என் மலர்tooltip icon

    மீனம் - இன்றைய ராசி பலன்கள்

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்துசேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறரைப் பற்றி குறை பேசாமல் இருப்பது நல்லது. மருத்துவச் செலவு அதிகரிக்கும். தொழிலில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வருமானம் உயரும். பூர்வீகச் சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்குவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2025

    சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். துணிந்து எடுத்த முடிவில் வெற்றி கிட்டும். வியாபாரத்தை விரிவு செய்ய முன் வருவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2025

    திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக்கொள்ள முன்வருவீர்கள்.

    மீனம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2025

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தடை அகலும். பிறருக்காகப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இடம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு, இடம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனநிலை அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையும். குடும்பத்தினர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். . பயணங்களால் விரயம் உண்டு.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரிய நண்பர்கள் முன்வருவர். வராமல் முடங்கியிருந்த பாக்கிகள் வந்து மகிழ்விக்கும். உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    பொருளாதார நிலை உயரும் நாள். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகளைச் சரிசெய்யும் முயற்சி கைகூடும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

    ×