என் மலர்tooltip icon

    தனுசு

    வார ராசிபலன் 2.11.2025 முதல் 8.11.2025 வரை

    2.11.2025 முதல் 8.11.2025 வரை

    தனுசு

    முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும் வாரம். ராசியை சனி பகவான் பார்க்கிறார். அஷ்டமஸ் தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி குரு பகவான் சனி பகவானை பார்க்கிறார். வியாபாரத்தில் எதிர் பார்க்கும் லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. தொழிலில் ஏற்படும் போட்டியை சமாளிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு. இரண்டாவது திருமண முயற்சி கைகூடும்.

    அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் நன்மைகள் உண்டு. மாணவர்கள் ஆர்வமாக படிப்பார்கள். தான தர்மங்கள் செய்வதால் நிம்மதி அதிகமாகும். பெண்களுக்கு சொத்துக்கள் மற்றும் சொந்தங்களால் மகிழ்ச்சி கூடும். தடைபட்ட புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பங்குச் சந்தை முதலீடு லாபம் தரும். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் நீங்கும். பவுர்ணமி அன்று சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×