என் மலர்
விருச்சகம் - வார பலன்கள்
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
6.3.2023 முதல் 12.3.2023 வரை
கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் வாரம். சனியின் பார்வை ராசி மற்றும் ஆறாமிடத்திற்கு இருப்பதால் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பஞ்சம ஸ்தான குரு மற்றும் சுக்கிரனால் வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.
சிறு சில்லரை வணிகம், கூட்டுத் தொழில் செய்பவர்கள், தங்கம் மற்றும் மஞ்சள் வியாபாரிகளுக்கு, வண்டி, வாகன டீலர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும். ராசிக்கு சனி, செவ்வாய் பார்வை இருப்பதால் பூர்வீகச் சொத்தால் உடன் பிறந்தவர்களுடன் மனக்குழப்பம் அதிகரிக்கும். அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள்.
கணவன் மனைவிக்கிடையே நிலவிய இறுக்கமான மனநிலை நீங்கும். மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வீர்கள்.எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் நீங்கும். குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் தோன்றினாலும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. மாசி மகத்தன்று பஞ்சமுக தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
27.2.2023 முதல் 5.3.2023 வரை
பண பிரச்சினைகள் நீங்கும் வாரம். 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருச் சுக்ரன் சேர்க்கை ஏற்பட்டு இருப்பதால் அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும். சேமிப்புகள் உயரும். காரியத் தடை அகலும். முயற்சிகளுக்கான பலன்களை உடனடியாக காண முடியும்.
நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டு வருமானம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கிய குறைபாடு அகலும். வாழ்க்கைத் துணைக்கு கவுரவப் பதவிகள், அரசு உத்தியோகம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமண முயற்சி வெற்றி தரும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு மறையும்.
28.2.2023 இரவு 8.32 முதல் 3.3.2023 காலை 8.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய மில்லாத பணப்பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். நிலைமையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். தினமும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் படித்து வர அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
20.2.2023 முதல் 26.2.2023 வரை
காரியசித்தி கிட்டும் வாரம். 2, 5-ம் அதிபதி குரு ஆட்சி பலம் பெற்று இருப்பதால் இதுவரை பொருளாதார சிக்கல்களில் இருந்த பின்னடைவு கள் நீங்கி நன்மைகள் ஆரம்பிக்கும். வாக்கால் தொழில் நடத்தும் வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், விற்பனை பிரதிநிதிகள், ஜோதிடர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும்.பூர்வீகச் சொத்து தொடர் பாக உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக் கவலை மறையும். கேட்ட இடத்தில் கேட்டவுடன் கடன் கிடைக்கும்.
அப்பார்ட்மெண்ட் வீடு அல்லது பிளாட் வாங்க ஏற்ற காலம். 8,11-ம் அதிபதி புதன் 3ல் நிற்பதால் மறைமுக பணப் பரி மாற்றத்தில் கவனம் தேவை. 11-ம் இடத்திற்கு குரு, சுக்ரன் பார்வை இருப்பதால் சிலருக்கு மரு மகன், மருமகள் வரும் வாய்ப்புள்ளது. சிறு தொழில் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு தொழிலில் முன்னேற்றமும் உண்டாகும்.
அண்டை அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். 1,6-ம் அதிபதி செவ்வாய் 7-ல் இருப்பதால் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சில மாணவர்கள் கல்விக்காக இடம்பெயர நேரும். அமாவாசையன்று ஆதரவற்ற குழந்தை களின் தேவையறிந்து உதவவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
13.2.2023 முதல் 19.2.2023 வரை
விருச்சிகத்திற்கு பொற்காலம் ஆரம்பமாகிவிட்டது. ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். 2, 5-ம் அதிபதி குரு ஆட்சி பெற்று 7,12-ம் அதிபதி சுக்ரனுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம். 3,4-ம் அதிபதி சனி 4-ல் ஆட்சி. 10-ம் அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். பல விதமான கிரகங்கள் விருச்சிகத்திற்கு மிக மிக சாதகமாக உள்ளது. எந்த நன்மையை எழுதுவது, எந்த நன்மையை விடுவது என்றே தெரியவில்லை.
எனவே அர்த்தாஷ்டமச் சனியை நினைத்து பயப்படாமல் உங்கள் கடமையில் கவனமாக இருந்தால் நவ கிரகங்களும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். பங்குச் சந்தை ஆதாயம் பெருகும்.காதல் திருமண முயற்சி வெற்றி தரும். பல வருடங்களாக தடைபட்டதிருமணம், பேசி நிச்சயித்து நின்று போனதிருமணங்களும் நன்றாக நடைபெறும்.
பெண்களுக்கு புகுந்த வீட்டில் நல்ல பெயர் கிடைக்கும். சிவராத்திரியன்று விரத மிருந்து சிவனை வழிபட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
பொறுமையை கடைபிடிக்க வேண்டிய வாரம். 2, 5-ம் அதிபதி குரு ராசியை பார்ப்பதால் இதுவரை பாராமுகமாக இருந்த உறவுகளின் வருகை குடும்பத்தில் கலகலப்பை அதிகப்படுத்தும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். தொழில் சார்ந்த எண்ணம் ஈடேறும். வரக்கூடிய இடர்பாடுகளை உணரும் உள்ளுணர்வு அதிகரிக்கும். பூர்வீகத் தொழிலால் கவுரவம் உயரும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள்.
ஒன்பதாமிடத்தை சூரியன் பார்ப்பதால் தாய், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். ராசியை செவ்வாய், சனி பார்ப்பதால் தேவையற்ற கோபமும் முயற்சியில் தடை, தாமதமும் உண்டாகும். உங்கள் செயல்பாடுகளில் மந்த நிலையும் மெத்தன போக்கும் ஏற்படும். காது நரம்பு தொடர்பான சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். கோபத்தை குறைத்து நம்பிக்கையோடு முயற்சித்தால் காரிய சித்தியுடன் நிம்மதியும் நிலைக்கும். வியாழக்கி ழமை வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ரம் பெற்றதால் குடும்ப பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான நிலை நிலவும். ஆனாலும் ராசியை குரு பார்ப்பதால் தன்நிறைவோடு வாழ முடியும். மேலும் அர்த்தாஷ்டமச் சனி துவங்கினாலும் ஏப்ரல் 22, 2023 வரை ராசியை குரு பார்ப்பதால் வேலை செய்யும் இடத்தில் அனுகூலமான சூழல் காணப்படும்.
ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சொத்து தொடர்பான செயல்களில் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுப்பதை தவிர்க்கவும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு மறுமணம் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும். 5.1.2023 அன்று காலை 8.05 மணி முதல் 7.1.2023 இரவு 8.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணவரவில் தடை, தாமதம் ஏற்படுவதால் மன சஞ்சலம் உண்டாகும். பண விசயத்தில் யாரையும் நம்பக் கூடாது. ஏகாதசியன்று தாமரை மாலை அணிவித்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
23.1.2023 முதல் 29.1.2023 வரை
அமைதி காக்க வேண்டிய வாரம். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில தொழில் வாய்ப்புகள் கைகூடும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. ஆடம்பரச் செலவை குறைத்து எதிர் நீச்சல் போட்டால் வெற்றி நடை போட முடியும். திடீர் எதிர்பாராத பணவரவால் தேவைகள் அனைத்தும் நிறைவு பெறும் என்பதால் பயப்படத் தேவையில்லை. வாக்கு ஸ்தானத்தில் நிற்கும் அஷ்டமாதிபதி புதனுக்கு ராசி, ஆறாம் அதிபதி செவ்வாயின் எட்டாம் பார்வை இருப்பதால் தாய் வழிச் சொத்திற்காக தாய் மாமாவுடன் கருத்து வேறுபாடு, பகைமை உருவாகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை.
அமைதியாக இருப்பது அவசியம். அமைதியால் அனைத்து பிரச்சினைகளும் அடிப்பட்டு போகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணம் அறிந்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உணவு சார்ந்த விசயத்தில் கவனம் தேவை. அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் உங்களுக்கு எதிராக இருப்பவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு அகலும். அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு சிறப்பு.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
16.1.2023 முதல் 22.1.2023 வரை
தடைகள் விலகும் வாரம். அர்தாஷ்டமச் சனி துவங்கினாலும் ஏப்ரல் மாதம் வரை பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குரு ராசியை பார்ப்பதால் யோகமான பலன்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து மோதல்கள் அகலும். அஷ்டமாதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெற்று தன் வீட்டைத் தானே பார்ப்பதால் விபரீத ராஜ. யோகத்தால் திடீர் முன்னேற்றங்கள் உண்டாகும்.
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு வீடு மாற்றம் செய்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். பணத்திற்காக பிறரை அண்டிப் பிழைத்த நிலை மாறும்.
அடமான நகைகள், சொத்துக்களை மீட்கும் வாய்ப்பு உள்ளது. பணிபுரியும் இடத்தில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படலாம். உங்கள் திறமையால் வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். பெண்களுக்கு உடன் பிறப்புகளின் உதவியும் தாய் வழி ஆதரவும் கிடைக்கும். தினமும் சூரிய பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
9.1.2023 முதல் 15.1.2023 வரை
காரிய சித்தி உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ர நிவர்த்தி பெற்று தன் வீட்டைத் தானே பார்ப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் கைகூடும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் 10-ம் அதிபதி சூரியனும், 8,11-ம் அதிபதி புதனும் சஞ்சரிப்பதில் செல்வாக்கான நிலையை அடைவீர்கள்.
ராசியை 2, 5-ம் அதிபதி குரு பார்ப்பதால் பற்றாக்குறை வருமானத்தால் கவலை அடைந்தவர்களுக்கு உபரி வருமானம் கிடைக்கும். உங்கள் செயல்பாட்டில் மற்றவர்களின் குறுக்கீடு இருக்காது. குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும். முன்னோர்களின் சொத்து பாகப் பிரிவினையில் முறையான பங்கீடு கிடைக்கும்.முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய பலன் கிடைக்கும் காலம்.
தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும்.வீட்டில் சுப காரியப் பேச்சு வார்த்தை நடைபெறும். பெண்க ளுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பணி புரியும் பெண்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகன்று மருத்துவ செலவு குறையும். முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
2.1.2023 முதல் 8.1.2023 வரை
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ரம் பெற்றதால் குடும்ப பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான நிலை நிலவும். ஆனாலும் ராசியை குரு பார்ப்பதால் தன்நிறைவோடு வாழ முடியும். மேலும் அர்த்தாஷ்டமச் சனி துவங்கினாலும் ஏப்ரல் 22, 2023 வரை ராசியை குரு பார்ப்பதால் வேலை செய்யும் இடத்தில் அனுகூலமான சூழல் காணப்படும்.
ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சொத்து தொடர்பான செயல்களில் இடைத் தரகர்களை நம்பி பணம் கொடுப்பதை தவிர்க்கவும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு மறுமணம் நடைபெறும்.உடல் ஆரோக்கி யத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும்.
5.1.2023 அன்று காலை 8.05 மணி முதல் 7.1.2023 இரவு 8.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணவரவில் தடை, தாமதம் ஏற்படுவதால் மன சஞ்சலம் உண்டாகும். பண விசயத்தில் யாரையும் நம்பக் கூடாது. ஏகாதசியன்று தாமரை மாலை அணிவித்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
19.12.2022 முதல் 25.12.2022 வரை
பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் மற்றும் 2 , 5-ம் அதிபதி குருவும் ராசியைப் பார்ப்பதால் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதில் செய்ய நினைத்த காரியங்களை மறு நிமிடமே செய்து முடிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.அங்காளி, பங்காளிகள் மற்றும் குடும்ப உறவுகள் இணைந்து குடும்ப விழா கொண்டாடி மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனையும் லாபமும் படு ஜோராக இருக்கும்.
வேலைக்கான நேர்காணலில் வெற்றி உறுதி. வாடகை கட்டிடத்தில் இருந்து தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றுவீர்கள். செலவு குறையும் சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். நீண்ட நாட்களாக தாமதித்த காரியங்கள் துரிதமாக நடைபெறும். தாய், தந்தையின் ஆதரவு முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு தரும். மங்களகரமான சுபகாரியங்கள் நடக்கும். அமாவாசையன்று வயோதிகர்களின் தேவையறிந்து உதவவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
12.12.2022 முதல் 18.12.2022 வரை
சுமாரான வாரம். ராசி அதிபதி செவ்வாய் வக்ரம் பெற்று ராசிக்கு ஏழாம் இடத்தில் நின்று தன் வீட்டை, தானே பார்ப்பதால் நன்மையும் தீமையும் கலந்தே நடக்கும். அவரே ஆறாம் அதிபதியாக இருப்பதால் நோய், எதிரி, கடனால் துன்பம் உண்டாகும். 7,12-ம் அதிபதி சுக்ரன் 8, 11-ம் அதிபதி புதனுடன் குடும்ப ஸ்தானத்தில் சேர்வதால் வாக்கால், வாக்கு வாதத்தால் குடும்பத்தில் நிம்மதி குறையும். சில தம்பதிகள் மத்தியஸ்தர்களிடம் பேசி பிரிந்து கொள்வார்கள்.
திருமணப் பேச்சு வார்த்தைகள் இழுபறியாகும்.மறுமண முயற்சியில் வெற்றி உண்டு. 2, 5-ம் அதிபதி குரு ஆட்சி பலம் பெற்று ராசியைப் பார்ப்பதால் சிலருக்கு தலைக்கு மேல் வந்த பிரச்சினைகள் தலைப்பாகையோடு சென்று விடும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை முடிவுக்கு வரும். அரசு காரியத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார பற்றாக்குறை விலகும். செலவிற்கேற்ற வரவும் வரும்.
கொடுக்கல், வாங்கல் சீராகும். ஆணவத்தாலோ, அவசரத்தாலோ எடுக்கும் முடிவு கள் தொல்லை தரும் என்பதால் கவனம் தேவை.செவ்வாய் கிழமை செவ்வரளி சாற்றி முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






