என் மலர்tooltip icon

    விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்

    விருச்சகம்

    2024 ஐப்பசி மாத ராசிபலன்

    புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிகிறது. எனவே பொருளாதார நிலை உயரும்.

    பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் நேரடிப் பார்வை, உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப, எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இனிய சம்பவங்கள் பல இல்லத்தில் நடைபெறும். மதிப்பும், மரியாதையும் உயரும்.

    செவ்வாய் நீச்சம்

    ஐப்பசி 6-ந் தேதி, கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். 'நம் ராசிநாதன் செவ்வாய் நீச்சம் பெறுகிறாரே' என்று நினைக்க வேண்டாம். செவ்வாய் 6-ம் இடத்திற்கும் அதிபதியாக இருப்பதால், அவர் நீச்சம் பெறுவது நன்மைதான். எதிரிகளின் பலம் குறையும்.

    எதிர்பார்த்ததைக் காட்டிலும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். பழகும் நண்பர்கள் பணத் தேவையைப் பூர்த்தி செய்ய முன்வருவர். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

    விருச்சிகம் - புதன்

    ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதி புதன், உங்கள் ராசியில் சஞ்சரிப்பது யோகமான நேரம்தான். தொழில் வெற்றி நடை போடும். தொகை வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து அலைமோதும்.

    மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பாராத விதத்தில் பதவி உயா்வும், சம்பள உயர்வும் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு உண்டு.

    சனி வக்ர நிவர்த்தி

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக விளங்குபவர் சனி பகவான். சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், பலம்பெறும் இந்த நேரத்தில் நிலபுலன்களால் ஆதாயம் வந்தடையும்.

    நினைத்தது நிறைவேறும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தாய்வழி ஆதரவு உண்டு. வாகன மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.

    தனுசு - சுக்ரன்

    ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சப்தம - விரயாதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்போது விரயத்திற்கேற்ற தனவரவு உண்டு. வீடு, இடம் வாங்கும் யோகம் செயல்படும்.

    படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரும். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு.

    கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 25, 26, 29, 30, நவம்பர்: 6, 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    விருச்சகம்

    2024 புரட்டாசி மாத ராசிபலன்

    இறை நம்பிக்கையால் எதையும் சாதிக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதார நிலை உயரும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

    குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் வருமானம் உயரும். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனையில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். வருங்காலத்தை வளமாக்கிக்கொள்ள எடுத்த புது முயற்சிகள் வெற்றி பெறும். வீடு, இடம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அா்த்தாஷ்டமச் சனி வக்ரம்பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கல்விக்காகவும், கலைக்காகவும் எடுத்த முயற்சிகள் கைகூடும். மனை கட்டிக் குடியேறுவது அல்லது கட்டிடம் பழுது பார்ப்பது, சொத்துக்கள் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள்.

    'தொழிலுக்கான மூலதனம் கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மாற்று இனத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். வாழ்வில் திருப்புமுனை உண்டாகும் நேரம் இது. பிள்ளைகளின் மேல் படிப்பு சம்பந்தமாகவோ அல்லது வேலை நிமித்தமாகவோ வெளிநாடு செல்வதற்கு முயற்சி எடுத்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும்.

    புதன் உச்சம்

    புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம, லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதி உச்சம் பெறுவது நன்மைதான். லாபம் குவியும். தொழில் வெற்றி நடைபோடும். செல்வாக்கு உயரும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்து முக்கியப் புள்ளியாக மாற வாய்ப்பு உருவாகும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பர்.

    எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். தொழிலை விரிவு செய்து, நிரந்தர வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.

    துலாம் - சுக்ரன்

    புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 7, 12-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரனால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். இருந்தாலும் வாழ்க்கைத் தேவைகள் முழுவதும் பூர்த்தியாகும்.

    வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வரன்கள் வாசல் தேடி வந்துசேரும். தொழில் செய்வோர், கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு.

    துலாம் - புதன்

    புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். செல்வாக்குமிக்க ஒருவரால் செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

    உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரத்தை வழங்குவர். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ்கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய அளவிற்கு லாபம் கிடைக்கும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தைப் பெறுவர். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்விக்கும். மாணவ - மாணவி களுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு வரன்கள் வாசல் தேடிவரும். வருமானம் திருப்தி தரும்.

    பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 17, 18, 27, 29, அக்டோபர்: 2, 3, 4, 9, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    விருச்சகம்

    2024 ஆவணி மாத ராசிபலன்

    தன்னம்பிக்கை தளராமல் பார்த்துக்கொள்ளும் விருச்சிக ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிப்பதால் 'குருமங்கள யோகம்' உருவாகிறது. எனவே மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும்.

    தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். நாலாபுறம் இருந்தும் நல்ல தகவல் வந்து கொண்டே இருக்கும். வருமானம் திருப்தி தரும். வருங் காலத்தை பற்றிய பயம் அகலும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். மொத்தத்தில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை வழங்கும் நேரம் இது.

    சனி - சூரியன் பார்வை

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன், அவரை பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ரம் பெற்றிருப்பது யோகம் தான். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உயர்கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கை கூடும். தொழில் வெற்றி நடைபோடும்.

    தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பகைக் கிரகமான சனியின் பார்வை அவர் மீது பதிந்தாலும், வக்ர சனியாக இருப்பதால் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. நடக்கும் காரியங்கள் நல்லவிதமாக நடைபெற நம்பிக்கையோடு சனி பகவான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

    சுக்ரன் நீச்சம்

    ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கூடுதலாக இருந்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஆடை - ஆபரணச் சேர்க்கை உண்டு.

    வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். படித்து முடித்தும் வேலை கிடைக்காமல் இருக்கும் வாழ்க்கை துணைக்கு இப்பொழுது வேலை கிடைக்கும்.

    மிதுன - செவ்வாய்

    ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். தொழிலில் இடமாற்றம் வருவதற்கான அறிகுறி தென்படும். செவ்வாயின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதார நிலை திருப்தியாகவே இருக்கும்.

    கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். தேங்கிய காரியங்கள் சுறு சுறுப்பாக நடைபெறும். தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள். புகழ்மிக்க புராதன கோவில்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கைகூடும். செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தேகநலன் சீராகும். செல்வ நிலை உயரும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதியான புதன் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது, தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

    'புத ஆதித்ய யோகம்' செயல்படும் இந்த நேரத்தில், கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். சந்தர்ப்பங்கள் எல்லாம் சாதகமாக அமையும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

    வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமான உயர்வுக்கு வழிபிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 20, 21, 31, செப்டம்பர்: 1, 5, 6, 12, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    விருச்சகம்

    ஆடி மாத ராசிபலன்

    வெற்றி ஒன்றையே குறிக்கோளாக்கி செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் இருக்கும் குருவோடு இணைந்து 'குரு மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சந்திரனை, குரு பார்ப்பதால் 'குரு சந்திர யோக'த்தோடு மாதம் தொடங்குகிறது. எனவே இந்த மாதம் உங்களுக்கு இனிய மாதமாகும். எடுத்த காரியங்கள் எளிதில் வெற்றிபெறும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் பெருகும். கல்யாண முயற்சி கைகூடும்.

    குரு - செவ்வாய் சேர்க்கை

    மாதத் தொடக்கத்தில் குருவும், செவ்வாயும் இணைந்து உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். இதனால் 'குரு மங்கள யோகம்' செயல்படுகிறது. எனவே மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். கல்யாணம், காதுகுத்து, மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்றவை நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். தொழில் வெற்றி நடைபோடும். தொகை வரவும் திருப்தி தரும். இடம், பூமி வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாட்களாக வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் நேரம் இது.

    புதன் வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். திட்டமிடாத சில காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். அதே நேரம் லாபாதிபதியாகவும் புதன் விளங்குவதால், ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை உங்கள் கரங்களில் புரளும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வரும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் பொழுது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து, அதன் மூலம் வருமானம் வந்துசேரும். பழைய நகை களைக் கொடுத்து விட்டு, புதிய நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானாக வந்துசேரும். நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும் நேரம் இது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகளும், ஊதிய உயர்வும் உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்துசேரும். வருமானம் உயரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 19, 20, 24, 25, ஆகஸ்டு: 4, 5, 8, 9, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    விருச்சகம்

    ஆனி மாத ராசிபலன்

    சந்தர்ப்பங்களை சாதகமாக மாற்றிக்கொள்ளும் விருச்சிக ராசி நேயர்களே!

    ஆனி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் சொந்த வீட்டில் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர்வும், உன்னதமான வாய்ப்புகளும் வந்துசேரும். கல்யாணம் போன்ற சுபாகரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். கவுரவம், புகழ் கூடும்.

    சனி வக்ரம்

    ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். அர்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெறுவது நன்மைதான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஆர்வம் காட்டாத செயல்களில் கூட ஆதாயம் கிடைக்கும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதற்கு ஏற்ற விதத்தில் சம்பள உயர்வும் வரலாம்.

    கடக - புதன்

    ஆனி 12-ந் தேதி, பாக்கிய ஸ்தானத்திற்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியாக விளங்குபவர் புதன். லாபாதிபதியான அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்பனையாகும். அதன் மூலம் வரும் லாபத்தைக் கொண்டு தொழிலை வளப்படுத்திக் கொள்வீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து, அதன் மூலம் வருமானப் பெருக்கம் உண்டு. புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற எண்ணம் நிறை வேறும்.

    கடக - சுக்ரன்

    ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சப்தமாதிபதியான அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது மங்கல ஓசை மனையில் கேட்கும். குடும்ப உறுப்பினர்களின் குறை களைத் தீர்க்க முன்வருவீர்கள். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். வருங்காலத்தை சீரமைத்துக்கொள்ள எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிய ஆசைப்பட்டவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    ரிஷப - செவ்வாய்

    ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனான செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். பொருளாதார நிலை உச்சம்பெறும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்களோடு இணைந்து பணிபுரிய விருப்பப் படுவர். மனை விற்பனை தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலமாக அமையும். பூமி விற்பனையால் லாபமும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். நீண்ட நாட்களாக முடிவடையாத வழக்குகள் இப்பொழுது உங்களுக்கு சாதகமாக முடியும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொருளாதார நிலை திருப்தி தரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.

    பணத்தேவையைப் பூர்த்திசெய்யும் நாட்கள்:-

    ஜூன்: 15, 16, 22, 27, 28, ஜூலை: 8, 9, 12, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    விருச்சகம்

    வைகாசி மாத ராசிபலன்

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, இந்த மாதம் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வெற்றி படிக்கட்டின் விளிம்பில் ஏற நண்பர்கள் உதவி புரிவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். கல்யாண முயற்சிகள் கைகூடும்.

    ரிஷப - சுக்ரன்

    வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சப்தமாதிபதி சுக்ரன் பலம் பெறும் இந்த நேரம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். பணம் பல வழி களிலும் வந்து பையை நிரப்பும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து, அதன் மூலமும் வருமானம் வந்துசேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

    ரிஷப - புதன்

    வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி மற்றும் கலை சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வழி ஆதரவு உண்டு. அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமை பொறுப்புகள் வரலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்விக்கும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு கவுரவ விருதுகள் கிடைக்கும்.

    மேஷ - செவ்வாய்

    வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் பலம்பெறும் இந்த நேரம், ஒரு அற்புதமான நேரமாகும். ஆரோக்கியம் சீராகும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். அதிகார அந்தஸ்தில் உள்ளவர்களின் ஆதரவோடு பல நல்ல காரியங்கள் முடிவடையும். உடன்பிறப்புகளின் திருமண வைபம் சிறப்பாக நடை பெறும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தன வரவு திருப்தி தரும்.

    மிதுன - புதன்

    வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியான புதன், 8-ம் இடத்தில் மறைவது யோகம்தான். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பார்கள். அந்த அடிப்படையில் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். எனவே கிளைத் தொழில் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வும், மேலதிகாரிகளின் பாராட்டுதலும் கிடைக்கும். மேல்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது உத்தியோகம் சம்பந்தமாகவோ, வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அது கைகூடும்.

    மிதுன - சுக்ரன்

    வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன், 8-ம் இடத்திற்கு வரும் பொழுது 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப எதிர் பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சி உச்சத்தை அடையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டு வணிகம் ஆதாயம் தரும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழல் உருவாகும். அதிர்ஷ்ட தேவதை இல்லத்தில் அடியெடுத்து வைக்கும் நேரம் இது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்விக்கும். வருமானம் திருப்தி தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் உண்டு. கலைஞர் களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபச்செய்திகள் வந்துசேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 14, 15, 19, 20, 26, 28, 30, 31, ஜூன்: 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    விருச்சகம்

    பங்குனி மாத ராசிபலன்

    மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சுக ஸ்தானத்தில் சுக்ரனோடும், சனியோடும் இணைந்து சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிகிறது. எனவே பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். `சுக்ர மங்கள யோகம்' இருப்பதால் இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தால் சுபச்செலவுகள் மேலோங்கும்.

    செவ்வாய் - சனி சேர்க்கை

    மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், மாதம் முழுவதும் அங்குள்ள சனியோடு இணைந்து சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்கும் சனியோடு இணையும் இந்த நேரத்தில், நல்ல சம்பவங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். மறைவிடத்திற்குரிய அதிபதிகள் ஒன்று கூடும்பொழுது நிறைவான பலன் கிடைக்கும்.

    அந்த அடிப்படையில் உங்களுக்கு வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். திருமண வயதை அடைந்த பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு வரன் வாசல் தேடி வரும். என்றைக்கோ குறைந்த விலையில் வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கும்.

    புதன் வக்ரம்

    மீனத்தில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், பங்குனி 13-ந் தேதி வக்ரமும் அடைகிறார். அஷ்டம - லாபாதிபதியான புதன் வக்ரம் பெறுவதால், வரவு வருவதற்கு முன்பாகவே செலவு காத்திருக்கும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட, புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பச் சுமை கொஞ்சம் கூடும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றங்களில் கவனம் செலுத்துவீர்கள். புதிய வாகனம் வாங்கி பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    மீனம் - சுக்ரன்

    பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தன்னுடைய உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார அந்தஸ்து கிடைத்து மகிழ்வீர்கள். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். வெளிநாட்டில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் ஆதாயம் தருவதாக இருக்கும்.

    உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மனதிற்கினிய செய்தி வந்துசேரும். தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும். கலைஞர்களுக்கு விருதுகள் வாங்கும் யோகம் உண்டு. மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமும், பாராட்டும் கிடைக்கும். பெண்களுக்கு இல்லறம் நல்லறமாக அமையும். பொருளாதார நிலை திருப்தி தரும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 19, 20, 25, 26, 27, 31, ஏப்ரல்: 1, 2, 3, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    விருச்சகம்

    மாசிமாத ராசிபலன்

    வாழ்வில் உயர்ந்த இடத்தை எட்ட நினைக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிகிறது. எனவே பண வரவு திருப்தி தரும். நண்பர்கள் கேட்ட உதவிகளை செய்வர். தொழில் வெற்றி நடை போடும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். ஆரோக்கியம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

    கும்பம் - புதன்

    மாதத் தொடக்கத்தில் கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து `புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். கேட்ட சலுகைகளை வழங்க அரசாங்கம் முன் வரும் நேரமிது. எனவே தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து, உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். லாபாதிபதியும், தொழில் ஸ்தானாதிபதியும் இணைந்திருக்கும் இந்த நேரம், தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும்.

    மகரம் - சுக்ரன்

    மாதத் தொடக்க நாளிலேயே, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம் பயணங்களால் பலன் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயங்களை சுப விரயங்களாக மாற்றிக்கொள்ளலாம்.

    மீனம் - புதன்

    மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதி யானவர் புதன். அஷ்டமாதிபதி நீச்சம் பெறுவது யோகம்தான். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரும். கடந்த காலத்தில் பலமுறை முயற்சி செய்தும் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது திடீரென நடைபெற்று மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தப்போகிறது. வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மாற்றினத்தவர்கள் மூலம் உங்கள் கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    கும்பம் - சுக்ரன்

    மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சப்தம-விரயாதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்திற்கு செல்லும் இந்த நேரம் பயணங்கள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கி பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பால் பெருமை காண்பீர்கள். நாணயமும், நம்பிக்கையும் கொண்டவர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டுவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மனதிற்கு இனிய செய்தி வரும். வியாபாரம் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்ய உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் உண்டு. கலைஞர்களுக்கு விருதுகள் வாங்கும் யோகம் வாய்க்கும். மாணவ, மாணவியர்களுக்கு கல்வியில் உயர்வும், ஆசிரியர்களிடம் நன் மதிப்பும் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 13, 14, 26, 27, 28,

    மார்ச்: 5, 6, 7, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    விருச்சகம்

    தை மாத ராசிபலன்

    சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாகும் என்று சொல்லும் விருச்சிக ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாபாதிபதி புதனுடன் இணைந்து சஞ்சரிக்கின்றார். எனவே பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சனி 4-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சனி வழிபாடு சந்தோஷம் வழங்கும்.

    மேஷ-குருவின் சஞ்சாரம்!

    மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். தன-பஞ்சமாதிபதியான குரு பகவான் 6-ம் இடத்தில் சஞ்சரித்தாலும் அதன் பார்வை தன ஸ்தானத்தில் பதிகின்றது. எனவே பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து லாபம் அதிகரிக்க வழிவகுத்துக் கொடுப்பர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர், புகழ் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கி சம்பள உயர்வு தரக் காத்திருப்பர்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். அவர் 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் விரயத்திற்கு ஏற்ற வரவு உண்டு. சுக்ரன் விரயாதிபதியாக இருப்பதால் ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும். பால்ய நண்பர்களின் ஒத்துழைப்போடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வியாபாரம், தொழில் விருத்தியடையும்.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் செல்கின்றார். சகாய ஸ்தானத்திற்கு செல்லும் புதனால் பலவித வழிகளிலும் நன்மை கிடைக்கப் போகின்றது. குறிப்பாக கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய காரியங் களுக்கு பொருளுதவி செய்யும் வாய்ப்பு உண்டு. பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மன நிறைவைத் தரும். ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள்.

    மகர-செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். மகரம், செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெறும் இந்த நேரத்தில் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி லாபம் தரும். வியாபாரத்தில் போட்டி போட்டவர்கள் விலகுவர். புகழ் கூடும் விதத்தில் நல்ல காரியங்கள் பலவும் செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் வீடு கட்டும் யோகம் உண்டு. துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வெளிநாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    பொதுவாழ்வில் பொறுப்புகள் மற்றும் பதவிகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு விரும்பிய படியே லாபம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்குப் பொருளாதார நிலை உயரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 15, 16, 26, 27, 30, 31, பிப்ரவரி: 6, 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    விருச்சகம்

    மார்கழி மாத ராசிபலன்

    வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே பலம் பெற்று சஞ்சரிக்கின்றார். அவரோடு லாபாதிபதி புதனும் சஞ்சரிப்பதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். பொருளாதார நிலை உயரும். இம்மாதம் அர்த்தாஷ்டம சனியின் ஆதிக்கம் வரப்போகிறது. இருப்பினும் சகாய ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். சனி பகவானால் சந்தோஷம் பெருகும்.

    கும்ப ராசியில் சனி

    மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்கு செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியாக வருகிறது. அதற்காக நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தன் சொந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் பொழுது ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல் அதிகம் கிடைக்கும். வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. சகாய ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் சனிக்கிழமை தோறும் சனீஸ்வரரை வழிபட, அனைத்து வழிகளிலும் உங்களுக்கு நல்ல பலன்கள் வந்துசேரும்.

    விருச்சிக-சுக்ரன்

    மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் பொழுது கல்யாண கனவுகள் நனவாகும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    தனுசு-செவ்வாய்

    தனுசு ராசிக்கு மார்கழி 11-ந் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகி செல்கின்றார். உங்கள் ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொன் கொழிக்கும் நேரமாகும். எதிர்பார்த்த காரியங்கள் இப்பொழுது நிறைவேறும். பங்குச்சந்தையில் லாபம் உண்டு. புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட சொத்து இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    தனுசு-புதன்

    மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன்செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம-லாபாதிபதியானவர் புதன். அவர் சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகத்தை உருவாக்குவதால் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டி சென்று பணிபுரிய ஆசைப்பட்டவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். வாங்கல், கொடுக்கல்கள் சரள நிலைக்கு வரும். புகழ்பெற்ற மனிதர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வர்.

    பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சவாலான காரியங்களை கூட சாதுரியமாக செய்து புகழ் குவிப்பர். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் அனைத்தும் சாதகமாக அமையும். மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகளில் வெற்றி உண்டு. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் உண்டு.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 18, 19, 28, 29, 30,

    ஜனவரி: 3, 4, 5, 10, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    விருச்சகம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    உதவும் குணத்தால் உள்ளத்தில் இடம் பிடிக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியன், லாப ஸ்தானாதிபதி புதன் ஆகியோரும் சஞ் சரிப்பதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். லாபம் கூடுதலாகக் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள்அடுக்கடுக்காக வந்து சேரும். புகழ்மிக்கவர்களின் ஆதரவோடு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும்.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதுமே குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் குரு. எனவே இந்த வக்ர காலத்தில் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். நல்ல பலன்களைப் பெற குரு பகவானை வழிபடுவது நல்லது. குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்திலும், விரய ஸ்தானத்திலும் பதிவதால் குடும்ப ஒற்றுமை பலப்படும்.

    இடம், வீடு வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முன்னோர்கள் செய்த திருப்பணிகளை முறையாகச்செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணி புரியும் இடத்தில் பாராட்டும், புகழும் குவியும். பதவியில் இருப்பவர்கள் பக்கப்பலமாக இருப்பர்.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் 12-ம் இடத்தில் நீச்சம் பெறுவது யோகம் தான். விரயாதிபதி நீச்சம் பெறுவதால் விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். எந்தச் செயலையும் தொடங்கிவிட்டால் அதற்குரிய பொருளாதாரம் வந்து சேரும். அதே நேரம் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வரப்போகின்றார்.

    சுக்ரனுக்கு சொந்த வீடு துலாம் என்பதால் பலம் பெற்ற சுக்ரனால் பல வழிகளிலும் நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக சுபச்செலவுகள் அதிகரிக்கும். கல்யாண வயதடைந்த பிள்ளைகள் இருந்தால் அதற்காகப் பார்த்த வரன் முடியலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை கொடுத்தாலும் அதற்கேற்ற விதம் சம்பள உயர்வும் கொடுப்பர்.

    தனுசு-புதன்

    உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். லாப ஸ்தானாதிபதி புதன் கார்த்திகை 14ம் தேதி தன ஸ்தானத்திற்கு வருகின்றார். இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். பொருளாதார வளர்ச்சி கொஞ்சம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு வங்கிகளின் ஒத்துழைப்பும், வள்ளல்களின் ஒத்துழைப்பும் உண்டு. வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வும் உண்டு.

    விருச்சகம்

    ஐப்பசி மாத ராசிபலன்

    18.10.2023 முதல் 16.11.2023 வரை

    நல்ல யோசனைகளை அள்ளி வழங்கும் விருச்சிக ராசி நேயர்களே!

    ஐப்பசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகின்றது. எனவே குருமங்கள யோகம் உருவாகின்றது. மேலும் சூரியனும், புதனும் இணைந்து 'புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. எனவே தொழில் வெற்றி நடைபோடும். தொகை வரவு திருப்தி தரும். ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றாக வந்து உள்ளத்தை மகிழ்விக்கும்.

    சனி வக்ர நிவர்த்தி!

    ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகிறது. உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி. அவர் பலம்பெறும் இந்தநேரம் பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். அருள்தன்மை மிக்க உங்களுக்கு அடுத்து நடக்கப் போவதை யூகித்து அறியும் ஆற்றல் உள்ளதால் எதற்கும் கவலைப்பட மாட்டீர்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.

    குரு வக்ரம்!

    மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெற்றுச் சஞ்சரித்தாலும் அவரது பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் அமைப்பும் ஒருசிலருக்கு கைகூடும். அண்ணன்-தம்பிகள் அரவணைப்போடு எண்ணிய காரியங்களை எளிதில் முடிப்பீர்கள்.

    நீச்சம் பெறும் சுக்ரன்!

    ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி நீச்சம் பெறுவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப திடீர் முன்னேற்றங்களும், நல்ல மாற்றங்களும் வரலாம். அதே சமயம் 7-க்கு அதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால் வாழ்க்கைத் துணை வழியே கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியப்பட வைக்கும்.

    விருச்சிக புதன்!

    ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து நல்ல காரியங்களை நடத்திக் கொடுப்பர். வியாபாரம் சூடு பிடிக்கும். வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் வருமானம் கிடைத்து உள்ளத்தை மகிழ்விக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் துணிந்து எடுத்த முடிவால் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வந்து சேரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உருவாகும். பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். நல்லவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 20, 21, 22, 25, 26, நவம்பர் 5, 6, 10, 11, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.

    ×