என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2025
வளமான வாழ்விற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரியும். பலநாட்களாக திட்டமிட்ட காரிய மொன்று இன்று முடிவடையும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2025
கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும் நாள். தடைகள் விலகும். தனலாபம் வந்து சேரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். வாதாடும் வழக்குகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 19 ஜனவரி 2025
தேவைகள் பூர்த்தியாகும் நாள். உத்தியோகத்தில் உயர் பதவி பற்றிய தகவல் உண்டு. வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 18 ஜனவரி 2025
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொது வாழ்வில் புகழ் கூடும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள், வாகன மாற்றம் பற்றிய சிந்தனை தோன்றலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025
இனிய செய்தி வந்து சேரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொஞ்சம் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025
கையாளும் பொருட்களில் கவனம் தேவைப்படும் நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வருமானப் பற்றாக்குறை ஏற்படும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025
நட்பு பகையாகும் நாள். பேச்சிலும், செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
தனுசு
இன்றைய ராசிபலன் - 14 ஜனவரி 2025
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. வீடுமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2025
எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். திருமணத்தடை அகலும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 12 ஜனவரி 2025
மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் நாள். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலை ஒன்றை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 10 ஜனவரி 2025
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.






