என் மலர்
விருச்சகம் - வார பலன்கள்
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
14.08.2023 முதல் 20.8.2023 வரை
சாதகமான வாரம். ராசி மற்றும் ஆறாம் அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி என மாத கிரகங்களின் சஞ்சாரம் விருச்சிகத்திற்கு சாதகமாக இருப்பதால் எதிர்மறை எண்ணங்கள் விலகி அழகான தோற்றப் பொலிவு உண்டாகும். மனதில் ஏற்பட்ட இனம் புரியாத வேதனைகளும் பயங்களும் முற்றிலும் விலகும். உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ்ந்த நிலை இனி இருக்காது.
தொழில், வேலையில் இருந்த இழுபறி நிலை நீங்கும். புதிய வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலர் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம் படிப்பு போன்ற சுப செலவிற்காக கடன் வாங்கலாம். மாணவர்களின் கல்வி ஆர்வத்திற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். சிலரின் பிள்ளைகள் தொழில், உத்தியோகம் மேற் கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். தடைபட்ட திருமணம் இந்த மாதத்தில் நிச்சயிக்கப்படும். ஆடி அமாவாசையன்று பசுவிற்கு பழம், அகத்திக்கீரை வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
07.08.2023 முதல் 13.8.2023 வரை
சோதனைகள் சாதனையாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் குருபார்வை பெற்று ராசியை பார்ப்பதால் ஆயுள் ஆரோக்கியம் சீராகும். உங்களின் முயற்சிகள் நிறைவேறும். தைரியம், தெம்பு உருவாகும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள். இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும்.
நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். எழுத்து துறையினரின் திறமை தனித்தன்மை மிளிறும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும்.11.8.2023 அன்று மாலை 4.58 முதல் 14.8.2023 அன்று காலை 4.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நண்பர்களிடம் விலை உயர்ந்த பொருட்களை இரவல் கொடுப்பது வாங்குவதை தவிர்க்கவும். ஆடி வெள்ளிக்கிழமை வராகியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
31.7.2023 முதல் 6.8.2023 வரை
மன சஞ்சலம் அதிகரிக்கும் வாரம். ராசியில் செவ்வாய், சனி பார்வை பதிவதால் தொழில் உத்தியோகத்தில் நிலவும் சாதகமற்ற சூழ்நிலையால் மன சஞ்சலம் அதிகரிக்கும். தொழில் ' நிலைக்குமா? வேலை பறிபோகுமா? கடன் தீருமா? என்ற பயத்தில் நிம்மதியான தூக்கம் இருக்காது. பண வரவும் பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். தொழில் வியாபா ரத்தில் போட்டிகள் நிலவினாலும் உங்களின் தனித்திறமையால் சமாளிப்பீர்கள். அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் திருமண முயற்சியில் காலம், பணம் என பல விரயங்கள் நடக்கும். தம்பதிகளின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
இடமாற்றம், வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என அவரவர் தேவைக்கும் வயதிற்கும் ஏற்ற மாற்றங்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கையால் குடும்பத்தில் மகிழ்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நல்லவர்களாக இருந்த சகோதர, சகோதரிகளின் குணத்தில் மாற்றம் உண்டாகும். ஆடிப் பெருக்கு அன்று கடலுக்கு சென்று நீராடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
24.7.2023 முதல் 30.7.2023 வரை
முன்னேற்றமான வாரம். ராசி அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வை ராசியில் பதிவதால் இருண்டு கிடந்த வாழ்க்கையில் மெதுவாக வெளிச்சம் பரவும். எதிர்பாராத நல்லவை நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான வேலையையும் சாமர்த்தியமாக முடிக்கும் திறமை வளரும்.
2,5-ம் அதிபதி குரு தன ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் இருந்த தடைகள் மெதுவாக விலகி மறுபடியும் துளிர்க்கும்.பண நெருக்கடி குறையும். விவசாயிகளுக்குத் தடைபட்ட குத்தகை வருமானம் வந்து சேரும். குடியிருப்புகளுக்கு புதிய வாடகைதாரர் வரலாம். தடைபடாத பண வரவால் சுபசெலவுகள் மிகுதியாகும்.
வீடு கட்டும் பணி துரிதமாகும். பெண்கள் வீட்டிற்கு தேவையான மங்கலப் பொருட்கள் வாங்குவார்கள். திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனச்சோர்வு, உடல் சோர்வு குறையும். பராமரிப்பு இல்லாத அம்மன் கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
17.7.2023 முதல் 23.7.2023 வரை
எண்ணங்களில் தெளிவு பிறக்கும் வாரம். அர்தாஷ்டமச் சனியால் ஏற்பட்ட கடன் தொல்லை ,சகோதரர விரோதம், அரசு வகைச் சிக்கல்கள் அகலும்.வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும். சிலர் தொழில், வேலை நிமித்தமாக குறுகிய காலம் குடும்பத்தை பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள்.
10ம் அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். கால்நடை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆடம்பர விருந்து, உபசாரங்களில் கலந்து மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மாற்று முறை வைத்தியம் பலன் தரும்.
17.7.2023 இரவு 10.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பராமரிப்பு இல்லாத அம்மன் கோவில்களுக்கு விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் வாங்கித் தரவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
10.7.2023 முதல் 16.7.2023
புத்தி சாதுர்யத்துடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 7, 12-ம் அதிபதி சுக்ரனுடன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரகசியங்கள் கசியும். தொழில் போட்டிகள் உருவாகும். பங்குதாரர்கள், நண்பர்க ளிடம் சிறு மன பேதம் ஏற்படும். எந்தச் செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல்ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.
அலைச்சல் மிகுதியாகும்.வேலைப் பளு அதிகமாகும். முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு மிகும். தொழில் ஒப்பந்தங்களை நன்றாக படித்த பின்பு கையெழுத்திடவும். பங்குச் சந்தை முதலீடுகள் நிலை தடுமாற வைக்கும். அரசு அங்கீகாரமற்றவங்களில்முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். பெண்களுக்கு மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது.சிலருக்கு புதிதாக எதிர்பாலின நட்பு கிடைக்கும். ஆரோக்கியத்தை பேணுவது அவசியம்.
15.7.2023 இரவு 11. 23-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வேலைப் பளு அதிகமாகும். வீண் விரயங்கள் மிகுதியாகும். ஆடி வெள்ளிக்கிழமை குல தெய்வத்தை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
3.7.2023 முதல் 9.7.2023 வரை
சாதகமான வாரம். ராசிக்கும் 10-ம் இடத்திற்கும் சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் மெக்கானிக் மற்றும் இயந்திரப் பணியாளர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு. நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நன்மை உண்டாகும்.பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும்.
பூர்வீகச் சொத்தை விற்று புதியவீடு வாங்குவீர்கள். விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் ஏற்ற காலம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பெண்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். அதற்குத் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சொத்து, தொழில் போன்றவற்றுக்கு வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். மைத்துனரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கணவன்- மனைவி இடையை சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வீர பத்திரரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
26.6.2023 முதல் 2.7.2023 வரை
மன சஞ்சலத்தை தவிர்க்க வேண்டிய வாரம். ராசி மற்றும் 6-ம் அதிபதி செவ்வாய் 10-ம்மிடமான தொழில் ஸ்தானம் சென்று சனியை நேரடியாக பார்ப்பதால் எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள். இதுவரை நீங்கள் பெற்ற கடனை அடைக்க முடியாமல் திணறி கடன்காரர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த நிலைமாறும்.
வீட்டின் சுப நிகழ்வுகளை நடத்த, தொழில் விரிவாக்க கடன், ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் என விரும்பிய கடன் தொகை கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். அஷ்டமாதிபதி புதன் 10-ம் அதிபதி சூரியனுடன் 8-ல் நிற்பதால் வம்பு, வழக்கு, வைத்தியச் செலவு தேடி வரலாம். குடும்ப உறவுகளிடம் ஒட்டாமல் பிரிந்து வாழ்வது போன்ற மன உணர்வு இருக்கும்.
எண்ணச் சிதறல்கள் மிகுதியாக இருக்கும். முழுமையாக ஆழ்ந்த பக்தியில் ஈடுபட முடியாது. முக்கிய முடிவுகளை பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும். தடைபட்ட திருமண வாய்ப்புகள் கூடி வரும். வியாழக்கிழமை சீரடி ஸ்ரீ சாய் பாபாவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
19.6.2023 முதல் 25.6.2023 வரை
புதிய முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம். தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் தொழில் மந்த நிலை மாறி சூடு பிடிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும்.
3, 4-ம் அதிபதி சனி வக்ரமடைவதால் அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, முறையான ஆவணம் இல்லாத சொத்து, வில்லங்கம் ஜாமீன் பிரச்சினை, கடன் பிரச்சினை, நோய் தாக்கம், எதிரி தொல்லை, செய்வினைத் தாக்கம், பய உணர்வு, நிரந்த ரமில்லாத உத்தியோகம், அடிக்கடி வேலையை மாற்றுவது, தாய் மாமன், உடன் பிறப்புகளால் மன வேதனை, முறையற்ற பாகப்பிரிவினை போன்ற பாதிப்புகள் விலகும்.
சில தம்பதிகள் தொழில், வேலை நிமித்தமாக பிரிந்து வாழலாம். வீண் அலைச்சல் விரயம் தொடரும். நோய், நொடிகள் நிவர்த்தியாகும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். 20.6.2023 அன்று மாலை 3.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். அனைவரிடம் பொறுமையாக அன்பாக பழகுவது நல்லது. நலிந்த அந்தணர்களுக்கு ஆடை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
12.6.2023 முதல் 18.6.2023 வரை
எதிலும் நிதானமும் எச்சரிக்தையும் தேவை. அஷ்டமாதிபதி புதன் ராசியைப் பார்ப்பதால் கண் திருஷ்டி, போட்டி, பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். கடன் பிரச்சி னைகளால் , குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். தம்பதி கள் தங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்வதால் ஊடல் கூடலாகும்.
வீடு, வாகனம் போன்ற சுப விரயங்கள் ஏற்படும். சகோதரியிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும்.சில முக்கிய சம்பவங்கள் பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் முடிவில் நன்மையாகவே இருக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்கவும்.
திருமணத்தடை அகலும்.18.6.2023 காலை 5.12-க்குசந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் அசதி, அசவுகரியம் மற்றும் பொருள் விரயத்திலிருந்து விடுபட தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்பது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
5.6.2023 முதல் 11.6.2023 வரை
திருப்புமுனையான வாரம். 10-ம் அதிபதி சூரியன் ராசியைப் பார்ப்பதால் தொழிலை தொடர்ந்து நடத்தலாமா? இழுத்து மூடி விட்டு செல்லலாமா என்று கவலையுடன் இருந்தவர்களுக்கு தொழிலில் நல்ல திருப்புமுனை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். மனகுழப்பம் நீங்கும். உத்தி யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு திருப்தி தரும். வேலையில் நிலவிய டென்சன் குறையும்.அஷ்டமாதிபதி புதன் ராசியைப் பார்ப்பதால் தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும்.
சிலரின் மறு மண முயற்சி கைகூடும். பூர்வீகச் சொத்தில் நிலவிய சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு செல்வாக்கு உள்ள அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். ராகு, கேது மற்றும் குருவின் சஞ்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் சிலருக்கு கோட்சார ரீதியாக திருமணத் தடை ஏற்படலாம். நோயைப் பற்றி பேசுவதை தவிர்த்திடுங்கள்.
நோயின் பாதிப்பில் இருந்து கவனத்தை திசை திருப்ப ஏதாவது வேலையில் ஈடுபடுவது நல்லது. நோயைப் பற்றி அதிகம் பேசினால், அது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும்.கடன் பிரச்சினை குறையும்.வீடு, நிலம், வாகனம் போன்றவைகள் வாங்குவீர்கள். ஸ்ரீ ராமானுஜரை வழிபட மனப்பாரம் குறையும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
29.5.2023 முதல் 4.6.2023 வரை
புதிய முயற்சிகள் கைகூடும் வாரம். ராசி மற்றும் 6-ம் அதிபதி செவ்வாய் 7, 12-ம் அதிபதி சுக்ரனுடன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும்.நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். புத்திரப்பேறில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும்.
அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வுகிடைக்கும். பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால்தொழில், உத்தியோக பிரச்சினைகள் சீராகும்.தொழில் வியாபாரம் மந்தமான நிலை இருந்தாலும் வருமா னம் வழக்கம் போல் இருக்கும்.தாய் வழியில் ஏற்பட்ட மனக்கவலைகள், கருத்து வேறுபாடு அகலும்.
விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, லாபத்தால் வசதிகள் பெருகும். தம்பதிகள்மனம் விட்டு பேசுவதால் நன்மைகள் உண்டாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். திருமணத்தடை அகலும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். பவுர்ணமியன்று காவல் தெய்வங்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






