என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் முன்னேற்றம் கூடும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 31 ஜனவரி 2025
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025
உயர்ந்த மனிர்களின் சந்திப்பு கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். பயணத்தால் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025
வீண் விவாதங்களில் இருந்து விடுபடும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி ஆதாயம் தரும். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2025
கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் காணும் நாள். எடுக்கும் செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பயணங்களின் மூலம் பணவரவு கிட்டும். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2025
வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். இனத்தார் பகை மாறும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும்.
தனுசு
வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை
26.1.2025 முதல் 1.2.2025 வரை
கவனமாக செயல்பட வேண்டிய காலம். ராசி அதிபதி குருவும் 6ம் அதிபதி சுக்ரனும் பரிவர்த்தனை பெறுகிறார்கள்.எதிர்மறை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும்.எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சீரான வேலையும், வருமானமும் கிடைக்கும். சிலருக்கு ஒப்பந்த அடிப்படையிலான வேலை கிடைக்கும்.உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
திறமையான வேலையாட்கள் கிடைப்பார்கள். பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். கொடுக்கல், வாங்கல் சீராகும். முன்னோர்களின் சொத்து பாகப் பிரிவினையில் முறையான பங்கீடு கிடைக்கும். முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய பலன் கிடைக்கும் காலம். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும்.வீட்டில் சுப காரியப் பேச்சு வார்த்தை நடைபெறும். தாய் வழிச் சொத்தில் இருந்த குழப்பங்கள் தாய்மாமா மற்றும் நண்பர்கள் உதவியுடன் முடிவுக்கு வரும். கால்நடை வளர்ப்பு, பண்ணைத் தொழில் மூலம் வருமானம் உண்டு. தை அமாவாசையன்று பட்சிகளுக்கு உணவு வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இன்றைய ராசிபலன் - 26 ஜனவரி 2025
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் ரீதியாக கேட்ட உதவியை நண்பர்கள் செய்து கொடுப்பர். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக்கொள்வர். நீண்ட நாளையப் பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிக்கும் நாள். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடன் இருப்பவர்களால் விரயம் உண்டு. தேக நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025
உடனிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 22 ஜனவரி 2025
குறை சொல்லியவர்களே பாராட்டும் நாள். பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை மாறும். இடைவிடாது செய்த முயற்சிக்கு இப்பொழுது பலன் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.






