என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024
மகிழ்ச்சி கூடும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024
விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். பணவரவில் தாமதங்கள் ஏற்படும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் சிறு தொல்லைகள் ஏற்படும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024
மனக்குழப்பம் அகலும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரும். வரவு எதிர்பார்த்ததை விட உயரும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024
புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்று நினைப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024
விரோதங்கள் விலகும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். காரிய வெற்றிக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணையாக இருப்பர். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுகமாக முடியும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024
பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பகை விலகும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். தொலைதூரப் பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். தொழிலில் வளர்ச்சி உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024
பலநாட்களாக எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.






