என் மலர்
துலாம் - வார பலன்கள்
துலாம்
இந்தவார ராசிபலன்
20.11.2023 முதல் 26.11.2023 வரை
நன்மையும், மேன்மையும் உண்டாகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் மூன்று கிரகச் சேர்க்கை. லவுகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக பொருட்கள் மீதும் நாட்டம் சற்று மிகுதியாகும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் கிடைக்கும். உடன் வேலை பார்ப்பவர்களால் ஏற்பட்ட கவுரவக் குறைவு அகலும். சனி, செவ்வாய் சம்பந்தம் விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகி விடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும். சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும்.
ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களுக்கு ஏற்றமான காலம்.தம்பதிகளிடையே நிலவிய கருத்து வேற்றுமை மறையும். திருமண முயற்சி பலிக்கும்.கலைத் துறையைச் சேர்த்த பெண்களுக்கு வாய்ப்புகள் தடைபடும். வீண் செலவுகளை குறைத்து வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு நிதானமாக செயல்பட்டால் கடன் சுமை குறையும். பவுர்ணமியன்று அஷ்டலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
13.11.2023 முதல் 19.11.2023 வரை
நன்மையும், மேன்மையும் உண்டாகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் மூன்று கிரகச் சேர்க்கை லெளகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று கூடும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும்.தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் கிடைக்கும். உடன் வேலை பார்ப்பவர்களால் ஏற்பட்ட கவுரவக் குறைவு அகலும். சனி, செவ்வாய் சம்பந்தம் விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகி விடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும். சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுதியாகும்.
ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களுக்கு ஏற்றமான காலம்.தம்பதிகளிடையே நிலவிய கருத்து வேற்றுமை மறையும். திருமண முயற்சி பலிக்கும்.கலைத் துறையைச் சேர்த்த பெண்களுக்கு வாய்ப்புகள் தடைபடும். வீண் செலவுகளை குறைத்து வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு நிதானமாக செயல்பட்டால் கடன் சுமை குறையும். சூரசம்ஹர காட்சியை பார்க்க எதிரிகள் தொல்லை அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
6.11.2023 முதல் 12.11.2023 வரை
தடைகள் தகறும் வாரம். ராசியில் உள்ள செவ்வாயை குரு பார்ப்பது குரு மங்களயோகம். குடும்பத்தில் நிலவிய குழப்பம் மறைந்து குடும்பம் தெளிந்த நீரோடையாக இருக்கும். தொழில் வேலை போன்ற ஜீவன அமைப்புகள் வலிமை பெறும். கடன்பட்டாவது சொந்த வீடுகட்டுவீர்கள். வீட்டை புதுப்பிப்பது, புதிய வாகனம் வாங்குவது என சொத்து தொடர்பான வேலைகள் செய்ய ஏற்ற நேரம். ஆன்மீக நாட்டம் மிகுதியாகும். வரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய அளவில் பணம் உங்களை மகிழ்விக்கும். தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.
மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும். திருமணத் தடை அகலும். புத்திரப் பிராப்தம் கிடைக்கும்.உத்தியோகத்தில் நிலவிய தடை, தாமதங்கள் சீராகும். தடைப்பட்ட ஊதியம் மொத்தமாக வந்துவிடும். வேலையில் 'மெமோ' வாங்கியவர்களுக்கு மீண்டும் சேர உத்தரவு வரும். சிலருக்கு காதல் திருமணம் நடைபெறும். வேற்று மொழி பேசுபவர்கள் வெளிநாட்டவர் தொடர்பு ஏற்படும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் தடைகளை தகர்க்க முடியும். தீபாவளியன்று தனலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
30.10.2023 முதல் 5.11.2023 வரை
நம்பிக்கைகள் நிறைவேறும் வாரம். ராசி ஏழாமிடத்தை விட்டு ராகு கேதுக்கள் விலகியதால் உங்களின் செயல்பாடுகளில் நிதானமும், தன்னம்பிக்கையும் இருக்கும். எதிரி, போட்டி பொறாமைகளை சமாளிக்கும் திறன் உண்டாகும்.இளைய சகோதரர் மற்றும். தாய்மாமன் உதவியால் தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் ஒத்துழைப்பால் மன நிம்மதி உண்டாகும். சிலருக்கு ஊர் மாற்றத்தால் சில முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளின் நலனுக்காக கடன் வாங்கலாம். திருமண முயற்சி கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்.
கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும்.சொந்த வீட்டில் குடிபுகுவீர்கள். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். 30.10.2023 காலை 10.30 முதல் 1.11.2023 மாலை 4.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் உண்மையாகவும், நேர்மையாகவும் உழைத்தாலும் நிர்வாகம் அதை மதிக்காததால் வேலையை விட்டு விலகுவீர்கள். மகாலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
23.10.2023 முதல் 29.10.2023 வரை
தன்னம்பிக்கையும், தைரியமும் மேலோங்கும் வாரம். ராசி ஏழாமிடத்தை விட்டு ராகு, கேது விலகுவதால் முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும்.தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வியாபாரம் பெருகும். உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும். தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும்.பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும். வைத்தியத்தால் ஆரோக்கியம் சீராகும்.இந்த வாரம் தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கி மகிழ்வீர்கள். கிரகணம் முடிந்த பிறகு மகாலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
16.10.2023 முதல் 22.10.2023 வரை
மனக்கவலைகள் அகலும் வாரம். ராசிக்கு, ராசி அதிபதி சுக்ரனுக்கும் குருப்பார்வை. வெகு விரைவில் ராசி ஏழாமிடத்தை விட்டு ராகு கேதுக்கள் விலகுகிறார்கள். இது துலாம் ராசிக்கு மிக அற்புதமான நல்ல பலன் தரும் காலம். எண்ணங்கள் ஈடேறும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். சுமாரான தொழில் சூப்பரான தொழிலாகி வருமானம் அதிகரிக்கும்.அரசாங்க ஒப்பந்த தாரர்களுக்கு சாதகமான காலம்.உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தர பணி கிடைக்கும்., பழைய வீட்டை வாங்கி புதுபித்து குடி புகுவீர்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகள், பாகப்பிரிவினை சிக்கல்கள் தீரும்.
தடைபட்ட திருமணம் நிச்சயமாகும். காதல் கலப்பு திருமணம் நடக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்கு சாதகமாகும்.செயற்கை கருத்தரிப்பிற்கு ஏற்ற காலம். கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் வீடு தேடி வரும். இடப்பெயர்ச்சி உண்டாகும். பிற்கால தேவைக்காக அசையாச் சொத்தில் முதலீடு செய்ய ஏற்ற நேரம். விரக்தியில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் புதிய பாதை புலப்படும். வீண் கவலைகள் அகல நவகிரகங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிபலன்
9.10.2023 முதல் 15.10.2023 வரை
மகிழ்ச்சியான வாரம். 2,7-ம் அதிபதி செவ்வாய் குருப் பார்வையில் ராசியில் சஞ்சாரம் செய்வதால் ராகு/கேதுக்கள் திருக்கணித பஞ்சாங்கப்படி 30.10.2023 அன்று ராசி 7-ம்மிடத்தை விட்டு விலகுகிறார்கள். வாக்கு வன்மை பெறும். வாக்கு நிறைவேறுதல் உண்டாகும். பேச்சில் தெய்வத்தன்மை வெளிப்படும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அறுசுவை உணவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களும் ஜாதகரும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையாக அன்பாக இருப்பார்கள். தனவிருத்தி உண்டு. ஆசிரியர், ஜோதிடம், சட்டம், புரோகிதம், கூட்டுத் தொழில், உணவுத்தொழில், அயல்நாட்டு தொடர்பு போன்ற தொழில்களில் நல்ல வருமானம் உண்டாகும். தந்தை ,தந்தை வழி உறவினர்கள் மூலம் சொத்து ஆதாயம், குலத் தொழில் வருமானம், உண்டு. பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தலாம் , புதிய தொழில் ஒப்பந்தம் செய்யலாம். அதற்கு தேவை யான நிதி உதவி கிடைக்கும்.உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். மகாளய அமாவாசையன்று உடல் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
2.10.2023 முதல் 8.10.2023 வரை
திருமணத் தடை அகலும் வாரம். ராசியில் 2,7ம் அதிபதி செவ்வாய் குருப்பார்வையில் உள்ளார். இதுவரை திருமணத்திற்கு பிடி கொடுக்காத வர்களுக்கும், கோட்சார ராகு, கேதுவால் திருமணத் தடையை சந்தித்தவர்களுக்கும் திருமணம் குருவருளாலும் திருவருளாலும் இனிதே நடைபெறும். மனைவியின் பேச்சிற்கு கட்டுப்படாத கணவன்மார்கள் மனைவியின் வார்த்தைக்கு செவி சாய்ப்பார்கள். உடலில் கால்சிய சத்து கூடும். ரத்தம் சுத்தமாகும்.பல், கண் தொடர்பான சிகிச்சை செய்ய உகந்த காலம். செல்வ வளம் மிகும். எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகமாகும். எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாதவர்களுக்கு கடன் தொகை அல்லது வட்டி தள்ளுபடியாகும். மாமியாரால் ஏற்பட்ட வருத்தங்கள் சீராகும். சிலர் பிள்ளைகளின் முன்னேற்ற செலவிற்கு கடன் பெறலாம். புதிய வாய்ப்புகளால் தளர்ந்த தொழில்கள் தலை தூக்கும். 5.10.2023 அன்று காலை 6.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனசஞ்சலம் உருவாகலாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன்
25.9.2023 முதல் 1.10.2023 வரை
துன்பம் குறைந்து இன்பம் பெருகும் வாரம். ராசிக்கு குருப் பார்வை. தொழில் ஸ்தானத்தில் நிற்கும் ராசி அதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் பருவ வயது எட்டியும் பருவமடையாத பெண் குழந்தைகள் பருவமடைவார்கள். உயிரின வளர்பில் ஆர்வம் அதிகரிக்கும். வீடு கட்டும் எண்ணமும் நில புலன் வாங்கும் எண்ணமும் இல்லாதவர்களுக்கு சொத்து சேரலாம். சிலர் தாயாரின் அன்பை சாதகமாக்கி தாயாரின் வீடு, மனையை தன் பெயரில் எழுதி வாங்குவார்கள். திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும்.குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.வீட்டில் அடிக்கடி மங்களகரமான விசேஷங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.மாமியார், மருமகள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும்.நகை புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள்.வாழ்க்கைத் துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம்.செலவுகள் அதிகமாகும். ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். மகாளய பட்ச காலத்தில் பட்சிகளுக்கு தானியம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
18.9.2023 முதல் 24.9.2023 வரை
எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் மேலோங்கும். வியாபாரம் பெருகும். புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம். அரசு வகை ஆதாயம் உண்டு. கண்கள் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் தேவை. குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். படித்து முடித்த மகள் மகனுக்கு வேலை கிடைத்து விடும். வெளிநாட்டில் வாழ்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். தேவையற்ற கற்பனை, பயம் உருவாகி மறையும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்க ளின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். திருமணமான இளம் வயது பெண்கள் கருவுறுவார்கள். அரசியலில் ஈடுபட்டோ ருக்கு விபரீத ராஜ யோக காலமாகும். மகிழ்ச்சியை அதிகரிக்க குருவாயூரப்பனை வழி படவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
11.9.2023 முதல் 17.9.2023 வரை
ஆதாயமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம். லாப ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் ஆட்சி என கிரகங்களின் இயக்கம் சாதகமாக உள்ளது.பண வரவு அமோகமாக இருக்கும்.பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். அட மான நகைகள் வீடு வந்து சேரும். வராக்கடன் வசூலாகும். சேமிப்பு உயரும். பிள்ளை களின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.குடும்ப உறவுகளின் அனுசரணையும் ஆதரவும் மகிழ்வைத் தரும். குடும்பத்திற்குத் தேவையான உயர்ரக பொருட்களை வாங்குவீர்கள். அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு.குழந்தைபாக்கியம் உண்டாகும். இழந்த பதவி தேடி வரும்.பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.அரசியல்வாதிகளுக்கு ஆதாயமான காலம். ஆரோக்கிய தொல்லைகள் சீராகும். பச்சைக் கற்பூர அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
4.9.2023 முதல் 10.9.2023 வரை
கவலைகள் விலகி இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வக்ர நிவர்த்தி பெறுவதால் தன யோகம் சிறப்பாக அமையும். விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். பங்குச்சந்தை வியாபாரம் அமோகமான லாபத்தை கொடுக்கும். உற்சாக மனநிலையில் இருப்பீர்கள். ராசிக்கு 7-ல் குரு வக்ரமடைவதால் சிலர் வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலை உருவாகும். திட்டமிட்ட திருமணங்கள் சிலருக்கு தள்ளிப் போகலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். 5.9.2023 அன்று மாலை 3 மணி முதல் 7.9.2023 இரவு 11.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அஜீரணக்கோளாறு ஏற்படும் என்பதால் உணவு விசயத்தில் கவனம் தேவை.உத்தியோக ரீதியான மறைமுக எதிர்ப்புகள் அகல தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






