என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்
விருச்சகம்
கார்த்திகை மாத ராசிபலன்
உதவும் குணத்தால் உள்ளத்தில் இடம் பிடிக்கும் விருச்சிக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியன், லாப ஸ்தானாதிபதி புதன் ஆகியோரும் சஞ் சரிப்பதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள்அடுக்கடுக்காக வந்து சேரும். புகழ்மிக்கவர்களின் ஆதரவோடு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும்.
வக்ர குருவின் ஆதிக்கம்
மாதம் முழுவதுமே குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் குரு. எனவே இந்த வக்ர காலத்தில் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். நல்ல பலன்களைப் பெற குரு பகவானை வழிபடுவது நல்லது. குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்திலும், விரய ஸ்தானத்திலும் பதிவதால் குடும்ப ஒற்றுமை பலப்படும்.
இடம், வீடு வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முன்னோர்கள் செய்த திருப்பணிகளை முறையாகச்செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணி புரியும் இடத்தில் பாராட்டும், புகழும் குவியும். பதவியில் இருப்பவர்கள் பக்கப்பலமாக இருப்பர்.
துலாம்-சுக்ரன்
உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் 12-ம் இடத்தில் நீச்சம் பெறுவது யோகம் தான். விரயாதிபதி நீச்சம் பெறுவதால் விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். எந்தச் செயலையும் தொடங்கிவிட்டால் அதற்குரிய பொருளாதாரம் வந்து சேரும். அதே நேரம் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வரப்போகின்றார்.
சுக்ரனுக்கு சொந்த வீடு துலாம் என்பதால் பலம் பெற்ற சுக்ரனால் பல வழிகளிலும் நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக சுபச்செலவுகள் அதிகரிக்கும். கல்யாண வயதடைந்த பிள்ளைகள் இருந்தால் அதற்காகப் பார்த்த வரன் முடியலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை கொடுத்தாலும் அதற்கேற்ற விதம் சம்பள உயர்வும் கொடுப்பர்.
தனுசு-புதன்
உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். லாப ஸ்தானாதிபதி புதன் கார்த்திகை 14ம் தேதி தன ஸ்தானத்திற்கு வருகின்றார். இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். பொருளாதார வளர்ச்சி கொஞ்சம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு வங்கிகளின் ஒத்துழைப்பும், வள்ளல்களின் ஒத்துழைப்பும் உண்டு. வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வும் உண்டு.
விருச்சகம்
ஐப்பசி மாத ராசிபலன்
18.10.2023 முதல் 16.11.2023 வரை
நல்ல யோசனைகளை அள்ளி வழங்கும் விருச்சிக ராசி நேயர்களே!
ஐப்பசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகின்றது. எனவே குருமங்கள யோகம் உருவாகின்றது. மேலும் சூரியனும், புதனும் இணைந்து 'புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. எனவே தொழில் வெற்றி நடைபோடும். தொகை வரவு திருப்தி தரும். ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றாக வந்து உள்ளத்தை மகிழ்விக்கும்.
சனி வக்ர நிவர்த்தி!
ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகிறது. உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி. அவர் பலம்பெறும் இந்தநேரம் பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். அருள்தன்மை மிக்க உங்களுக்கு அடுத்து நடக்கப் போவதை யூகித்து அறியும் ஆற்றல் உள்ளதால் எதற்கும் கவலைப்பட மாட்டீர்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.
குரு வக்ரம்!
மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெற்றுச் சஞ்சரித்தாலும் அவரது பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் அமைப்பும் ஒருசிலருக்கு கைகூடும். அண்ணன்-தம்பிகள் அரவணைப்போடு எண்ணிய காரியங்களை எளிதில் முடிப்பீர்கள்.
நீச்சம் பெறும் சுக்ரன்!
ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி நீச்சம் பெறுவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப திடீர் முன்னேற்றங்களும், நல்ல மாற்றங்களும் வரலாம். அதே சமயம் 7-க்கு அதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால் வாழ்க்கைத் துணை வழியே கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியப்பட வைக்கும்.
விருச்சிக புதன்!
ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து நல்ல காரியங்களை நடத்திக் கொடுப்பர். வியாபாரம் சூடு பிடிக்கும். வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் வருமானம் கிடைத்து உள்ளத்தை மகிழ்விக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் துணிந்து எடுத்த முடிவால் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வந்து சேரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உருவாகும். பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். நல்லவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 20, 21, 22, 25, 26, நவம்பர் 5, 6, 10, 11, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.
விருச்சகம்
புரட்டாசி மாத ராசிபலன்
18-09-2023 முதல் 17-10-2023 வரை
வெற்றி ஒன்றே குறிக்கோளாக செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வருமானம் உயர்ந்து வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தர்ம காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். சகாய ஸ்தானத்தில் சனி இருப்பதால் இம்மாதம் உங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேறும்.
புதன் வக்ரம்
புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். அஷ்டமாதிபதியாகவும், புதன் விளங்குவதால் அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். சென்ற மாதத்தில் நடைபெறாதிருந்த சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு. உயர்அதிகாரிகள் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றுவர். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். ஒருதொகை செலவழிந்த பின்னரே மற்றொரு தொகை கரங்களில் புரளும்.
துலாம் - செவ்வாய்
புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர். 6-ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் 12-ம் இடத்திற்கு வரும்பொழுது, எதிர்பாராத நல்ல திருப்பங்களை உருவாக்குவார். வாகன யோகம் முதல் அனைத்து யோகங்களும் வந்து சேரும். தேகநலன் சீராகும். செல்வநிலை உயரும். குருவின் பார்வை செவ்வாயின் மீது பதிவதால் 'குரு மங்கல யோகம்' ஏற்படுகின்றது.
துலாம் - புதன்
புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 8-க்கு அதிபதி 12-ல் வரும் இந்த நேரம் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். இடமாற்றம், வீடுமாற்றம் இனிமை தரும். பழைய பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வுகள் இப்பொழுது தானாக வரலாம். மேலும் வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் மூலம் ஆச்சரியப்படும் தகவலும் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி காண்பர். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவும், கேட்ட சலுகைகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ-மாணவியர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதிச் செலவிடும் சூழ்நிலை உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
செப்டம்பர்: 23, 24, 27, 28, அக்டோபர்: 8, 9, 14, 15. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
விருச்சகம்
தமிழ் மாத ராசிபலன்கள்
18-08-2023 முதல் 17-09- 2023 வரை
சாதனைகள் நிகழ்த்தி சரித்திரத்தில் இடம்பெறும் விருச்சிக ராசி நேயர்களே!
ஆவணி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் நான்கு கிரகங்களுடன் கூட்டாக இணைந்து கூட்டுக்கிரக யோகத்தை உருவாக்குகிறார். எனவே தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் உயரும். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும்.
அர்த்தாஷ்டம சனி இம்மாதம் விலகுவதால் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 7, ௧௨ ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்லதுதான். புதிய ஒப்பந்தங்கள் வந்த வண்ணமாகவே இருக்கும். அதிக முயற்சி செய்யாமலேயே சில காரியங்கள் அடுத்தடுத்து முடிவிற்கு வந்து விடும்.
தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. வீடு, வாகனம் வாங்குவது பற்றியும் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நீண்டநாட்களாக எதிர்பார்த்த தலைமைப் பதவிகள் இப்பொழுது கிடைக்கலாம். கன்னி - செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு வருவதால், பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புகழ் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர்.
6-க்கு அதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் உத்தியோகத்தில் இருந்தபடியே ஒருசிலருக்கு சுயதொழில் செய்யும் வாய்ப்பு கைகூடும். ஒருசிலர் உத்தியோகத்தில் இருந்து விலகி சுயதொழில் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து நல்ல சம்பளம் தருவதாகச் சொல்லி அழைப்புகள் வரலாம்.
மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கமாக செல்கிறார். வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றத்தால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். அர்த்தாஷ்டமத்தில் இருந்து விலகி, சகாய ஸ்தானத்திற்கு சனி வருகிறார். எனவே இதுவரை எவை எவையெல்லாம் நடைபெறாமல் இருந்ததோ, அவையெல்லாம் துரிதமாக நடைபெறும்.
வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை இனி சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் யோகம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். பொருளாதார நிலை உச்சம் பெறும். சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் நட்பு பலப்படும். புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார்.
உங்கள் ராசிக்கு லாபாதிபதியாக விளங்கும் புதன், வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். கொடுக்கல்- வாங்கல்களில் சரளமான நிலை உருவாகும். வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கலாம்.
ஆரோக்கியத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முக்கியப் புள்ளிகள் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிதி நிறுவனங்களின் மூலம் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு வருமானமும், வாய்ப்புகளும் வந்து கொண்டேஇருக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதற்கேற்ற ஊதியமும் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 20, 21, 22, 26, 27, 31, செப்டம்பர்: 1, 10, 11, 16, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
விருச்சகம்
தமிழ் மாத ராசிப்பலன்
17.7.23 முதல் 17.8.23 வரை
வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சுக்ரனோடு இணைந்து தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவர் மீது குரு பகவானின் பார்வை பதிகின்றது. எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அர்த்தாஷ்டமச் சனியும் வக்ர நிலையில் இருப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு பணிபுரிந்து உன்னத வளர்ச்சியைக் காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மேஷ - குரு சஞ்சாரம்
நவக்கிரகத்தில் சுபகிரகமான குரு பகவான், இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால், அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றப் போகின்றது. குறிப்பாக தன ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால், தனவரவு தாராளமாக வந்து சேரும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல் சுமுகமாக நடைபெறும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் வருமானத்தால் பொருளாதார நிலை உயரும். நல்ல காரியங்கள் பலவும் நடைபெற நண்பர்கள் வழிகாட்டுவர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் பணிக்கு பாராட்டு கிடைக்கும்.
குருவின் பார்வை 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால், தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அதன் மூலமாக உங்களின் பொருளாதார நிலை உயர வழிபிறக்கும். தொழிலுக்கான கூடுதல் முதலீடுகள் செய்ய, கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களும், அதிகார வர்க்கத்தினரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். கலைத்துறையில் உள்ளவர்கள் கவுரவிக்கப்படுவர். புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவி செய்வதன் மூலம் உங்களுக்கு புகழ் வந்து சேரும்.எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேற நண்பர்களும், உறவினர்களும் போட்டி போட்டுக் கொண்டு உதவுவர். பார்க்கும் குருவைப் பலப்படுத்த வியாழன் தோறும் விரதமிருந்து குரு கவசம் பாடி குரு பகவானை வழிபடுவது நல்லது.
சிம்ம - புதன்
ஆடி 7-ந் தேதி சிம்ம ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். லாபாதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம், ஒரு அற்புதமான நேரமாகும். தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். கிளைத்தொழில் தொடங்கும் யோகமும் உண்டு. வெளிநாட்டில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்துசேரும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். முக்கியப் பிரமுகர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் இருமடங்காக உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்து ஆதரவு உண்டு. கலைஞர் களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் கூடுதலாகக் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நாகரீகப் பொருட்கள் வாங்குவதில் அக்கறை கூடும். கணவன் - மனைவிக்குள் கனிவும், பாசமும் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 19, 20, 24, 30, 31, ஆகஸ்டு: 4, 5, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
விருச்சகம்
தமிழ் மாத ராசிப்பலன்
வழிபாட்டின் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும் என்று சொல்லும் விருச்சிக ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சுக்ரனோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். குருவின் பார்வை தன ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்தில் பதிகின்றது. எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய திட்டங்கள் தீட்டி அதில் வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். வி.ஐ.பிக்கள் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றக் காத்திருப்பர். வியாபாரம், தொழில் வெற்றிநடைபோடும். அர்த்தாஷ்டமச்சனியின் ஆதிக்கம் இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கலாம். எனவே சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது.
மிதுன - புதன்
ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். அது அவருக்கு சொந்த வீடாகும். அஷ்டமத்திற்கு புதன் வரும்போது மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும் என்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். லாபாதிபதியாகவும் புதன் விளங்குவதால் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும்.
சிம்ம - செவ்வாய்
ஆனி மாதம் 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவர் மீது குருவின் பார்வை பதிவதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். முக்கியப் பிரமுகர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். அரசாங்க ஆதரவும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாக அமையும்.
சிம்ம - சுக்ரன்
ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். மேலும் 6-க்கு அதிபதி செவ்வாய், 10-க்கு அதிபதி சுக்ரனோடு இணைவதால் 'விபரீத ராஜ யோக'மும் செயல்படும். குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது விழுகிறது. எனவே ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். மனக்குழப்பம் அகன்று மகிழ்ச்சி கூடும். பணப்புழக்கமும் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.
கடக - புதன்
ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். வராத பாக்கிகள் வசூலாகும். வந்த தொகை சேமிப்பாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு திருப்தி தரும். கூடுதல் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைத்தாலும் அதற்கேற்ப சம்பள உயர்வும் கூடும். ஆன்மிகப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியாளர்கள் கடமை உணர்வுடன் செயல்படுவர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் முக்கியப் புள்ளிகளின் ஆலோசனையால் முன்னேற்றம் காண்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு வெளிநாட்டு அழைப்பு வரலாம். மாணவ-மாணவிகளுக்கு கல்வியில் திருப்தி ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவர்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 21, 22, 27, 28, ஜூலை: 3, 4, 7, 8.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
விருச்சகம்
தமிழ் மாத ராசிப்பலன்
15.5.23 முதல் 15.6.23 வரை
சொல்லும் சொற்களை வெல்லும் சொற்களாக்கும் விருச்சிக ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். துணிந்து நீங்கள் எடுத்த முடிவுகளால் வெற்றிக்கனியை எட்டிப்பிடிப்பீர்கள். உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.
ராகு-கேது சஞ்சாரம்
பின்னோக்கி நகரும் கிரகங்களான ராகுவும், கேதுவும் உங்கள் வாழ்க்கையை முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றனர். 6-ல் ராகு குருவுடன் இணைந்திருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். தொழில் வெற்றி நடைபோடும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். புகழ்மிக்கவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பீர்கள். வாங்கல் - கொடுக்கல்களில் சுமுகநிலை ஏற்படும். அணிகலன்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கேது பலத்தால் ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.
கடக - சுக்ரன்
வைகாசி 16-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள நீச்சம் பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிநாதன் மங்கள யோகம் பெறுவதால் குடும்பத்தில் மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உண்டு. வருமானம் திருப்தி தரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கூட்டாளிகள் லாபத்தைக் கொண்டு வந்து சேர்ப்பர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய திருப்பங்களைக் காண்பீர்கள்.
ரிஷப - புதன்
வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து உங்கள் ராசியைப் பார்ப்பது, ஒரு பொன்னான நேரமாகும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டு. இல்லம் தேடி சுபச் செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். தெளிவான சிந்தனையோடு தேர்ந்தெடுத்த தொழிலில் லாபம் குவிப்பீர்கள். அசையா சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். வெளிநாட்டிலிருந்து ஆதாயம் தரும் அழைப்புகள் வரலாம். புயல் வேகத்தில் முன்னேற்றம் காணும் நேரமிது. பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்புகள் தானாகத் தேடிவரலாம். தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். கலைஞர்கள் கவுரவிக்கப்படுவர். வருமானம் உயரும். பெற்றோர்களின் ஆதரவும் கூடும். பெண்களின் பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வு கிடைத்து சந்தோஷம் ஏற்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே:15, 25, 26, ஜூன்: 4, 5, 6, 10, 11.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
விருச்சகம்
தமிழ் மாத ராசிப்பலன்
14.4.2023 முதல் 14.5.2023
நேர்மறை எண்ணங்களால் நிகழ்காலத்தை வளமாக்கும் விருச்சிக ராசி நேயர்களே!
சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் 8-ம் இடத்தில் சஞ்சரித்து தன ஸ்தானத்தைப் பார்க்கின்றார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். 4-ல் சனி இருப்பதால் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை.
சனியின் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் சனி பகவான் 4-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். அதை 'அர்த்தாஷ்டமச் சனி' என்றும் சொல்வார்கள். உங்களைப் பொறுத்தவரை சகாய ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. சிறுசிறு தொல்லைகள் அவ்வப்போது வந்து அலைமோதினாலும் வழிபாட்டின் மூலம் அதன் கடுமையைக் குறைத்துக்கொள்ள இயலும்.
குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் அர்த்தாஷ்டமச் சனியாக இருந்தாலும் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். செல்வச் செழிப்பும், செல்வாக்கும் எப்பொழுதும் போல இருக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றிபெறும். தன்னம்பிக்கையும், தைரியமும், அதிகரிக்கும்.
மேஷ - குரு
சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் 6-ம் இடத்திற்கு வரும்போது அதன் பார்வை பலத்தால் நற்பலன்களை வழங்குவார். 'குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம்' என்பார்கள். அந்த அடிப்படையில் குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். குறுக்கீடுகள் அகலும். கூட்டாளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிக்க இயலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலிடத்திற்கு நெருக்கமாவதோடு கேட்ட சலுகைகள் கிடைக்கும். சகப் பணியாளர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வர். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் வந்துசேரும்.
மிதுன - சுக்ரன்
சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சப்தம விரயாதிபதியான சுக்ரன் அஷ்டமத்துக்கு வரும்போது, இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். கல்யாணம், மணி விழா, கடை திறப்பு விழா போன்றவைகள் நடைபெற சுக்ரன் ஆதிக்கம் கைகொடுக்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பகை மறந்து பாசம் காட்ட உறவினர்கள் முன்வருவர். கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும். தொழில்வளம் சிறப்பாக இருக்கும்.
இம்மாதம் விநாயகப்பெருமான் வழிபாடு வெற்றிகளை வழங்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 16, 17, 28, 29, மே: 2, 3, 4, 8, 9, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
விருச்சகம்
தமிழ் மாத ராசிப்பலன்
15.3.2023 முதல் 13.4.23 வரை
வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரித்து தன ஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர்களுடன் இருந்த சலசலப்புகள் மாறும். பேச்சுத் திறமை யால் காரியங்களை சாதிப்பீர்கள். உற்ற நண்பர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வெற்றி வாகை கைகூட வழிவகுத்துக் கொடுப்பர். கரைந்த சேமிப்புகள் மீண்டும் வந்து சேரும். உறைந்த பனிக்கட்டிபோல் உள்ளம் குளிர்ச்சியாகும்.
இம்மாதம் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை சகாய ஸ்தானத்தில் உள்ள சனியின் மீது பதிவதால், ஒருசில காரியங்களில் கவனத்தோடு இருப்பது நல்லது. வீடு, இடம் தொடர்பான விஷயங்களில் வில்லங்கம் இல்லை என்பதை உறுதி செய்து வாங்குங்கள். உறவுகளுக்குள் இருந்த உரசல்கள் மாற, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வரவுக்கு மத்தியில் செலவுகள் அதிகரித்தாலும், வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாது. தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் அதிகம் பெற்ற நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது வரும் முட்டுக்கட்டைகள் அகல வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். கசந்த காலங்களை வசந்த காலமாக மாற்றுவது வழிபாடுகள் தான்.
மேஷ - புதன்
பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான புதன், 6-ம் இடத்திற்கு செல்கிறார். எனவே பெயர், புகழ், கீர்த்தி அதிகரிக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும். விபரீத ராஜயோக அடிப்படையில் புதன் செயல்படும் என்பதால், மனக்கவலை மாறும். மகிழ்ச்சி கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பார்த்தோர் வியக்கும் வண்ணம் வாழ்க்கை அமையும். எதிரிகள் உதிரிகளாவர். லாபம் எளிதில் கிடைக்க வழி பிறக்கும். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளின் ஆதரவு கூடும். உயர் பதவியும், ஊதியத்தில் உயர்வும் கிடைத்து சந்தோஷத்தை சந்திக்கும் சூழ்நிலை உண்டு.
ரிஷப - சுக்ரன்
பங்குனி 24-ந் தேதி உங்கள் ராசிக்கு 7, 12-க்கு அதிபதியாக சுக்ரன், சப்தம ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே திருமண வாய்ப்புகளில் இருந்த தேக்க நிலை மாறும். அருமையான வாழ்க்கைத் துணை அமையும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவது முதல் அதிநவீன எந்திரங்கள் வாங்குவது வரை செயல்படும் நேரம் இது. மனதில் தோன்றியதை மறுகணமே செய்து முடிக்கப் பணவரவும் உண்டு. பக்கபலமாக நண்பர்களும் உண்டு. தொழில் வளர்ச்சிக்குத் தொகையும் வந்து சேரும். புதிய கூட்டாளிகளும் வந்திணைவர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் நடத்துபவர்கள் போட்டிகளைச் சமாளித்து வெற்றி காண்பர். கலைஞர்களுக்கு ஒளிமயமான வாழ்வு அமைய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்களுக்கு நினைவுத்திறன் அதிகரித்து வெற்றி வாகை சூடுவர். உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பு கைகூடும். பெண்களுக்கு பாசத்திற்குரிய தம்பதியர்களாக மாறும் வாய்ப்பு உண்டு. பல்வேறு வகையில் உதவிகள் கிடைக்கும். சுபச்செய்திகள் இல்லம் தேடி வரும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு.
இம்மாதம் லட்சுமி நரசிம்மர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 15, 16, 20, 21, 30, 31, ஏப்ரல்: 1, 6, 7, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
விருச்சகம்
தமிழ் மாத ராசிப்பலன்
13.2.2023 முதல் 14.3.2023 வரை
எதிர்காலத்தை இனியதாக மாற்றும் விருச்சிக ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், தன ஸ்தானத்தை பார்க்கிறார். எனவே பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ராசியின் மீது குரு பார்வையும் பதிவதால், தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் லாபாதிபதி புதனோடு இணைந்து சனி சஞ்சரிக்கிறார். இதனால் தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். குருவின் பார்வை உங்கள் ராசியிலும், 9,11 ஆகிய இடங்களிலும் பதிவதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மாசி 4-ம் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு சப்தம - விரயாதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது யோகம்தான். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணை வழியே நன்மைகள் கிடைக்கும். உதிரி வருமானங்கள் வந்துசேரும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டு. பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இந்த நேரத்தில் இடம், பூமி வாங்குவது அல்லது வீடு கட்டிக் குடியேறுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
கும்ப - புதன் சஞ்சாரம்
மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியான புதன், 4-ம் இடத்திற்கு செல்லும் பொழுது தாய்வழி ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாராத தன லாபம் இல்லம் தேடிவரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
மீன - புதன் சஞ்சாரம்
மார்ச் 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியாக விளங்கும் புதன், நீச்சம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். அதே நேரத்தில் நீச்சம் பெற்ற புதன், குருவோடு இணைந்து 'நீச்ச பங்க ராஜயோக'த்தை உருவாக்குகிறார். இதனால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். அரைகுறையாக நின்ற பணிகள் அனைத்தும் நடைபெறும். வெளிநாட்டில் இருந்து நண்பர்கள் மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கலாம்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன், 6-ம் இடத்திற்கு வரும்பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் வந்துசேரும். உத்தியோக உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். தொழில் நடத்துபவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வளர்ச்சி கூடும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். செவ்வாயின் பார்வை சனி மீது பதிவதால் சகோதர வர்க்கத்தினர்களுடன் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்படும். இருப்பினும் குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடலாம்.
இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபட்டு வந்தால் வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 16, 17, 18, 21, 22, மார்ச்: 4, 5, 8, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
விருச்சகம்
தமிழ் மாத ராசிப்பலன்
16.12.22 முதல் 14.1.23 வரை
தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கிறார். பலம்பெற்று சஞ்சரிக்கும் குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
புதன் வக்ர இயக்கம்
உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். அஷ்டமாதிபதியான புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். லாபாதிபதியாகவும் புதன் விளங்குவதால், அதன் வக்ர காலத்தில் பணவரவு தாமதப்பட்டாலும் திடீர் திடீரெனப் பெருந்தொகைகள் வந்து மகிழ்ச்சியைத் தரும். தொழில் வர்த்தகத் துறையில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் கூடுதல் பொறுப்புகளும், அதற்கேற்ற விதத்தில் சம்பளமும் கிடைக்கலாம். இலாகா மாற்றங்கள் இனிமை தரும்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். களத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல்கள் கிடைக்கும். குறிப்பாக அவர்கள் உத்தியோகம் சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடு செய்திருந்தால் அது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். அனுகூலமான விரயங்கள் உண்டு. அரைகுறையாக நின்ற காரியங்கள் செவ்வனே முடியும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து கடமையை முடித்துக் கொடுப்பர். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகம், தொழில் ரீதியான அழைப்புகள் வரலாம்.
புதன் வக்ர நிவர்த்தி
மார்கழி 24-ந் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால், யோகங்கள் படிப்படியாக வந்து சேரும். குறிப்பாக லாபாதிபதி பலம்பெறும்போது, தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வீடுகட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வர்த்தகம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கும் 6-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் செவ்வாய். உங்கள் ராசிநாதன் வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். தொழில் வளம் பெருகும். கிளைத் தொழில்கள் தொடங்க, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம்.
6-க்கு அதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் அதன் வக்ர நிவர்த்தி காலத்தில் பணியில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். தங்கள் முன்னேற்றத்தை சக பணியாளர்களிடம் சொல்ல வேண்டாம். செவ்வாய் பார்வை உங்கள் ராசியின் மீது பதிவதால் துணிந்து சில முடிவுகளை எடுத்து துயரங்களை வெளியேற்றிக் கொள்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை திருப்திகரமாகவே இருக்கும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு நீங்கள் செய்யும் கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
இம்மாதம் நடராஜப் பெருமான் வழிபாடு நலம் யாவும் வழங்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 18, 23, 24, 28, 29, ஜனவரி: 8, 9, 13, 14. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
விருச்சகம்
இந்த வார ராசிப்பலன்
17.11.21 முதல் 15.12.21 வரை
நல்லதைச் செய்தால் நல்லதே நடக்கும் என்று சொல்லும் விருச்சிக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாபாதிபதி புதனுடன் இணைந்து குருவால் பார்க்கப் படுவதால் 'குருமங்கள யோகம்' ஏற்படுகின்றது. எனவே இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். செல்வ நிலை உயரும். செயல்களில் வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.
செவ்வாய்-சனி பார்வைக் காலம்
மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை 20-ந் தேதி வரை செவ்வாய்-சனியின் பார்வை இருக்கின்றது. மகரத்திலுள்ள சனி துலாத்திலுள்ள செவ்வாயைப் பார்க்கின்றார். ராசிநாதனாகவும், 6-க்கு அதிபதியாகவும் விளங்கும் செவ்வாய் சகாய ஸ்தானத்திலுள்ள சனியைப் பார்க்கும் பொழுது நினைத்தது நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பூமி வாங்கும் யோகம் உண்டு. பொன், பொருள் சேர்க்கையும் ஏற்படும்.
விருச்சிக புதனின் சஞ்சாரம்
கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றாா். உங்கள் ராசியில் அடியெடுத்து வைக்கும் புதனால் நல்ல பலன்கள் இல்லம் தேடி வரப்போகின்றது. அரசாங்க வழியில் நன்மைகள் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வெற்றி நடைபோடும். வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றிச் சிந்திப்பீர்கள்.
தனுசு புதனின் சஞ்சாரம்
கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு இணைந்து புத சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். இதன் விளைவாக கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும் யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.
மகர சுக்ரனின் சஞ்சாரம்
கார்த்திகை 19-ம் தேதி மகர ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சகோதர பாசம் அதிகரிக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். சுக ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல் கிடைக்கும்.
விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சி ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் உடல் நலம் சீராகும். தனவரவும் திருப்தி தரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். துணிந்து நீங்கள் எடுத்த முடிவால் வெற்றிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். காரிய வெற்றிக்கு கலைமகள் வழிபாட்டை மேற்கொள்ளவும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 24, 25, 26, 30, டிசம்பர்: 1, 6, 7, 8, 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
4 ஆயிரம் கோடியில் வடிகால் பணிகள் நடந்ததால்தான் சென்னை தப்பியது- முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னையில் மீண்டும் விமான சேவை தொடங்கியது
உங்க சக்தியே ஒண்ணா நின்னு ஜெயிக்கிறதுதான்- சென்னை மக்களுக்கு ஊக்கமளித்த ஹர்பஜன் சிங்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
