என் மலர்
துலாம் - வார பலன்கள்
துலாம்
இந்தவார ராசிபலன்
12.2.2024 முதல் 18.2.2024 வரை
ஆரவாரமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் உச்சம் பெற்ற 2,7-ம் அதிபதி செவ்வாய் மற்றும் பாக்கியாதிபதி புதனுடன் சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உச்ச செவ்வாயைச்சேரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒப்பந்த அடிப்படையிலான புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தடைபட்ட வாடகை வருமானங்கள் வந்து சேரும்.
சொத்துக்க ளின் மதிப்பு உயரும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்,உடன் பிறப்புகளால் உயர்வுகள் உண்டாகும். அரசியல் மற்றும் பொது காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத வாங்கி மகிழ்வீர்கள்.16.2.2024 மதியம் 2.43 மணி முதல் 18.2.2024. இரவு 9.54 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பல சாதகங்கள் நடந்தாலும் இனம் புரியாத மன உளைச்சலும் இருக்கும். தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
5.2.2024 முதல் 11.2.2024 வரை
தடைகள் தகறும் வாரம். 2, 7-ம் அதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் லாப அதிபதி சூரிய னுடன் சுக ஸ்தானத்தில் சேர்க்கை. உத்தியோக தொழில் மாற்றங்கள் மனதிற்கு பிடித்த விதத்தில் அமையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணிபுரிபவர்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பணி நிரந்தரமாவதில் தாமதம் ஏற்பட லாம். வீட்டை பழுது பார்ப்பது, புதிய சொத்துகள், வாகனம் வாங்குவது போன்ற சம்பவங்கள் நடக்கும். திட்டமிட்ட நீண்ட தூர பயணங்கள் நிறைவேறும். குடும்ப எதிர்கால நலனிற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பி ரவேசம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும்.
ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பொதுக் காரியங்கள், அரசியல் ஆசை துளிர் விடும். துலாம் ராசியினருக்கு தாத்தா பாட்டியாகும் யோகம் உள்ளது. பெண்களுக்கு தந்தையின் பூர்வீகச் சொத்தில் பங்கு கிடைக்கும். சிலருக்கு கண், காது சார்ந்த பிரச்சினைக்கு மருத்துவம் செய்ய நேரும். விவசாயிகளுக்கு அரசு வகை ஆதாயம் கிடைக்கும். தை அமாவாசையன்று சுமங்கலிப் பெண்களுக்கு இயன்ற தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
29.1.2024 முதல் 4.2.2024 வரை
மனதில் சந்தோஷம் நிலவும் வாரம். பாக்கியாதிபதி புதனும் லாபாதிபதி சூரியனும் சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயலில் ஆர்வம் கூடும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நலன் கருதி எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும்.தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தடைபட்ட காரியம் தடையின்றி அமையும்.குடும்ப வாழ்க்கையில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
சேமிப்பில் கவனம் அதிகமாகும். உடல் நலம் சீராகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். திருமண முயற்சியில் வெற்றி நிச்சயம். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். கணவன் மனைவி உறவு பலப்படும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டு. எதிரிகள் தாமாக விலகுவார்கள். கால பைரவரை வழிபட சிறப்பான எதிர்காலம் அமையும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
22.1.2024 முதல் 28.1.2024 வரை
நிம்மதியான வாரம். ராசி அதிபதி சுக்ரன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகளின் வெற்றியால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பீர்கள். பொருளாதார பற்றாகுறை அகலும். தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். பிராயணம் செய்வதில் நாட்டம் ஏற்படும்.பிள்ளைகளின் முன்னேற்றம் நிம்மதியை அதிகரிக்கும். அரசு உத்தியோகத்திற்கு பணி நியமன ஆணை வந்து சேரும்.
சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் . பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். 22.1.2024 அன்று பகல் 4.22 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம்.உங்கள் பிரச்சினையை மற்றவர்களிடம் கூறி அனுதாபம் பெறுவதை தவிர்க்கவும். தைப்பூசத்தன்று மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
15.1.2024 முதல் 21.1.2024 வரை
எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும் வாரம். இது வரை ஒரு தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் இன்னொரு தொழில் செய்து எதிர்காலத்திற்கு சேமிக்க திட்டமிடலாம். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வீர்கள். ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். லாப அதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் சொத்துக்களின் மதிப்பு கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் பாக்கியம் உண்டாகும். கமிஷன் அடிப்படை யான தொழில் செய்பவர்களின் வருமானம் கூடும்.வராக்கடன்கள் வசூலாகும். எனினும் செலவு விசயத்தில் நிதானமாக இருக்க லேண்டும் பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணத்திற்கு வரன் அமையும். மறுமண முயற்சி நிறைவேறும். பயணங்களால் பயன் கிடைக்கும்.பிள்ளைகளுக்கு கல்வியில் நாட்டமும், ஆர்வமும் அதிகரிக்கும். உயர்கல்வி முயற்சி வெற்றி தரும். 20.1.2024 அன்று காலை 8.52-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வேலைப்பளு மிகுதியாகும்.மன அமைதி குறையும். சிறுசிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். பேச்சைக் குறைப்பது நல்லது. பொங்கல் பண்டிகையன்று கூலித் தொழிலாளிகளின் தேவையறிந்து உதவவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
8.1.2024 முதல் 14.1.2024 வரை
மாற்றங்கள் நிறைந்த வாரம்.ராசி அதிபதி சுக்ரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில், முயற்சி ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராசிக்கு குரு பார்வை என முக்கிய கிரகங்களின் சேர்க்கை துலாம் ராசிக்கு சாதகமாக உள்ளதால் தொழிலில் இருந்த தடைகள் மெதுவாக விலகி மறுபடியும் துளிர்க்கும். உயர்கல்வி முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளின் திருமணத்திற்கு சீர்வரிசைகள் வாங்குவதில் ஆர்வம் செலுத்து வீர்கள். வீடு, வாகனம் பழுது நீக்கம் செய்ய வேண்டிய நிலை உண்டாகும். வாடகை வீட்டில் வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள். சகோதர, சகோதரி களுடன் நிலவிய கருத்து வேறுபாடு குறையும்.
மாதச் சம்பளதாரர்களுக்கு தொடர்ந்து வந்த பற்றாக்குறை பட்ஜெட் தீரும். கணவரின் முன்னேற்றம் மகிழ்ச்சியை கூட்டும். தடைபடாத பண வரவு இருந்தாலும் செலவையும் கட்டுப்ப டுத்த முடியாது.திருட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். இடப்பெயர்ச்சி நடக்கும். அமாவாசையன்று லட்சுமி குபேர பூஜை செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
1.1.2024 முதல் 7.1.2024 வரை
லட்சியங்களும் கனவுகளும் நிறை வேறும் வாரம். பாக்கிய அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் முயற்சி,உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறக் கூடிய சந்தர்ப்பம் தேடி வரும். கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு புகழ் பெறுவீர்கள். கவுரவப்பதவிகள் கிடைக்கும். செல்வாக்கு உயர்வால் குடும்பத்தில் உங்கள் சொல்வாக்கு எடுபடும்.இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும்.மனதிற்கு பிடித்த இடத்திற்கு வீடு மாற்றம் செய்வீர்கள்.தொழிலை மேம்படுத்தவும் பிள்ளைகளின் சுப விசேஷங்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து வங்கி கடன் உதவி கிடைக்கும்.
தொழில் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடைபடாது. சிலர் கூட்டுத் தொழிலில் இருந்து விடுபடுவார்கள். பணியில் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்ற விருப்பமான சம்பவங்கள் நடக்கும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி நாட்டில் சென்று பிழைக்கும் எண்ணம் தோன்றும். வழக்குகள் சாதகமாகி பூர்வீகச் சொத்து முறையாக கிடைக்கும். வயோதிகர்களுக்கு கொள்ளுப் பேரன் பிறப்பான். அமாவாசையன்று தயிர் சாதம் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
25.12.2023 முதல் 31.12.2023 வரை
சுறுசுறுப்பாக செயல்படும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சாரம். லாப அதிபதி சூரியன் உப ஜெய ஸ்தானத்தில் சஞ்சாரம். பஞ்சம ஸ்தானத்தில் சனி என கிரக சஞ்சாரம் துலாத்திற்கு சாதகமாக உள்ளது. இதுவரை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த உங்களின் திறமைகள் வெளிப்படும். ஆன்ம பலம் பெருகும். புத்திர பிராப்தம், திருமணம் கை கூடும். வாழ்க்கையில் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடைபெறும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும் குல தெய்வம் தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேறும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். விட்டு விலகிய சொந்தங்கள் புரிந்து கொள்வார்கள்.
வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். எதிர்கால தேவைக்கான திட்டமிடுதல் சாதகமாகும். வழக்குகள் சாதகமான தீர்வு ஏற்படும். வேற்று மதத்தினர் அல்லது புரியாத பாஷை அதிகம் பேசும் இடத்தில் குடியிருக்கும் நிலை ஏற்படும். 26.12. 2023 காலை 9.57 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சோம்பல், ஞாபகமறதி மிகுதியாகும். கால பைரவரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
18.12.2023 முதல் 24.12.2023 வரை
கவலைகள் குறையும் வாரம். ராசி அதிபதி ராசியில் ஆட்சி. 2,7-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி. ராசிக்கு குருப்பார்வை என துலாம் ராசிக்கு பலவிதமான கிரக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் பணக் கஷ்டம் ஏற்படாது. கடன் பாதிப்பு இருக்காது. பழைய பாக்கிகள் வசூலாகும்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் அதிக லாபத்தை தரப்போகிறது. தொழில், உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணி வார்கள். கணிசமான பாலிசி முதிர்வு தொகை, பிக்சட் டெபாசிட், ரெக்வரிங் டெபாசிட் முதிர்வு தொகை, ஏலச்சீட்டு பணம் கிடைக்கும். ஒரு சிலர் வெளி நாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள்.
சிலருக்கு காதல் திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. சிலருக்கு மறு விவாகம் ஏற்படும். 24.12.2023 அதிகாலை 3.17 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் மன சஞ்சலம் அதிகரித்து உச்ச கட்ட கோபத்தை வெளிக்காட்டு வீர்கள். வேலையில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஏகாதசியன்று அவல் படைத்து மகா விஷ்ணுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
11.12.2023 முதல் 17.12.2023 வரை
வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ஆட்சி.தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி இருப்பதால் புத்தி சாதுர்யமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். செயல் களில் வேகம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை உண்டாகும். தாய், தந்தை வழி உறவுகளின் அன்பும், அரவணைப்பும் கூடும். பதினாறு வகைச் செல்வங்களும் நிரம்பும். ஆடம்பரமான சொத்துக்கள் சேரும். விவசாயம், ரியல் எஸ்டேட், கால்நடை வளர்ப்பவர்களுக்கு சிறிய முயற்சியில் அதிக வருமானம் கிடைக்கும்.உழைக்காத வருமானம் உண்டு. பயன்படுத்த முடியாத முன்னோர்களின் சொத்துகளால் ஆதா யம் உண்டாகும். தடைபட்ட வாடகை வருமானம் வரும். தம்பதிகளிடம் நல்ல புரிதல் இருக்கும்.
கலைத் துறையினருக்கு அலைச்சலுக்குப் பிறகு ஆதாயம் ஏற்படும். அரசியல் பிரமுகர்களுக்கு எதிலும் வெற்றி நிலவும். சிலருக்கு மறுமணம் நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். உடல் நலனில் முன்னேற்றம் அதிகமாகும். வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதக மாகவே நடக்கும். திருமணத் தடை அகலும். அமாவாசையன்று சிவனுக்கு பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
4.12.2023 முதல் 10.12.2023 வரை
ஏற்றமான பலன்கள் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் ராசியில் ஆட்சி செய்கிறார். 2,7-ம் அதிபதி செவ்வாய் லாபாதிபதி சூரியனுடன் இணைந்து தன ஸ்தானத்தில் ஆட்சி புரிகிறார். என பலவிதமான கிரக அமைப்புகள் துலாத்திற்கு நல்ல விதமான பலன்களை வழங்கவுள்ளது. தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.புதிய கூட்டுத் தொழில் தொடங்கலாம். இடைத்த ரகர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் இரட்டிப்பான பலன் கிடைக்கும்.
விவாகரத்து வரைச் சென்ற வழக்குகள் சுமூகமாகும். சுய ஜாதக ரீதியான திருமணத் தடை அகலும்.ராசி அதிபதி சுக்ரனே அஷ்டமாதிபதி என்பதால் திடீர் ஜாக்பாட் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். தடைபட்ட பணவரவு சீராகும். உடன் பிறந்தவர்கள், பங்காளிகளிடம் அனுசரித்துச்சென்றால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். பெரிய இழப்புகளைத் தவிர்க்கலாம். விண்ணப்பித்த வீடு வாகனக் கடன் கிடைக்கும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்தவார ராசிபலன்
26.11.2023 முதல் 3.12.2023 வரை
லாபகரமான வாரம். வார இறுதியில் ராசி அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுகிறார். 2,7-ம் அதிபதி செவ்வாய் லாப ஸ்தான அதிபதி சூரியனுடன் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சேர்கை பெறுகிறார்.திருமணம் நிச்சயமாகும். வேலையில் ஏற்றமும், சம்பளத்தில் உயர்வும் கிடைக்கும்.பல வழிகளில் வருமானம் வந்து மனதை மகிழ்விக்கும். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம்.
உடலை ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். சிலருக்கு அத்தை அல்லது சித்தியின் மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும்.பெண்களுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் சேரும். 29.11.2023 அன்று இரவு 1.40 மணி காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது. உடன் இருப்பவர்களால் மனக்குழப்பம், பணியில் சோர்வு ஏற்படும். வீண் அலைச்சல் டென்ஷன் உருவாகலாம். விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






