தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×