என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலமாக உடல் நலம் பாதிக்கலாம். செலவுகள் அதிகரிக்கும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாக பழகுவது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது.
தனுசு
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். பாதியில் பல பணிகள் நிற்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. அலைச்சலுக் கேற்ற ஆதாயம் கிடைக்காது.
தனுசு
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். உடன் பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். அயல்நாட்டு நிறுவனங்களில் இருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் மூலம் உத்தியோக முயற்சி கைகூடும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உள்ளம் மகிழும் செய்தி உடன்பிறப்புகள் வழியில் வந்துசேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். பொதுநலத்தில் ஈடுபடும்பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் வருவதற்கான அறிகுறி தோன்றும். திட்டமிட்ட பயணம் தாமதப்படும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும். முக்கியப்புள்ளிகளின் ஆதரவு கிடைக்கும். திருமண முயற்சி கைகூடும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மங்கலச் செய்தி மனை தேடி வரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
சந்தோஷம் கூடும் நாள். பொருளாதார நலன் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன்
புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக வங்கிகளில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். பணத்தேவைகள் உட னுக்குடன் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் உயரும். வீட்டிற்குத் தேவையான விலை பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.






