என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 10 ஜனவரி 2025
பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 9 ஜனவரி 2025
பாராட்டும், புகழும் கூடும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். நிகழ்காலத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025
யோகமான நாள். முக்கியஸ்தர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2025
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபம் கிடைக்கும். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025
நினைத்தது நிறைவேறும் நாள். வங்கிகளில் சேமிப்பு உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 5 ஜனவரி 2025
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 4 ஜனவரி 2025
காரிய வெற்றிக்கு கணபதியை வழிபட வேண்டிய நாள். வரன்கள் வாயில் தேடி வரும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். உத்தியோக முயற்சி கைகூடும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 3 ஜனவரி 2025
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். சொத்துக்களால் லாபம் உண்டு. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 2 ஜனவரி 2025
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். வருமானம் திருப்தி தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். பயணத்தால் பலன் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 1 ஜனவரி 2025
அதிகாலையில் வரும் அலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2024
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். பாராட்டும். புகழும் கூடும். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2024
ஆனந்த வாழ்வு அமைய அனுமனை வழிபட வேண்டிய நாள். எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். வரவு திருப்தி தரும். புகழ் கூடும். தொழிலில் புதிய பங்கு தாரர்கள் வந்திணைவர்.






