என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் செலவு செய்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 28 ஆகஸ்ட் 2024
இனிமையான நாள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு. தொழில் வளர்ச்சிக்கு பால்ய நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024
யோகமான நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 26 ஆகஸ்ட் 2024
திறமை பளிச்சிடும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தெய்வ வழிபாடு செல்வ நிலையை உயர்த்தும். உத்தியோகத்தில் வாழ்க்கைத்துணை பணிபுரியுமிடத்திற்கே உங்களுக்கு மாறுதல் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 25 ஆகஸ்ட் 2024
யோகமான நாள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வரலாம். வியாபார வளர்ச்சி உண்டு. புது முயற்சியில் வெற்றி கிட்டும். கல்யாண கனவுகள் நனவாகும். புதிய ஒப்பந்தங்கள் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 24 ஆகஸ்ட் 2024
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். உறவினர்கள் வழியில் ஆதரவு உண்டு. வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தொழில் ரீதியாக வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 23 ஆகஸ்ட் 2024
பணவரவு திருப்தி தரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்ட் 2024
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். இழுபறி நிலையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும். தொழிலில் வருமானம் உயரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 21 ஆகஸ்ட் 2024
நன்மைகள் நடைபெறம் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப் பிரச்சனைகள் தீரும். தொழில் முன்னேற்றத்திற்கு தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவலொன்று வந்து சேரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 20 ஆகஸ்ட் 2024
செல்வநிலை உயரும் நாள். திருமண பேச்சுகள் முடிவாகும். பொது நலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 19 ஆகஸ்ட் 2024
வளர்ச்சிக்கான வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.






