என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024
அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாள். பழகிய நண்பர்களால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர் பகை அகலும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
இன்றைய ராசிபலன் -27 அக்டோபர் 2024
பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும் நாள். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று நடைபெறும். கல்யாண முயற்சி கைகூடும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்துமுடிப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் தொய்வு ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் சுமை அதிகரிக்கும். தொழில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன் -25 அக்டோபர் 2024
சங்கடங்களை சந்திக்கும் நாள். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். நண்பர்கள் வழியில் விரயங்கள் உண்டு. தொழில் பங்குதாரர்களிடம் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் -24 அக்டோபர் 2024
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும். நண்பர்கள் பகையாகலாம். விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
தனுசு
இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். வியாபார விருத்தி உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024
நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் நாள். நேற்று நினைத்த காரியம் இன்று நடைபெறும். பிற இனத்தாரால் பெருமை வந்துசேரும். உத்தியோகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம்மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கடன்சுமை குறையும்.
தனுசு
இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய வாகனம் வாங்கும் யோகமுண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024
உறவினர் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும் நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
தனுசு
இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றங்கள் நன்மை தரும். பணப்பற்றாக்குறை அகலும். தாமதமாக சில வேலைகளை செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்கு முடித்து விடுவீர்கள்.






