என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024

    கடன் சுமை குறையும் நாள். கடல் தாண்டி செல்லும் முயற்சி கைகூடும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து செயல்படுவர். எதிர்ப்பாக இருந்த தொழில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வர். 

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024

    முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தெய்வீக சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். அரை குறையாக நின்ற பணிகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024

    அலைபேசி வழியே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பூமி வாங்க எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் இனிமை தரும் விதம் இடமாற்றம் வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வரவேண்டிய தொகை குறிப்பிட்டபடி வந்து சேரும். இருப்பினும் திடீர் செலவுகளை சமாளிக்க அடுத்தவர்களிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024

    தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்த படியே வந்து சேரும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2024

    நட்பால் நன்மை கிட்டும் நாள். அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளன்போடு பழகியவர்களின் உதவி கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2024

    நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத்தேடி வரலாம். உத்தியோகத்தில் சகபணியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள் அகலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2024

    நெருக்கடி நிலை அகலும் நாள். நிதி நிலை உயரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள். 

    துலாம்

    இன்றைய ராசிபலன் -1 நவம்பர் 2024

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். உறவினர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளாக நேரிடும். ஊர் மாற்றம், இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள் வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -30 அக்டோபர் 2024

    கொடுத்த கடன்கள் வசூலாகும் நாள். குடும்பப் பிரச்சனை குறையும். பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024

    உதவிகள் கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உறவினர்கள் ஆச்சர்யப்படுவர். கனிவான பேச்சுகளால் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள்.

    ×