என் மலர்
துலாம் - வார பலன்கள்
துலாம்
இந்த வார ராசிபலன்
28.8.2023 முதல் 3.9.2023 வரை
லாபகரமான வாரம்.ராசி அதிபதி சுக்ரன் வக்ரம் பெற்றாலும் லாப ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பெறுவதால் தொழில் அபி விருத்தி மூலம் வளர்ச்சி உண்டாகும். தொழில் போட்டிகள் நீங்கி திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். கொடுத்த தொகை விரைவில் வசூலாகும். ஒரு சிலர் வீடு மாற்றம் செய்ய நேரும். சிலர் சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்ய நேரும். ஊடகங்களில் பணிபுரிவர்களின் தனித்திறமை வெளிப்படும்.வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக உயர்வு உண்டு.நோய்,நொடிகள் நிவர்த்தியாகும்.குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும். ஆரோக்கிய குறைபாடு அகலும். எதிர்காலத் தேவைக்கான திட்டமிடுதல் சாதகமாகும்.ராசியை விட்டு கேது நகரப் போவதால் கோட்சார ரீதியான திருமணத் தடை விரைவில் அகலும்.தம்பதிகள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நேரம்.வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் இருந்த வேற்றுமை மறையும். மறு திருமண முயற்சி நிறைவேறும். வீண் அலைச்சல் விரயம் தொடரும். பிரதோஷத்தன்று சிவனுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிபலன்
21.8.2023 முதல் 27.8.2023 வரை
சாதகமும், பாதகமும் நிறைந்த வாரம்.ராசி அதிபதி சுக்ரன் வக்ரம் பெற்றாலும் லாப ஸ்தான அதிபதி சூரியன் வலுப் பெறுவதால் எளிதில் ஆதாயம் அடைய முடியும். எண்ணங்கள் சிறப்பாக நிறைவேறும். தொழில் மூலம் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தனது திறமையால் அலுவலகத்தில் நற்பெயர் பெறுவார்கள். அரசு வேலை எதிர் பார்த்தவர்களுக்கு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கும். நீதி மன்ற வழக்குகளில் இருந்து எதிர்பாராத ஒரு இனிய செய்தி கிட்டும். வயோதிகர்கள் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் மன மகிழ்சியை அதிகரிப்பார்கள். தந்தையின் சொத்து தொடர்பான சர்ச்சையில் உங்கள் மூத்த சகோதரரின் கை ஒங்கும். பெற்றோர்களின் ஆதரவு சகோதரருக்கு இருப்பது சற்று மன சஞ்சலத்தை ஏற்படுத்தலாம். வாழ்க்கைத் துணை மூலம் எதிர்பாராத யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகும். சிலருக்கு விருப்ப திருமணம் நடக்கலாம். கருட பஞ்சமியன்று கருடருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
14.08.2023 முதல் 20.8.2023 வரை
மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கும் வாரம். லாப ஸ்தான அதிபதி சூரியன் 5-ம் அதிபதி சனியின் பார்வையில் ஆட்சி பலம் பெறுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். குடும்பத்திற்கு அதிகமான வருவாய் கிடைக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவீர்கள். சிலர் பங்கு பத்திரத்தில் அதிக முதலீடு செய்யலாம். முக்கிய குடும்ப பிரச்சினையை மத்தியஸ்தர்களிடம் பேசும் போது கவனம் தேவை.
பிள்ளைகளின் நலனில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் மனமார்ந்த பாராட்டுகள் கிடைக்கும். வாலிப வயதினருக்கு ஆண் குழந்தையும், சற்று வயதானவர்களுக்கு பேரன் பிறப்பான். சொத்து விசயத்தில் மருமகனால் மன சஞ்சலம் உருவாகும். தம்பதிகளுக்குள் ஈகோ தலை தூக்கும். மறுமணத்திற்கு நல்ல வரன் அமையும். மருத்துவச் செலவிற்கு பிள்ளைகள் உதவுவார்கள். சுப செலவிற்காக கடன் பெறலாம். ஆடி அமாவாசையன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
07.08.2023 முதல் 13.8.2023 வரை
அதிர்ஷ்டம் பேரதிர்ஷடமாகும் வாரம். ராசி மற்றும் அஷ்டமாதிபதி சுக்ரன் வக்ர கதியில் சூரியனுடன் சேருவதால் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். இதுவரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். முகப் பொழிவு ஏற்படும். தன வரவு இரட்டிப்பாகும். லாப அதிபதி சூரியன் 4ம்மிடமான சுக ஸ்தானத்தை பார்ப்பதால் சிலர் பழைய வீட்டை திருத்தி அமைக்கலாம். சிலருக்கு அடமானத்தில் இருந்த சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும்.
சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும். சிலர் கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம். சுய விருப்ப விவாகம் நடைபெற மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். 9.8.2023 அன்று காலை 7.42 முதல் 11.8.2023 அன்று மாலை 4.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படலாம். ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
31.7.2023 முதல் 6.8.2023 வரை
லாபகரமான வாரம். லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன், செவ்வாய். லாப அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் நாட்டம் மிகுதியாகும். பலருக்கு குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் எதிர்பாராத மிகுதியான பொருள் வரவு உண்டாகும். ஜனன கால ஜாதகத்தில் தசா - புத்தி சாதகமாக இருந்தால் பல துலா ராசியினருக்கு புதிய திருப்புமுனைகள் உண்டாகும்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செட்டிலாக முயற்சிக்கலாம். சிலருக்கு எதிர்பாலினத்தவரால் வம்பு உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கிய குறைபாடு அதிகரித்து அதிக வைத்திய செலவு செய்ய நேரும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். பொன், பொருள், ஆடம்பரப் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும். ஆடிப்பெருக்கன்று சுப மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
24.7.2023 முதல் 30.7.2023 வரை
நல்ல விசயங்கள் தாமாகவே நடக்கும் வாரம்.லாப ஸ்தானத்தில் புதன், செவ்வாய், சுக்ரன் சேர்க்கை குரு, சனி பார்வையில் வார ஆரம்பத்தில் பல நல்ல விஷயங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. பண நெருக்கடி காலத்தில் விலகிய உறவுகளும், உடன் பிறப்புகளும், நண்பர்களும் இப்போது நலம் விசாரிப்பார்கள். சமூகத்தில் நன்மதிப்பு பெறவும் தொழில் ரீதியான நல்ல முன்னேற்றம் பெறவும் சாதகமான வாரமாக இருக்கும்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நிலவிய அவஸ்தைகள் குறையும். கடனால் ஏற்பட்ட அவமானங்கள் குறையும். தொடர்ந்து வந்த பற்றாக்குறை பட்ஜெட் தீரும்.வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துணிவீர்கள். லாப அதிபதி சூரியன் ராகு கேதுவின் மையப்புள்ளியில் இருப்பதால் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை.
ஆண், பெண் எச்சரிக்கையாக பழக வேண்டும். உயர்கல்விக்கு விரும்பிய கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கும். திருமணத் தடை அகலும். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேற குடும்பம் துணையாக இருக்கும். ஆடிக் கூழ் தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
17.7.2023 முதல் 23.7.2023 வரை
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் 2,7-ம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெறுவதால் நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும். குடும்பத்தார் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும். உங்களின் செயல்பாடுகள் சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையையும் ஏற்படுத்தும்.
தொழில் தொடர்பாக திட்டமிட்ட அனைத்து செயல்பாடுகள் சிறப்பாக நிறைவேறும். படித்து முடித்தவர்கள் செல்லும் நேர்முகத் தேர்வில் வெற்றியும் மன நிறைவான வேலை கிடைக்கும். சிலருக்கு இடப் பெயர்ச்சி எண்ணம் மிகுதியாகும்.
ஞாபக குறைவு ஏற்படலாம். முக்கிய ஆவணங்கள் இல்லாத சொத்திற்கு உரிய ஆவணங்கள் கிடைக்கும். வீடு மனை வாங்கும் வாய்ப்புகள் சாதகமாகும். உயர்ந்த வாகன வசதி அமையும். திருமணம், புத்திர பிராப்தத்தில் நிலவிய தடைகள் அகலும். தாய், தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆடி வெள்ளிக்கிழமை மலர் மாலை அணிவித்து பெண் தெய்வங்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
10.7.2023 முதல் 16.7.2023
தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரனும் தன அதிபதி செவ்வாயும்லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும். தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்பிற்காகவெளியேறலாம். புத்திர பாக்கியம் உண்டாகும்.
பங்கு சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். சிலருக்கு நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். சம்பந்திகள் சண்டை முடிவிற்கு வரும். வெவ்வேறுஊர்களில்பிரிந்துவாழ்ந்ததம்பதிகள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும்நல்ல நேரம். புதிய சொத்துக்கள், உயர்ரக வாகனங்கள் சேரும்.
13.7.2023அன்று 1.58 காலை முதல் 15.7.2023 இரவு 11.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கவும். தேவையற்ற கற்பனை, சிந்தனைகளை தவிர்க்கவும்.ஆடி வெள்ளிக்கிழமை அஷ்டலட்சுமிகளையும் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
3.7.2023 முதல் 9.7.2023 வரை
வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படப் போகும் வாரம். 2, 7-ம் அதிபதி செவ்வாய் லாப ஸ்தானம் சென்று குரு பார்வை பெற்று தன் வீட்டைத் தானே பார்க்கி றார். குடும்பத்தில் இருந்த பிரச்சிினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்துடன் மன வலிமையுடன் செயல்படுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும்.
பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடைபாதை வியாபாரிகளின் லாப விகிதம் அதிகமாக இருக்கும். போட்டி, பொறாமை யால் கண் திருஷ்டி உண்டாகும். மறு திருமண முயற்சி சாதகமாகும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.
கண் சிகிச்சை வெற்றி தரும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். சொந்த வீட்டு ஆசை நிறைவேறும். பண்டிகைகள், விழாக்களில் கலந்து கொண்டு ஆனந்த மடைவீர்கள். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது நன்மை தரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
26.6.2023 முதல் 2.7.2023 வரை
எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும் வாரம். 2,7-ம் அதிபதி செவ்வாய் லாப ஸ்தானம் சென்று 5-ம் அதிபதி சனியின் பார்வையில் செல்வதால் குடும்பத்திலும் வெளியிலும் நிறைய நன்மைகள் நடைபெறும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய நல்ல அரசாங்க வேலை கிடைக்கும், அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத நோயில் இருந்து விடுபட குரு பகவான் அருள்புரிவார். கணவரின் ஆரோக்கிய கேட்டால் வருந்திய பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தடைகள் வந்தாலும் ராசியை குரு பார்ப்பதால் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார்.
காதலால் அவமானம் உண்டாகும். மாணவர்கள் கல்வியின் பொருட்டு வெளிநாடு செல்லலாம். சிலர் பிழைப்பிற்காக வெளிநாடு செல்லலாம். சிலருக்கு அதிர்ஷ்ட பொருள் வரவு ஏற்படும்.சப்த மாதர்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
19.6.2023 முதல் 25.6.2023 வரை
சகாயங்கள் மிகுந்த வாரம். லாப அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல் மேலோங்கும். தந்தை வழி உற்றார், உறவினர்களால் ஆதாயம் உண்டு.சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்..பொதுக் காரியங்களில் ஈடுபடுவார்கள். அரசியல் ஆர்வம், ஆதாயம் உண்டு.
புதிய முயற்சியில் ஈடுபட்டால் நல்ல அனு கூலமான பலன்களையும் ஆதாயங்களையும் பெற முடியும். வீடு கட்ட, அல்லது புதிய தொழில் கடன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாகும். தொழில் முன்னேற்றமும் லாபமும் மகிழ்சியைத் தரும். வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்பார்ப்பை குறைத்தால் திருமண வாய்ப்பு உடனே தேடி வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஆன்மீக நாட்டம் மத நம்பிக்கை அதிகரிக்கும். மனைவி, மக்கள், பேரன், பேத்திகள், சொத்து சுகம் என அனைத்து பாக்கிய பலன்க ளையும் அடைவீர்கள். இனம் புரியாத நோயின் தன்மை தாக்கம் சிகிச்சையில் சீராகும். சனிக்கி ழமை ஸ்ரீ வீரபத்திரரை வணங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
12.6.2023 முதல் 18.6.2023 வரை
சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும் வாரம். லாபஅதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானம் செல்வதால் புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.தொழில்மேன்மை, காரிய சித்தி, முன்னேற்றம் போன்ற சுப பலன்கள் நடக்கும்.
பெண் குழந்தைகளுக்கு காதணி விழா, பூப் புனித நீராட்டு விழா,போன்ற சுபச் செலவு ஏற்படலாம். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு பெயர், புகழ் பரவும்.தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையும் காலம் இது. பிள்ளைகள் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்ல நேரும்.
15.6.2023 இரவு 8.23 முதல் 18.6.2023 காலை 5.12 வரை சந்திராஷ்டமம் இருப்பதால்கிடைக்கும் சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம். துர்க்கையை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






