என் மலர்tooltip icon

    விருச்சகம் - வார பலன்கள்

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    22.5.2023 முதல் 28.5.2023 வரை

    சாதகமான வாரம்.ராசி மற்றும் ஆறாம் அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் தெய்வ பக்தி மேலிடும். தொட்டது துலங்கும். பட்டது படரும்.மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.

    பணிபுரியும் பெண்களுக்கு வேலையில் சாதகமான நிலை, இடப் பெயர்ச்சி, பதவி உயர்வுகளை எதிர்பார்க்க லாம். ஆரோக்கியம் மேன்மை தரும். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும். தங்க நகை சேர்க்கை உண்டு. புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். பெண்கள் மருத்துவ உதவியால் கருத்தரிக்கலாம்.

    21.5.2023 இரவு 9.46 முதல் 24.5.2023 காலை 8.27 மணி வரை சந்தி ராஷ்டமம் உள்ளதால் உயர் அதிகாரி களிடம் சுமூகமாக நடந்து கொள்வது முன்னேற்றம் தரும். வெளி நபர்களின் வீண் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    18.9.2023 முதல் 24.9.2023 வரை

    நிறைவான வாரம். ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தான அதிபதி புதனுடன் பரி வர்த்தனை என கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் வாரம். கடல் தாண்டிச் செல்லும் யோகம் உள்ளது.எதிரிகளையும், நம்பிக்கை துரோகி களையும் அடையாளம் காண்பீர்கள். சொந்த ங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். காதலர்க ளுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ் ஆபரில் மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வளர்ப்பு பிராணிகளிடம் கவனத்துடன் செயல்படவும். ஆதார் கார்டு, ஏ.டி.எம். கார்டு, பாஸ் புக், ஆர்.சி. புக் போன்ற ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும். மாற்றுமுறை வைத்தியத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும். எந்த செயலிலும் வெற்றி பெற பிரத்தியங்கரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வணங்குதல் மிக நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    15.5.2023 முதல் 21.5.2023 வரை

    புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கும் வாரம். ராசி மற்றும் 6-ம் அதிபதி செவ்வாய் 9ல் நீசம் பெற்றதால் எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சிந்தனைகளும் எண்ணங்களும் உயர்வானதாக இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வெளிநாட்டு தொழில், உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப் போராட்டங்கள் தீரும்.

    குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.புதிய நண்பர்கள் அறிமுகமாகுவார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பூர்வீக சொத்து தொடர்பாக சித்தப்பாவுடன் பேச்சுவார்த்தை நடக்கும்.

    தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் நிலவிய சங்கடங்கள் அகன்று முன்னேற்றம் தோன்றும். தம்பதிக்குள் ஒற்றுமை நிலவும். திருமணம், சந்ததி விருத்தி ஏற்படும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். மருத்துவச் செலவுகள் குறையும். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    8.5.2023 முதல் 14.5.2023 வரை

    தடைகள் தகறும் வாரம்.ராசி மற்றும் ஆறாம் அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானம் செல்கிறார். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள்.

    கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில் முன்னேற்றமான, சிறப்பான நன்மைகளை அடையக் கூடிய நிலை உண்டாகும். அஷ்டமச் சனியின் தாக்கம் வெகு வாகக் குறையும். புதிய முதலீடுகளால் தொழிலில் ஏற்றம் காணலாம்.

    இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் நடைபெறும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். சங்கடஹர சதுர்த்தியன்று ரோஜா மாலை அணிவித்து விநாயகரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    1.5.2023 முதல் 7.5.2023 வரை

    ராஜ யோகம் பெரும் சகாயமான நேரம்.பணம் என்பது மனிதனுக்கு வரப்பிரசாதம். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குரு, சுக்ரன், செவ்வாய் பார்வை இருப்பதால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும்.பணக்கவலை குறையும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்சியும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி கூடும். பேச்சில் தெளிவு ஏற்படும்.

    இடம், பொருள், ஏவல் அறிந்து தன்மையாக பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். சகோதரர்களால் வீண் விரயம் உண்டு. சுப விரயங்கள் செய்ய உகந்த காலம். அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும்.பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம்.

    வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். இதுவரை கடன் தர மறுத்த நிதி நிறுவனங்கள் உங்களைத் தேடி வந்து கடன் வழங்குவார்கள். வியாபாரம் மற்றும் சொத்துக்கான வங்கிக் கடன்கள் எளிதாக கிடைக்கும்.கணவன், மனைவி உறவு சுமூகமாக இருக்கும். அரசியல் பிரபலங்களின் நட்பு, ஆதரவு கிட்டும். பவுர்ணமியன்று நரசிம்மரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    24.4.2023 முதல் 30.4.2023 வரை

    மனதில் உற்சாகமும் தெம்பும் பிறக்கும் வாரம். ராசிக்கு 7-ல் சுக்ரன் ஆட்சி பெறுவதால் இதுவரை கூட்டுத் தொழிலில் இருந்த மாற்றுக் கருத்து மறையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். 6-ம்மிடத்தில் நான்கு கிரகங்கள் இணைவதால் நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகள் பிரச்சிினை முடிவிற்கு வரும்.வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும்.

    அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.திருமண வாழ்க்கையில் நிலவிய மனகவலைகள் நீங்கும். 2-ம்மிடத்தை குரு பார்ப்பதால் பொருளாதாரத்தில் திருப்தி உண்டாகும். தன வரவு தாராளமாக ஏற்படும். குடும்ப உறவுகளிடம் அன்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். திருமணம் சம்மந்தமான பேச்சு வார்த்தை நடக்கும். காதலர்கள் திருமணத்திற்கு ஆலோசனை செய்வார்கள்.

    24.4.2023 மதியம் 1.13 முதல் 26.4.2023 இரவு 12.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் சிறு பயம், அச்சம், சந்தேகம் ஏற்படும். வீண் செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாம்பாளை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    17.4.2023 முதல் 23.4.2023 வரை

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றி பெறும் காலம். ராசியை விட்டு குருப் பார்வை விலகினாலும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் அர்தாஷ்டமச் சனியால் பொருள் வரவு குறைபடாது. குடும்பத் தேவைகள் நிறைவேறும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், கமிஷன் தொழில் புரிபவர்களுக்கு நல்ல தொழில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.

    தொழில் ஸ்தான அதிபதி சூரியன் ஆறாமிடத்தில் உச்சம் பெற்று அஷ்டமாதிபதி புதன் மற்றும் ராகுவுடன் சேர்க்கை பெறுவதால் புதிய தொழில் ஒப்பந்தம் மற்றும் முதலீடுகளை ஒத்தி வைக்கவும். சிலருக்கு பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்கம் வரும். ஏழாம் அதிபதி சுக்ரன் ஏழில் ஆட்சி பலம் பெறுவதால் கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் ஆதாயம், அனுகூலம் உண்டாகும்.

    திருமணத்தடைகள் விலகும். வீடு கட்டும் யோகம் மனை, தங்கம் வாங்கும் யோகம் உள்ளது. கிரகணத்தன்று அந்தணர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிப்பலன்

    10.4.2023 முதல் 16.4.2023 வரை

    எதிர்கால திட்டங்களும் கனவுகளும் வெற்றி பெறும் வாரம்.7, 12-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் திருமணத் தடை அகலும். தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் கூடி மகிழ்வார்கள். துணையை பிரிந்தவர்களுக்கு புதிய வாழ்க்கைத் துணை கிடைக்கும். ராசிக்கு 6-ம்மிடத்தில் தொழில் ஸ்தான அதிபதி சூரியன் அஷ்டமாதிபதி புதன் மற்றும் ராகுவுடன் சேர்க்கைபெறுவதால் வட்டித் தொழில், ரியல் எஸ்டேட், ஏஜென்சி தொழில் புரிபவர்களுக்கு பணப் பரிவர்த்தனையில் தாமதங்கள் ஏற்படலாம்.

    சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக தசாபுத்திக்கு ஏற்ப செயல்படுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது உங்கள் கடமையாகும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை, கூட்டு முயற்சியில் வெற்றி, நட்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோ கஸ்தர்களுக்கு நன்மை தரும் இடப்பெயர்ச்சிகள் நடக்கும். வாரிசு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.ஸ்ரீ தனலட்சுமியை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    3.4.2023 முதல் 9.4.2023 வரை

    கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். ராசி மற்றும் ஆறாம் அதிபதி செவ்வாய் எட்டு, பதினொன்றாம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுவதால் மன ஆற்றலும், மன உறுதியும் கொண்ட நீங்கள் எந்தப் பிரச்சினையும் கண்டு சோர்ந்து போக மாட்டீர்கள். முக்கியமான பிரச்சினை வம்பு, வழக்குகளில் தலையிடாமல் தாமரையிலை தண்ணீர் போல் விலகி விடுவீர்கள்.

    வெளியூர், வெளிநாட்டு பயணத்தில் தடை, தாமதம் ஏற்படும். தொழில் போட்டி அதிகரிக்கும். சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தமாகவோ பிரிந்து வாழலாம். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீட்டை தவிர்க்க வேண்டும்.விரயங்கள் அதிகரிக்கும்.

    குடும்ப வாழ்வில் நாட்டக்குறைவு உருவாகும். கடன் தொல்லை அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும். இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். பங்குனி உத்திரத்தன்று சிவனுக்கு வில்வ மாலை சாற்றி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    27.3.2023 முதல் 2.4.2023 வரை

    கடந்த கால இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாரம். 10-ம் அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய பலத்தை அதிகரிக்கும் 5-ம்மிடத்திற்கு சென்றதால்உங்கள் தகுதியை, திறமையை வளர்த்துக் கொள்ளக் கூடிய நல்ல சந்தர்பங்கள் கூடி வரும். பல்வேறு வெற்றிகளைக் குவிக்கும் யோகம் உண்டாகும். தொழில் அபிவிருத்திக்குச் செய்யப்படும் முயற்சிகள் வெற்றி தரும்.

    பணவசதி சிறப்பாக இருக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். கடன், வட்டி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும். திருமணம், புத்திரப் பேறு, வீடு, வாகனம் போன்ற வாழ்வியல் மாற்றம் உண்டாகும். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானம் செல்வதால் வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகுவீர்கள்.

    28.3.2023 அன்று அதிகாலை 4.25 முதல் 30.3.2023 மாலை 4.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடுமையாக உழைக்க நேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.முருகனை வழிபட மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    20.3.2023 முதல் 26.3.2023 வரை

    விபரீத ராஜயோகமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் நின்று 4ம் பார்வையால் லாப ஸ்தானத்தைப் பார்க்கிறது.எதையும் வரும் முன் அறிந்து செயல்படுவீர்கள். 5-ம்மிடத்தில் புதன், குரு, சூரியன் சேர்கை இருப்பதால் தொழில் தொடர்பான ஆலோசனை வழங்குவதில் மதிமந்திரியாக திகழ்வீர்கள்.

    லாப அதிபதி புதன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் வியாபாரங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். எதிர்பாராத தனலாபம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தொழிலுக்குத் தேவையான உதவி களை வங்கியில் இருந்து பெறுவீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். குரு பகவான் ஆறாமிடம் நோக்கி நகர்வதால் புதிய கடன் மற்றும் கொடுக்கல், வாங்கல் தொடர்பான விசயங்களில் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது.

    கடந்த காலத்தில் வாங்கிய நிலத்தை பத்திரப்பதிவு செய்வீர்கள். உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடன் மறைந்த தாய், தந்தையின் சொத்தைப் பிரிப்பதில் மனக்கசப்பு உருவாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஸ்ரீ விநாயகரும், முருகப்பெருமானையும் வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிப்பலன்

    13.3.2023 முதல் 19.3.2023வரை

    வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும் வாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் பூர்வ ஸ்தானாதிபதி குருவுடன் சேர்க்கை பெற்றதால் எந்தக் காரியத்திலும் சுறுசுறுப்பாக இறங்குவீர்கள். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். தொழிலுக்குத் தேவையான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சில தம்பதிகள் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். சில தம்பதிகள் வெளியூர், வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லலாம்.

    அஷ்டமாதிபதி புதன் நீச பங்க ராஜ யோகம் பெறுவதால் அதிர்ஷ்டம் பங்குச் சந்தை லாபம், உயில் சொத்து மூலம் வந்து சேரும் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஆன்லைன் வியாபாரம் அதிக லாபத்தைக் கொடுக்கும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும்.

    பெண்கள் யாருக்கும் நகைகளை இரவல் கொடுக்க கூடாது. உடன் பிறந்தவர்கள், மூத்த சகோதர வழியில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் முன்னேற்றம் தரும். சிலர் மறுமணம் செய்து கொள்ளலாம். நாத்தனார், மாமியாரால் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும். தினமும் திருக்கோளாற்று பதிகம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×