என் மலர்
விருச்சகம் - வார பலன்கள்
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
19.12.2022 முதல் 25.12.2022 வரை
பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் மற்றும் 2 , 5-ம் அதிபதி குருவும் ராசியைப் பார்ப்பதால் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதில் செய்ய நினைத்த காரியங்களை மறு நிமிடமே செய்து முடிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.அங்காளி, பங்காளிகள் மற்றும் குடும்ப உறவுகள் இணைந்து குடும்ப விழா கொண்டாடி மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனையும் லாபமும் படு ஜோராக இருக்கும்.
வேலைக்கான நேர்காணலில் வெற்றி உறுதி. வாடகை கட்டிடத்தில் இருந்து தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றுவீர்கள். செலவு குறையும் சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். நீண்ட நாட்களாக தாமதித்த காரியங்கள் துரிதமாக நடைபெறும். தாய், தந்தையின் ஆதரவு முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு தரும். மங்களகரமான சுபகாரியங்கள் நடக்கும். அமாவாசையன்று வயோதிகர்களின் தேவையறிந்து உதவவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
12.12.2022 முதல் 18.12.2022 வரை
சுமாரான வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ரம் பெற்று ராசிக்கு ஏழாம் இடத்தில் நின்று தன் வீட்டை, தானே பார்ப்பதால் நன்மையும் தீமையும் கலந்தே நடக்கும். அவரே ஆறாம் அதிபதியாக இருப்பதால் நோய், எதிரி, கடனால் துன்பம் உண்டாகும். 7,12-ம் அதிபதி சுக்ரன் 8, 11-ம் அதிபதி புதனுடன் குடும்ப ஸ்தானத்தில் சேர்வதால் வாக்கால், வாக்கு வாதத்தால் குடும்பத்தில் நிம்மதி குறையும். சில தம்பதிகள் மத்தியஸ்தர்களிடம் பேசி பிரிந்து கொள்வார்கள்.
திருமணப் பேச்சு வார்த்தைகள் இழுபறியாகும்.மறுமண முயற்சியில் வெற்றி உண்டு. 2, 5-ம் அதிபதி குரு ஆட்சி பலம் பெற்று ராசியைப் பார்ப்பதால் சிலருக்கு தலைக்கு மேல் வந்த பிரச்சினைகள் தலைப்பாகையோடு சென்று விடும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை முடிவுக்கு வரும். அரசு காரியத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார பற்றாக்குறை விலகும். செலவிற்கேற்ற வரவும் வரும்.
கொடுக்கல், வாங்கல் சீராகும். ஆணவத்தாலோ, அவசரத்தாலோ எடுக்கும் முடிவு கள் தொல்லை தரும் என்பதால் கவனம் தேவை.செவ்வாய் கிழமை செவ்வரளி சாற்றி முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
5.12.2022 முதல் 11.12.2022 வரை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும் வாரம். ராசியில் சஞ்சரிக்கும் பத்தாம் அதிபதி சூரியனை ராசி அதிபதி செவ்வாய் பார்ப்பதால் வியாபாரம் நல்ல முறையில் நடக்கும்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, சொல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள்.
உங்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த உயரதிகாரியின் மனநிலை மாறி ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். 6 நிமிட ராகுவால் வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் வந்து போகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நவ கிரகங்களின் சஞ்சாரம் சற்று சுமாராக இருந்தாலும் குருபகவானின் பார்வை சாதகமாக இருப்பதால் பிற கிரகங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
9.12.2022 அன்று 1.43 காலை முதல் 11.12.2022 பகல் 1.51 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நம்பியவர்கள் தக்க சமயத்தில் கை கொடுக்க மாட்டார்கள். பணியிடங்களில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வது வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
28.11.2022 முதல் 4.12.2022 வரை
சூப்பரான வாரம். ராசியில் சூரியன், புதன், சுக்ரன் சேர்க்கை செவ்வாய் மற்றும் குருவின் பார்வையில் இருப்பதால் தோரணையாலும் சாமர்த்தியத்தினாலும் திட்டம் தீட்டி நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள்.சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும்.
நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்சம் கொஞ்சமாக வசூலாகும். பங்குதா ரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள்.
கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்கள் சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். பஞ்சமுக தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
21.11.2022 முதல் 27.11.2022 வரை
எண்ணியது ஈடேறும் வாரம். 2,5-ம் அதிபதி குரு வக்ர நிவர்த்தி பெறுவதால் வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்களை சீராக்கி நிம்மதி அடைவீர்கள்.
பொருளாதார ஏற்றத் தாழ்வு சமனாகி வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும்.சொல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள்.விலகியகுடும்ப உறவுகள் நட்பு பாராட்டுவார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும்.தொலைந்தகைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கஏற்ற காலம். சிலருக்கு மறு விவாகம் ஏற்படும். திருமண வாய்ப்பு கூடிவரும்.
கணவன் மனைவி ஒற்றுமை வலுப்பெறும். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சக ஊழியர்களுடன் நிலவிய பிணக்குகள் மறையும். தொழில்,வியாபாரத்தில் நிலவிய போட்டி, பொறமைகளை சமாளிப்பீர்கள். விவசாயிகள் ஏற்றம் பெறுவார்கள். பழநி முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
14.11.2022 முதல் 20.11.2022 வரை
தடைபட்ட காரியங்கள் துரிதமாகும் வாரம்.ராசியை செவ்வாய் பார்ப்பதால் தைரியசாலியாக இருப்பீர்கள். பயம் என்பதே இருக்காது. கடுமையாக உழைப்பீர்கள். பல சிக்கல்கள், சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். கடந்த கால கடன்களைத் தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.
ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். எனவே தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது. பூர்வீகச் சொத்தில் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரரால் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவிற்கு வரும். தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப்பீர்கள்.
குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் சீராகும். 7-ம் அதிபதி சுக்ரனை ராசி அதிபதி செவ்வாய் பார்ப்பதால் விவாகரத்து வரைச் சென்ற வழக்குகள் சுமூகமாகும். சுய ஜாதக ரீதியான திருமணத் தடை அகலும். விரய அதிபதி சுக்ரன் ராசியில் இருப்பதால் சிலர் கை இருப்பை செலவழித்து விட்டு கடன் வாங்க நேரிடலாம். மறுதிருமணத்திற்கு நல்ல வரன் அமையும். கந்தகுரு கவசம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிப்பலன்
7.11.2022 முதல் 13.11.2022 வரை
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். 5-ம் அதிபதி குரு வக்ர நிவர்த்தி பெறும் போது பழைய முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். பணம் வரும் போது சேமித்து தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய நிலம் தொடர்பான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தந்தை அல்லது தந்தை வழி உறவுகளால் இழப்பு, நஷ்டங்கள் அல்லது பொருட்சேதம் ஏற்படலாம். ஆனால் 3மிட சனிபகவான் எதையும் சமாளிக்கும் தைரியத்தையும் தெம்பையும் வழங்குவார். ராசிக்கு ஆறாம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சந்திர கிரகணம் தாக்கம் ஏற்பட இருக்கிறது.
அதீத வேலைப்பளுவினால் சோர்வு, உடல் ரீதியான சில பாதிப்புகள் ஏற்படலாம். அதிக கடன் இருப்பவர்கள் கடனில் ஒரு பகுதியை அடைக்க விரைவில் கடன் தொல்லை தீரும்.11.11.2022 மாலை 6.17 முதல் 14.11.2022 காலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையாட்களால் வீண் விரயம் உண்டாகும். மகான்களை ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிப்பலன்
31.10.2022 முதல் 06.11.2022 வரை
சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம்.ராசிக்கு 12-ல் தொழில் ஸ்தான அதிபதி சூரியன் லாப அதிபதி புதன் மற்றும் விரய அதிபதி சுக்ரனுடன் சேர்க்கை பெறுவதால் தொழில் சிறப்பாக நடந்தாலும் நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும். குரு பார்வை லாபத்தை மிகைப்படுத்தினாலும் பொருளாதார பற்றாக்குறை மிகுதியாகவே இருக்கும். அவசியம், அநாவசியம் அறிந்து செயல்படுவது உத்தமம். தொழில் சார்ந்த விசயங்களில் அரசின் சட்ட திட்டங்களை கடைபிடிப்பது நல்லது. சிலர் புதிய வேலைக்கு
மாறலாம். 5-ம் அதிபதி குரு வக்ரமாக இருப்பதால் தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை இழுபறியாகும். பங்குச் சந்தை ஆர்வம் அதிகமாகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட முயற்சிப்பீர்கள். ராசி அதிபதி செவ்வாய் ராசிக்கு 8-ல் வக்ரம் பெறுவதால் தன்னம்பிக்கை குறையும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்த இயலாது. முக்கிய பணிகளில் தடை தாமதம் ஏற்படலாம். கோட்சார ரீதியான செவ்வாய் தோஷத்தால் பெண்களுக்கு திருமண வாய்ப்பு தடைபடலாம். சிலர் பிள்ளைகளின் நலனுக்காக கடன் வாங்கலாம். பிரம்மாவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
மிக மிக சாதகமான வாரம். பூர்வ புண்ணிய அதிபதி குருவின் பார்வை ராசியின் மீது விழுவதால் ராஜயோகம் உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. பாராமுகமாக இருந்த உறவுகள் சுப நிகழ்வில் மீண்டும் இணைந்து அன்பு பொழி வார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
தாய் மாமன் வழி ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்சியை தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும்.திரு மணம் கை கூடும். அண்டை, அயலாருடன் நல்லி ணக்கம் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும்.
எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் மனதை மகிழ்விக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கும். தொழில், வியா பாரத்தில் முன் நின்று போட்டிகளை சமா ளிப்பீர்கள். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் புதிய தொழில் தொடங்கலாம். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு மாமியார் நாத்த னாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். ஆரோக்கியம் சீராகும். கிரகணத் தன்று சிவப்பு துவரை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
மிக மிக சாதகமான வாரம். பூர்வ புண்ணிய அதிபதி குருவின் பார்வை ராசியின் மீது விழுவதால் ராஜயோகம் உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. பாராமுகமாக இருந்த உறவுகள் சுப நிகழ்வில் மீண்டும் இணைந்து அன்பு பொழிவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். தாய் மாமன் வழி ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்சியை தரும்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும்.திருமணம் கைகூடும். அண்டை, அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் மனதை மகிழ்விக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன் நின்று போட்டிகளை சமாளிப்பீர்கள். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் புதிய தொழில் தொடங்கலாம். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். ஆரோக்கியம் சீராகும். கிரகணத் தன்று சிவப்பு துவரை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிபலன்
17.10.2022 முதல் 23.10.2022 வரை
கவனமாக செயல்பட வேண்டிய வாரம். ராசி மற்றும் ஆறாம் அதிபதி செவ்வாய் எட்டில் மறைவு. தொழில் ஸ்தான அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் விரய அதிபதி சுக்ரனுடன் சேர்க்கை என மறைவு ஸ்தானங்கள் வலிமையாக இயங்குகிறது. கூட்டுக் குடும்பம் அல்லது கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் ஏற்படும். அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும் நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் யாரிடமும் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. போட்டி பந்தயங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும்.
சிலர் பூமியை விற்று கடன் அடைக்கலாம். மாமனார் மற்றும் மைத்துனர்கள் வழியில் மனக்கசப்புகள் ஏற்படலாம். 17.10.2022 இரவு 10.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இனம்புரியாத கவலை குழப்பத்தை உண்டாக்கலாம். நவகிரகங்களில் செவ்வாயை வழி படலாம்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
10.10.2022 முதல் 16.10.2022 வரை
நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் லட்சியத்தையும், கொள்கையையும் விடாது பின்பற்றுவீர்கள். தொட்டது துலங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில் துறையில் சில புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற நேரம்.கமிஷன் அடிப்படையான தொழில், தரகு, பங்குச் சந்தை, ஜோதிடம் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.
பல வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்பனை ஆகும். 3-ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் தகவல் தொடர்பு சாதனங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றை முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது. ஐந்தாம் அதிபதி குரு ஐந்தில் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் சிலர் ரிலாக்சாக மன மாற்றத்திற்காக தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று உற்றார் உறவுகளைக் கண்டு வரலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
15.10.2022 காலை 10.01 மணிக்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்பதால் நடந்ததை நினைத்து மனம் வருந்துவார்கள் அல்லது நடக்காததை நடப்பது போல் நினைத்து பயப்படுவார்கள். பைரவர் வழிபாடு சிறப்பு.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






