என் மலர்
மீனம் - தமிழ் மாத ஜோதிடம்
மீனம்
ஐப்பசி மாத ராசிபலன்
18.10.2023 முதல் 16.11.2023 வரை
உழைப்பின் மூலமே உயர்வு காண இயலும் என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!
ஐப்பசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்றிருக்கின்றார். உங்கள் ராசியிலேயே ராகுவும் சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருக்கின்றார்கள். எனவே கால சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் உங்கள் ராசி அமைந்துள்ளது. எனவே ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கை உருவாகும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கரங்களில் புரளும். தொழில் மாற்றங்களும், இடமாற்றங்களும் கூட உருவாகலாம். யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்வதன் மூலம் தக்க பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
சனி வக்ர நிவர்த்தி!
ஐப்பசி 6-ந் தேதி சனி மகர ராசியில் வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு சனி பகவான் லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியாவார். அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறும் பொழுது லாபம் சிறப்பாக வந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். யாரையும் நம்பி எந்தப் பொறுப்புகளையும் ஒப்படைக்க இயலாது. பயணங்கள் அலைச்சல் தருவதாக இருக்குமே தவிர ஆதாயம் தருவதாக இருக்காது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இடம் வாங்குவது, வீடு வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கூடிக்கொண்டே சென்ற கடன் சுமை குறைய வழிபிறக்கும். தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகுவதாகச் சொல்லி அச்சுறுத்துவர்.
குரு வக்ரம்!
மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிநாதன் குரு தன ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால் பண நெருக்கடி கொஞ்சம் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் பணத்தை வைத்துக்கொண்டு செய்ய இயலாது. காரியத்தை தொடங்கி விட்டால் பணப்புழக்கம் வந்து சேரும். உறவினர்களால் சில உபத்திரவங்கள் ஏற்படலாம். குடும்ப ஒற்றுமை கொஞ்சம் குறையும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். தொழிலில் திடீர் மாற்றங்கள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் பிரச்சினைகள் வரலாம்.
நீச்சம் பெறும் சுக்ரன்!
ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகை கிரகமாவார். அவர் நீச்சம் பெறுவது நன்மை தான். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
விருச்சிக புதன்!
ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ம் இடத்திற்கு வரும்பொழுது பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் அகலும். ெவளிநாட்டில் பணிபுரிய ஒருசிலருக்கு அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைஞர்களுக்குப் பெருமை சேரும். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் அக்கரை கூடும். பெண்களுக்கு வருமானம் போதுமானதாக இருக்கும். உடல்நலனில் கவனம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 18, 19, 23, 24, 29, 30, நவம்பர் 3, 4, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்
மீனம்
புரட்டாசி மாத ராசிபலன்
18-09-2023 முதல் 17-10-2023 வரை
மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் மீன ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் குரு வக்ரம் பெற்றிருக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், உற்சாகக் குறைவும் உருவாகும். தடைகளும், தாமதங்களும் புதிய முயற்சிகளில் குறுக்கீடுகளும் வரலாம். லாபாதிபதி சனியும் வக்ரம் பெற்றிருப்பதால், பொருளாதாரத்தில் பற்றாக்குறை அகலும். எதையும் யோசித்து செய்வதன் மூலமே எண்ணங்கள் நிறைவேறும்.
புதன் வக்ரம்
புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியானவர் புதன். அவர் வக்ரம் பெற்றாலும், உச்சம் பெற்றிருப்பது யோகம்தான். கல்யாணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் கைகூடும். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு திருப்தி தரும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம் விற்பனையாகி அதிக லாபத்தை தந்து மகிழ்ச்சியைப் பெருக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டிலிருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்குச் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்தில் அடியெடுத்து வைப்பது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை மட்டுமல்ல, உடன்பிறப்புகளாலும் சில உபத்திரவங்கள் வரலாம். சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். 'பெற்றோர் மற்ற சகோதரர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தங்களுக்கு கிடைக்கவில்லையே' என்று ஆதங்கப்படுவீர்கள். தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் உண்டு.
துலாம் - புதன்
புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனஸ் தாபங்கள் நீங்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வரலாம். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளை செய்வீர்கள். நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானை வழிபடுவது நன்மைகளை வாரி வழங்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளைச் சாமர்த்தியமாகச் சமாளிக்க வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு பாராட்டும், புகழும் உண்டு. மாணவ - மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நல்லது. பெண்களுக்கு விரயங்கள் கூடுதலாக இருந்தாலும், தேவைக்கேற்ற பணம் வந்து சேரும். சுபச்செய்தி உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
செப்டம்பர்: 20, 21, 22, 26, 27, அக்டோபர்: 1, 2, 6, 7, 17. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
மீனம்
தமிழ் மாத ராசிபலன்கள்
18-08-2023 முதல் 17-09-2023 வரை
நன்மை தீமைகளைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கும் மீன ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, ராகுவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 'ராகுவைப் போல் கொடுப்பானுமில்லை' என்பது பழமொழி. அப்படிப்பட்ட ராகுவோடு இணைந்து குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். இருப்பினும் இம்மாதம் உங்கள் ராசிநாதன் குரு வக்ரமடைகிறார்.
லாப ஸ்தானத்திற்கு வரப்போகும் சனியும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே இம்மாத பிற்பாதியில் பொருளாதாரத்தில் பற்றாக்குறையும், புதிய முயற்சிகளில் தாமதமும் ஏற்படலாம். கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்போது பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி செலவிடுவீர்கள்.
சம்பள உயர்வின் காரணமாக ஒருசிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, நீண்ட தூரங்களில் வேலை பார்க்கும் சூழல் அமையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. இல்லத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் திருமண முயற்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
கன்னி - செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது பொருளாதார மேன்மை ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. வீடு, கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். இதுவரை உங்கள் ராசிக்கு விரயச் சனியாக இருந்த சனிபகவான் இப்பொழுது லாபச் சனியாக மாறுவார். சனி வக்ர இயக்கத்தில் சஞ்சரித்தாலும் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது. வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த சனி மாற்றம் ஓரளவு நன்மை செய்யும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.
வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். சனியின் பார்வை உங்கள் ராசியில் பதியப்போவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன் வக்ரம் பெறுவது யோகம்தான். குடும்ப ஒற்றுமை பலப்படும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
இடம், வீடு சம்பந்தப்பட்ட வகையில் தாமதப்பட்ட பத்திரப்பதிவு தடையின்றி நடைபெறும். வெளிநாட்டு வணிகம் பலன்தரும். உத்தியோகத்தை பொறுத்தவரை இலாகா மாற்றங்களும், சம்பள உயர்வும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுமையும், நிதானமும் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காண வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மாணவ - மாணவியர்களுக்கு அதிக முயற்சியும், கல்வியில் கூடுதல் கவனமும் செலுத்த வேண்டிய நேரம் இது. பெண்களுக்குப் பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஆகஸ்டு: 23, 24, 25, 29, 30, செப்டம்பர்: 4, 5, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.
மீனம்
தமிழ் மாத ராசிப்பலன்
17.7.23 முதல் 17.8.23 வரை
மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மீன ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதனான குரு, தன ஸ்தானத்தில் ராகுவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெற்றாலும், வக்ர இயக்கத்தில் சனி இருக்கிறார். எனவே வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை வரலாம். வரும் மாற்றங்கள் ஏற்றம் தருவதாகவே அமையும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள்.
மேஷ - குரு சஞ்சாரம்
நவக்கிரகத்தில் சுபகிரகமான குரு பகவான், இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் அவரது பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே உத்தியோகத்தில் உயர்பதவிகள் வரலாம். உற்ற துணையாக இருக்கும் நண்பர்கள் சுயதொழில் செய்யும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுக்கலாம். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடன்சுமை குறைய எடுத்த புது முயற்சி வெற்றிபெறும். எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் அகலும். இடமாற்றம் இனிமை தரும். நீண்ட நாட்களாக உடலோடு ஒட்டி உறவாடி இருந்த நோய் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
குருவின் பார்வை 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால், கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பழைய பங்குதாரர்களோடு ஏற்பட்ட பிரச்சினை அகலும். ஒரு சிலர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பி, அங்கேயே தொழில் செய்ய முன்வருவீர்கள். தனவரவு திருப்தி தரும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். தள்ளிப்போன காரியங்கள் அனைத்தும் தானாக நடைபெறும்.
சிம்ம - புதன்
ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் மறைவிடத்திற்கு வரும்பொழுது நன்மை செய்யும் என்பார்கள். அந்த அடிப்படையில் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.
உறவினர் பகை அகலும். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்த்துக்கு உயர்த்தப்படுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்களின் நட்பால் தகராறுகள் தானாக விலகும்.
வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றமும், ஆசிரியர்களின் ஆதரவும் உண்டு. பெண்களுக்கு பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 17, 27, 28, 29, ஆகஸ்டு: 2, 3, 8, 9. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.
மீனம்
தமிழ் மாத ராசிப்பலன்
உதவும் குணத்தால் உள்ளத்தில் இடம் பிடிக்கும் மீன ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும்.
மிதுன - புதன்
ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். ேமலும் அவர், சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்களும் பதவிகளும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபகாரியம் கை கூடும்.
சிம்ம - செவ்வாய்
ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகின்றது. எனவே 'குருமங்கல யோகம்' ஏற்படுகிறது. சுபச்செலவு அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். குருவின் பார்வை பதிந்த செவ்வாய் சனியைப் பார்ப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான சூழ்நிலை உருவாகும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்களும் வந்துசேரும். புதிய வாகனம் வாங்கி பயணிக்கும் யோகம் உண்டு.
சிம்ம - சுக்ரன்
ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். அவர் அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக இருக்கும். பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பெற்றோருடன் இருந்த பிரச்சினைகள் அகலும். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கண்ணியமிக்க நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் கூடும். புதிய பதவிகள் கிடைக்கும் யோகம் உண்டு. தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதியவர்களை சேர்க்க முன்வருவீர்கள்.
கடக - புதன்
ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். பற்றாக்குறை பட்ஜெட் மாறும். திரும்பிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். சுபவிரயங்கள் அதிகரிக்கும் நேரமிது. உடல்நலத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பங்கு வர்த்தகங்களால் பலன் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடும். பிள்ளைகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புகழும் அந்தஸ்தும் உயரும். மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்பெற எடுத்த முயற்சி வெற்றிபெறும். பெண்களுக்கு இல்லம்தேடி நல்ல தகவல் வரலாம். சுப காரியங்கள் கைகூடும். தாய் வழி ஆதரவு உண்டு. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 18, 19, 30, ஜூலை: 1, 2, 6, 7, 15, 16.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
மீனம்
தமிழ் மாத ராசிப்பலன்
15.5.23 முதல் 15.6.23 வரை
நம்பிக்கையான நண்பர்களைப் பெற்றிருக்கும் மீன ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு தன ஸ்தானத்தில் ராகுவோடு சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும் விதத்தில் அமையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். ஏழரைச் சனி தொடங்கிவிட்டதால், படிப்படியாக புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். இடமாற்றமும், வீடு மாற்றமும் இனிமை தரும் விதம் அமையும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.
ராகு-கேது சஞ்சாரம்
பின்னோக்கி நகரும் கிரகங்களில் ராகு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும், கேது 8-ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். தன ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். கொடுக்கல் - வாங்கல்களில் சுமுகநிலை உருவாகும். கேது பலத்தால் அலைச்சல் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வந்தாலும், செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும். வருமானப் பெருக்கத்தை முன்னிட்டு புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால் சர்ப்ப தோஷம் இருப்பதால் அதற்குரிய பரிகாரங்களையும், வழிபாடுகளையும் முறையாகச் செய்வது நல்லது.
கடக - சுக்ரன்
வைகாசி 16-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு நீச்சம் பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையைக் கண்ணும், கருத்துமாக செய்வீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். பெற்றோரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டு பெருமை காண்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பொதுவாக நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும் நேரம் இது.
ரிஷப - புதன்
வைகாசி 18-ந் தேதி ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான புதன், சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். இதனால் தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு வந்துசேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. பிரபலமானவர்களின் பின்னணியில் நல்ல காரியங்கள் முடிவடையும். கருத்து வேறுபாடுகள் அகலும். வாரிசுகளின் வளர்ச்சி பெருமைப்படத்தக்கதாக அமையும். உறவினர் வழியில் ஏற்பட்ட பகை மாறும்.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் கொஞ்சம் பொறுமையாக செயல்பட வேண்டும். தொழில் புரிபவர்களுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலிடத்தின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்துசேரும். மாணவர்கள் கல்விக்கான உதவி பெற்று பட்ட மேற்படிப்புக்கான வாய்ப்பைப் பெறுவர். பெண்களுக்குத் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தனவரவில் இருந்த தடைகள் அகலும். ஏழரைச் சனி நடைபெறுவதால் எதிலும் கொஞ்சம் விழிப்புணர்ச்சி தேவை. கணவன் - மனைவி ஒற்றுமைக்கு அனுசரணை அவசியம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 18, 19, 20, 23, 24, ஜூன்: 3, 4, 8, 9.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
மீனம்
தமிழ் மாத ராசிப்பலன்
14.4.2023 முதல் 14.5.2023
எதிர்கால சிந்தனையிலேயே எப்பொழுதும் மூழ்கியிருக்கும் மீன ராசி நேயர்களே!
சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். எனவே உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஊர்மாற்றம், இடமாற்றம், வீடுமாற்றம் போன்றவை எதிர்பார்த்தபடியே அமையும். நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். விரயச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை இப்பொழுது வாங்கி மகிழ்வீர்கள். ஏழரைச் சனி தொடங்கிவிட்டது. சனி பகவானை வழிபடுவதன் மூலம் சகல பாக்கியங்களையும் வரவழைத்துக் கொள்ள இயலும்.
சனியின் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவருக்கு சொந்த வீடு என்பதால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார். இருப்பினும் பொருளாதாரத்தில் நெருக்கடிகளை கொடுக்கலாம். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இது. அடிக்கடி உடல்நிலைத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். வாகனப் பயணங்களின் போது கவனம் தேவை. வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாமல் இருக்க வழிபாட்டிலும் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிகவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது.
மேஷ - குரு
சித்திரை 9-ந் தேதி உங்கள் ராசிக்கு 2-ம் இடமான மேஷ ராசிக்கு குரு பகவான் செல்கிறார். குரு பகவான் தன ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாகும். குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனிதமடைந்து அதற்குரிய ஆதிபத்யங்கள் சிறப்பாக நடைபெறப்போகின்றது. குறிப்பாக கடன்சுமை குறையும். 'ரணசிகிச்சை செய்தே குணமாக்க முடியும்' என்று சொன்ன மருத்துவர்கள், இப்போது 'சாதாரண சிகிச்சையே போதும்' என்று சொல்வர். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேரும். கூட்டு முயற்சியில் இருந்து விடுபட்டு தனித்து தொழில் செய்ய நினைப்பீர்கள்.
மிதுன - சுக்ரன்
சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு சுக்ரன் வருவது யோகம்தான். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டுச் சீர்வரிசைப் பொருட்களை வாங்குவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவீர்கள்.
இம்மாதம் பெருமாள் - லட்சுமி வழிபாடு பெருமைகளை வழங்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஏப்ரல்: 15, 20, 21, 25, 26, மே: 6, 7,8.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
மீனம்
தமிழ் மாத ராசிப்பலன்
15.3.2023 முதல் 13.4.23 வரை
சகிப்புத் தன்மையால் மனதை வெல்லும் மீன ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியிலேயே இருக்கிறார். அவரோடு சூரியனும், புதனும் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார்கள். எனவே செல்வாக்கு உயரும். திடீர் மாற்றங்கள் நல்ல விதமாக வந்து சேரும். கூட்டு முயற்சியில் இருந்து விலகித் தனித்து இயங்க முற்படுவீர்கள். இடமாற்றம், வீடு மாற்றங்கள் இனிமை தரும் விதம் அமையும். பற்றாக்குறை அகன்று பணத்தேவை பூர்த்தியாகும்.
இம்மாதம் 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். இந்த நிகழ்வு வரும் பங்குனி மாதம் 14-ந் தேதி வரை இருப்பதால் லாபம் வருவதில் ஒருசில சமயங்களில் தடைகள் உருவாகலாம். உதவி கிடைப்பதில் ஒருசிலருக்குத் தாமதமும் ஏற்படலாம். பொறுமையோடு செயல்படுவது நல்லது. புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் திருப்திகரமாக இருக்காது. நெருக்கடி நிலை அகல உழைப்பை மட்டுமே நம்ப வேண்டிய நேரம் இது.
மேஷ - புதன்
பங்குனி 15-ந் தேதி, உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தன ஸ்தானத்திற்கு செல்கிறார். இக்காலத்தில் வருமானம் திருப்தி தரும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். வாகன யோகம் உண்டு. நண்பர்களின் நல் ஆதரவோடு புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து, நல்ல காரியம் இல்லத்தில் நடைபெற வழி பிறக்கும்.
ரிஷப - சுக்ரன்
பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சகாய ஸ்தானாதிபதி சகாய ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம் நன்மைகள் ஓரளவு கிடைக்கும். என்றாலும், உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகைக்கிரகமான சுக்ரன் பலம்பெறுவதால், இன்பமும், துன்பமும் கலந்து இக்காலத்தில் வரும். காலையில் வரவு வந்தால் மாலையில் செலவாகிவிடும். உடன்பிறந்த சகோதரிகளுக்குள் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் இடமாற்றங்கள் உறுதியாகலாம். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காது. ஆனால் வருமானத்திற்கு ஏதேனும் ஒரு வழி பிறக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்கள், எதையும் யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. வீண் பிரச்சினைகளால் விரயங்கள் உண்டு. வியாபாரம், தொழிலில் உள்ளவர்கள் இயந்திரப் பழுதுகளையும், எதிர்பாராத செலவுகளையும் சந்திக்க நேரிடும். கலைஞர்களுக்கு போட்டிக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். மாணவ - மாணவிகள், தேவையற்ற நட்புகளைத் தவிர்த்து, தேர்வுகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு எதிர்பாராத செலவு இதயத்தை வாடவைக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் இல்லறம் நல்லறமாக அமையும்.
இம்மாதம் சிவபெருமான் வழிபாடு சிறப்பான வாழ்வை அமைத்துக் கொடுக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 15, 19, 24, 25, 29, 30, ஏப்ரல்: 9, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
மீனம்
தமிழ் மாத ராசிப்பலன்
13.2.2023 முதல் 14.3.2023 வரை
செய்வதை திருந்தச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் மீன ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியிலேயே பலம் பெற்றுச் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் சீராகும். பொருளாதாரப் பிரச்சினை அகலும். சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தடைகள் ஏற்படும். இருப்பினும் குரு பலத்தால் அவற்றை சமாளிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் குரு 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கின்றார். எனவே யோகங்கள் படிப்படியாக வந்து சேரும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுவதால் வருமானம் திருப்தி தரும். வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். தொல்லை தரும் எதிரிகள் விலகிச் செல்வர். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வெளிநாட்டு வணிகத்தில் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். 2-ல் வரும் ராகு திரண்ட செல்வம் தரும் என்பார்கள். எனவே பொருளாதாரம் உயரும். அதே நேரம் 8-ல் கேது இருப்பதால் ஆன்மிகச் செலவு அதிகரிக்கும்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகைக் கிரகமாக விளங்கும் சுக்ரன், உச்சம் பெறும் போது எதிரிகளின் பலம் கூடும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தடைகளும், தாமதங்களும் வந்துசேரும். இனம்புரியாத கவலை மேலோங்கும். உறவினர்கள் உங்கள் மீது குற்றம் சாட்டுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பணி ஓய்விற்குப் பிறகு வரவேண்டிய தொகை வராமல் நிலுவையில் நிற்கலாம்.
கும்ப - புதன் சஞ்சாரம்
மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமான புதன், 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது நற்பலன்களை வழங்கும். பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறுவது யோகம்தான். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். அவர் 2-ம் இடத்தில் சஞ்சரித்து, 8-ம் இடத்தைப் பார்ப்பதால், இழப்புகளை ஈடுசெய்ய நல்ல வாய்ப்புகள் வரும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கிடைக்கும். உத்தியோக முயற்சி கைகூடும்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து லாப ஸ்தானத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்களில் தாமதம் ஏற்படும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் திருப்தி தராது. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு குறையலாம். இக்காலத்தில் சனி மற்றும் செவ்வாய்க்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.
இம்மாதம் ராகு வழிபாடு யோகம் சேர்க்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 13, 14, 19, 20, 25, 26, மார்ச்: 2, 3, 12, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.
மீனம்
தமிழ் மாத ராசிப்பலன்
16.12.22 முதல் 14.1.23 வரை
முயற்சி ஒன்றே வாழ்வில் முன்னேற வழி என்றுரைக்கும் மீன ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, உங்கள் ராசியிலேயே பலம் பெற்று சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை உங்கள் ராசியின் மீது பதிகிறது. எனவே பொருளாதார நிலை திருப்தி தரும்; என்றாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும்.
புதன் வக்ர இயக்கம்
உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். தாய்வழி ஆதரவு உண்டு. வீடு வாங்கும் முயற்சியில் இதுவரை இருந்த குழப்பங்கள் அகலும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும். தெய்வப் பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கலாம்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 3, 8-க்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கின்றார். அவர் 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடன்பிறப்புகளுக்கு வேலை கிடைத்து அதன் மூலமும் வருமானம் வரலாம். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். வருங்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணி ஓய்வு பெற்ற பிறகும் கூட நீங்கள் பணிபுரியும் வாய்ப்பு உண்டு.
புதன் வக்ர நிவர்த்தி
மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற்படலாம். தொல்லை தரும் எதிரிகளின் பலம் மேலோங்கும். 'தீட்டும் திட்டங்களை செயல்படுத்த இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். மனக்குழப்பம் உருவாகும். வருமானம் திருப்தி தரும் என்றாலும் விரயங்கள் கூடுதலாக இருக்கும். புதுமுயற்சிகளில் ஈடுபடும்பொழுது பொறுமையும், நிதானமும் தேவை.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மார்கழி 29-ந் தேதி ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொகை வரவும் திருப்தி தரும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து புதிய தொழில் ஒன்றை தொடங்க முன்வருவர்.
செவ்வாய் 9-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குவதால் பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் அல்லது இல்லம் வாங்கிக் குடியேற வேண்டுமென்று நினைத்தவர்களுக்கு அதுவும் கைகூடும். பெற்றோர் வழி உறவில் நெருக்கம் ஏற்படும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தீர்த்த யாத்திரை மற்றும் ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கையை வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 21, 22, 26, 27, ஜனவரி: 1, 2, 6, 7. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
மீனம்
இந்த வார ராசிப்பலன்
17.11.21 முதல் 15.12.21 வரை
ஒப்படைத்த பொறுப்புகளை ஒழுங்காகச் செய்து முடிக்கும் மீன ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு விரய ஸ்தானத்தில் இருக்கின்றார். மேலும் சனியின் பார்வையும் உங்கள் ராசி மீது பதிகின்றது. எனவே விரயங்கள் கூடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.
செவ்வாய்-சனி பார்வைக் காலம்
மாதத் தொடக்கத்திலிருந்து கார்த்திகை 20-ந் தேதி வரை செவ்வாய்-சனியின் பார்வை இருக்கின்றது. இக்காலத்தில் எதிலும் விழிப்புணர்ச்சியோடு இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை அதிகரிக்கும். திடமான உடல்வாகு இருந்தாலும் திடீர் தாக்குதல்கள் ஏற்படும். தொழிலில் முழுமையாக மனதைச் செலுத்த முடியாது. உறவினர்கள் உங்களை விட்டுப் பிரிய நேரிடலாம். இதுபோன்ற நேரத்தில் சுய ஜாதக ரீதியாக திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளைத் தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.
விருச்சிக புதனின் சஞ்சாரம்
கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் சில நல்ல சம்பவங்கள் நடைபெறலாம். வெளிநாட்டிலிருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தத்தளித்த உறவினர்கள் இப்பொழுது திரும்பி வரும் வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்களை முறையாக பிரித்துக் கொள்வதில் மும்முரம் காட்டுவீர்கள். பாதியில் நின்ற கட்டிடப்பணியை மீதியும் தொடருவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.
தனுசு புதனின் சஞ்சாரம்
கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு சேர்ந்து புத சுக்ர யோகத்தை உருவாக்குகிறார். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உடன்பிறப்புகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மகர சுக்ரனின் சஞ்சாரம்
கார்த்திகை 19-ந் தேதி மகர ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது தொழிலில் நண்பர்களை நம்பி விரயங்களை அடைய நேரிடும். விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நேரமிது. சகோதர வழியிலும் பிரச்சினைகள் தலைதூக்கும். ஆரோக்கியத்திற்காக செலவிடும் சூழ்நிலை உண்டு.
விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்
கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். சொத்துக்களை பங்கு பிரித்துக் கொள்வதில்இருந்த பிரச்சினை அகலும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். நடராஜர் வழிபாடு நலம் சேர்க்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 17, 18, 23, 24, டிசம்பர்: 3, 4, 5, 8, 9, 14, 15 மகிழ்ச்சி தரும் வண்ணம்: கரும்பச்சை.
மீனம்
தமிழ் மாத ராசிப்பலன்
வளைந்து கொடுத்து வாழ்வில் முன்னேறும்் மீன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உச்சம் பெற்ற புதன் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திருப்பங்கள் ஏற்படும்.
துலாம் - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ஐப்பசி 2-ந் தேதி துலாம் ராசியில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். அஷ்டமாதிபதி அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் கூடுதல் கவனம் தேவை. இழப்புகளும், விரயங்களும் வந்து சேரும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றம் திருப்தி அளிக்காது. நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ளமாட்டார்கள். நாடு மாற்றம், வீடுமாற்றம் போன்றவை எதிர்பார்த்தபடி வந்து சேரும். சகோதர வர்க்கத்தினர் சச்சரவின் காரணமாக உங்களை விட்டு விலக நேரிடலாம். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது.
துலாம் - புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், இப்போது அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கிறார். ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன் 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல வாய்ப்புகளை வர வழைத்துக் கொடுப்பார். கரைந்த சேமிப்புகளை மீண்டும் உயர்த்துவீர்கள். கல்யாணம் போன்ற சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெற எடுத்த முயற்சி கைகூடும். கல்வி, வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஏதேனும் புது முயற்சிகளில் நீங்கள் ஈடுபட்டிருந்தால் அதில் அனுகூலம் கிடைக்கும்.
மிதுன - செவ்வாய் வக்ரம்
ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். மேலும் மகரத்தில் உள்ள சனியையும் அவர் பார்க்கிறார். சுக ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஆரோக்கியத் தொல்லைகள் கூடும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட தொல்லைகளால் அவதிப்பட நேரிடும். 'பணவிரயம் அதிகரிக்கிறதே' என்று கவலைப்படுவீர்கள். இந்தக் காலத்தில் பரிகாரங்களும், வழிபாடுகளும் கைகொடுக்கும்.
விருச்சிக - புதன் சஞ்சாரம்
ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் 9-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். வீடு கட்டுவது, வீடு வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.
விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்
ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கிருந்து கொண்டு சகாய ஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே சில நல்ல காரியங்கள் நடைபெறும் நேரம் இது. கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பர். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஊதிய உயர்வு இப்பொழுது கிடைப்பதற்கான அறிகுறி தென்படும்.
குரு வக்ர நிவர்த்தி
உங்கள் ராசிநாதன் குரு இதுவரை மாதத் தொடக்கத்தில் வக்ரமாக இருக்கிறார். ஐப்பசி 30-ந் தேதி அவர் வக்ர நிவர்த்தியாகிறார். எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்பை உங்களிடம் ஒப்படைப்பதோடு, சம்பள உயர்வும் கொடுக்கலாம். பொதுவாக ராசிநாதன் வலுப்பெற்று இருக்கும் இந்த நேரத்தில், நீங்கள் எடுக்கும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கவனத்தோடு அனைத்தையும் கையாளுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 27, 28, 29, நவம்பர்: 2, 3, 7, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.






