என் மலர்
விருச்சகம் - வார பலன்கள்
விருச்சகம்
வார ராசி பலன்கள்
27-6-2022 முதல் 03-7-2022 வரை
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம்.வெளிநாடு சென்றவர்கள் சொந்த மண்ணிற்கு திரும்பும் சந்தர்ப்பம் உருவாகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம். நீடிக்கும்.
ராசி, ஆறாம் அதிபதி செவ்வாய் 6ல் ஆட்சி பலம் பெற்று ராகுவுடன் இணைவதால் கடன் வீடு தேடி வரும். தேவையற்ற கடனை தவிர்ப்பது நல்லது. அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். அரசியல் வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்பு ஏற்படும். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு உள்ளது.
28.6.2022 காலை 5.32 முதல் 30.6.2022 மாலை 6.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களின் கவனக்குறை வான செயல்களால்பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம். அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படும்.அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு அவசியம்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை
புதிய முயற்சிகள் மேற்கொள்ள சாதகமான வாரம். ராசி அதிபதி செவ்வாயும், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குருவும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேர்க்கை பெற்றதால் முடிவெடுக்க முடியாமல் திணறிய முக்கிய செயல்களுக்கு இந்த வாரத்தில் தெளிவான முடிவு எடுப்பீர்கள்.
தாய், தந்தையால் ஆதாயம் உண்டு. குடும்ப பெரியவர்களின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பீர்கள். குல கவுரவம் பற்றி பேசிக் கொண்டே இருப்பீர்கள். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு.அதிகார பதவி உண்டு. தன்னைச் சார்ந்தவர்க ளையும் நம்பியவர்களையும் நல்ல அறிவுரையால் வழி நடத்துவீர்கள்.
பெண்களுக்கு இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.பூர்வீகச் சொத்தில் வாரிசுப் பிரச்சினைமேலோங்கும். சித்தப்பாவுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். பாதியில் நிற்கும் கட்டிட பணிகள் துரிதமாகும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு மறு திருமணம் நடக்கும்.பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்குபானகம் படைத்துவழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை
பெரும்பான்மையான பலன்கள் சாதகமாக அமையும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய்2,5ம் அதிபதி குரு என அனைத்து கிரகங்களும் நல்ல சாதகமான கிரக அமைப்பில் இருப்பதால் விருச்சிக ராசியினருக்கு உயர் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என அனைத்தும் சாதமாக உள்ளது. வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.
6மிட ராகுவால் வேலை பார்க்கும் இடத்தில் சில மனக்கசப்பு ஏற்படலாம். பெண்களுக்கு சகோதரர் வகையில் வரவு உண்டு. கணவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும்.வீடு கட்டும் பணி துரிதமடையும். மாமனாருக்கு ஆரோக்கிய குறைபாடு அகலும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.
தம்பதிகள் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.வாழ்க்கைத் துணையால் பொருள் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலருக்குமறுமணம் நடக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசி பலன்கள்
6.6.2022 முதல் 12.6.2022 வரை
மன அமைதி கிடைக்கும் வாரம். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்ற குருவுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கூடுவதால் பிள்ளைகள் தங்கள் சாதனைகளால் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். வீடு, மனை வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலர் பணம் கொடுத்து அரசு வேலைக்கு முயற்சி செய்வார்கள். குரு மங்கள யோகத்தால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.
நண்பர்கள் மூலம் புதிய தொழில் தொடர்புகள் கிடைக்கும். விளையாட்டு, காவல் துறையினரின் திறமை பாராட்டப்படும்.மைத்துனரால் கவுரவக் குறைச்சல் உண்டாகலாம். மருமகன் சொத்து விசயத்தில் மிகுதியான ஆதிக்கத்தை வெளிப்படுத்துவார்.
அரசியல் வாதிகளுக்கு எதிரி தொல்லைகள் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். திருமணத்தடை அகலும். சிலருக்கு காதல் திருமணம் நடைபெறும். சிலரின் திருமண வாழ்க்கை பஞ்சாயத்தில் நிறுத்தும். பிரதோஷத்தன்று சிவனுக்கு பசும் பால் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசி பலன்கள்
30.5.22 முதல் 5.6.22 வரை
செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும் நேரம். ராசி அதிபதி செவ்வாயும் 2,5-ம் அதிபதி குருவும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேர்வதால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோசமும் அதிகரிக்கும். மனக்குழப்பம், டென்ஷன் குறையும். வருமானத்தில் நிலவிய பற்றாக்குறை அகலும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் விலகும்.புதிய தொழில் முதலீட்டிற்கு உகந்த நேரம். சிலர் வேலையை மாற்றுவார்கள்.
தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. புத்திர பிராப்தம் கிடைக்கும். திருமண முயற்சிகள் சித்திக்கும். மகன் தீய சகவாசங்களில் இருந்து விடுபடுவார். பிள்ளைகள் போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். கடன், நோய், எதிரி தொல்லைகள் அகலும். கணவன், மனைவி அன்பாக இல்லறம் நடத்துவார்கள். புதிய வீடு வாங்குதல், புதிய வீடு கட்டி குடிபுகுதல், வசிக்கும் வீட்டை விரிவுபடுத்துல் போன்ற பாக்கிய பலன்கள் இனிதே நடந்தேறும்.
31.5.2022 இரவு 11.30 முதல் 3.6.2022 பகல் 12.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயலில் தடுமாற்றம், சிந்தனையில் குழப்பம் ஏற்படலாம். வெள்ளிக்கிழமை ஸ்ரீ மகா லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22
புதிய திருப்பங்கள் ஏற்படும் அற்புதமான வாரம்.ராசி அதிபதி செவ்வாயும், 5-ம் அதிபதி குருவும் இணைந்து விருச்சிக ராசியினருக்கு வளமான எதிர்காலத்தை வழங்க உள்ளார்கள். குல தெய்வ அனுகிரகமும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை வழி நடத்தும் காலம் என்றால் அது மிகையாகாது. இன்னும் ஓராண்டிற்கு விருச்சிக ராசியினரின் காட்டில் பண மழைதான். சொத்தின் மதிப்பு பன்மடங்கு உயரும்.
பங்கு பத்திரங்கள் நல்ல லாபம் பெற்றுத் தரும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.இது வரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அந்தஸ்தான வீடு, ஆடம்பர வாகனம் என வாழ்வாதாரம் உயரும். உயர்கல்வி முயற்சி சித்திக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், அன்யோன்யமும் உண்டாகும். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். அமாவாசையன்று சித்தர்களின் ஜீவ சமாதியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
வார ராசிப்பலன்
இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை
ராசி அதிபதி செவ்வாய் பூர்வ ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குருவுடன் சேர்க்கை பெற்றதால்ம னக்குழப்பம் அகலும். தொழில் வளம் சிறக்கும். நிம்மதியாக தொழிலை நடத்துவீர்கள். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். சில விவசாயிகள் எல்லை தகராறு பிரச்சினைக்காக நீதி மன்றம் செல்ல நேரும். வாழ்க்கைத் துணைக்கு இடமாறுதலுடன் வேலை மாற்றம் கிடைக்கும். தாய் வழிச் சொத்தை விற்பதில் உங்கள் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஒத்துழைப்பு தரு வார்கள். சிலருக்கு சொத்து விற்பனையில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
ஆனால், மறைமுக எதிரிகள் மூலம் சிலருக்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வழக்குகளில் திருப்பம் ஏற்படும். கல்யாண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட இடமாற்றம் கிடைக்கும். தினமும் ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






