என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024

    பதற்றம் அதிகரிக்கும் நாள். பணத்தேவைகளுக்காக கடன்வாங்கும் சூழ்நிலை உண்டு. திட்டமிட்ட செயலொன்றில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்பு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். லட்சியங்கள் நிறைவேறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். மனதிற்கு பிடித்தவர்களோடு அலைபேசியில் அதிகநேரம் உரையாடுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024

    பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை தருவர். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2024

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வருமோ, வராதோ என நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2024

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். எதிர்பார்த்தபடியே வரவு வந்து சேரும். வியாபார விருத்திக்காக புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 27 செப்டம்பர் 2024

    சாமர்த்தியமாகப் பேசி சமா க்கும் நாள். வரவும், செலவும் சம கும். பிரபலமானவர்களின் சந் ப்பு கிட்டும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 26 செப்டம்பர் 2024

    விரோதிகள் விலகும் நாள். வரவு திருப்தி தரும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வளர்ச்சியைக்கண்டு பெருமைப்படுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2024

    தனவரவில் இருந்த தடைகள் அகலும் நாள். தக்க சமயத்தில் உடன் பிறப்புகள் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2024

    விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். குடும்ப பெரியவர்கள் உங்கள் மீது குறை கூறுவர். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். உயர்ந்த மனிதர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். உடல் நலம் பற்றிய கவலை உருவாகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 22 செப்டம்பர் 2024

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பச்சுமை கூடும். விரயங்களை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். நட்பு பகையாகலாம். உறவினர்கள் உங்கள் செயல்பாட்டில் குறை கூறுவர்.

    ×