என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024
சுபச்செலவுகள் ஏற்படும் நாள். வரவு திருப்தி தரும். உடல் நலனில் கவனம் தேவை. ஆற்றல் மிக்கவர்களின் உறுதுணையோடு அலுவலகப் பணியொன்றை செய்து முடிப்பீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் தடை பட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024
பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் சீராக நடைபெறும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பலரது பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி முயற்சி எடுப்பீர்கள். வரவு திருப்தி தரும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024
தெய்வ வழிபாட்டில் திருப்தி காண வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் குறையலாம். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
துலாம்
இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். பணிபுரியுமிடத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024
நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வருமோ, வராதோ என்று நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். கலகலப்பாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். வியாபார விரோதங்கள் மாறும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். தொழில் ரீதியாக ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். சொத்து பிரச்சனைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்பு உண்டு.
துலாம்
Today's Rasipalan - 13 November 2024
இடமாற்ற சிந்தனைகள் மேலோங்கும் நாள். திடீர் பயணமொன்றால் தித்திக்கும் செய்தி வந்து சேரும். பிரியமான நண்பர் ஒருவரோடு இருந்த பிரச்சனை தீரும். உறவினர்களால் விரயம் ஏற்படும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024
நட்பு வட்டம் விரிவடையும் நாள். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024
தொய்வடைந்த தொழிலை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024
வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். ஆதாயம் தரும் தகவல் மதிய நேரம் வரலாம்.






