என் மலர்
தனுசு
வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை
9.11.2025 முதல் 15.11.2025 வரை
தனுசு
லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும். ராசியை தனம் வாக்கு குடும்பஸ்தான அதிபதி சனிப கவான் பார்க்கிறார்.லட்சியமும், எண்ணங்களும் கனவுகளும் நிறைவேறும். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களையும் சனி பகவான் பெற்றுத் தருவார். இடமாற்றம் இருந்தாலும் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்காது.
மேலதிகாரியின் தொல்லை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். எதிர்பாலினத்தவரிடம் கவனமாக பழக வேண்டும். 10.11.2025 அன்று பகல் 1.03 முதல் 12.11.2025 அன்று மாலை 6.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். ஆரோக்கியத்தை பேணவும். ஆன்மீக வழிபாட்டில் கவனம் செலுத்தினால் மலை போல் வந்த துன்பம் பனி போல விலகும். தினமும் தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






