என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025
வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்ளும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். உத்தியோகத்தில் வந்த இடர்பாடுகள் அகலும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025
ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2025
இனிய பேச்சால் எதிரிகளை வெல்லும் நாள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். நேற்று சந்திக்க நினைத்த ஒருவர் இன்று நேரில் வருவார்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 9 பிப்ரவரி 2025
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர் பாராட்டுவர்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 8 பிப்ரவரி 2025
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். பணவரவு எவ்வளவு வந்தாலும் உடனடியாக விரயம் ஏற்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.
துலாம்
இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 6 பிப்ரவரி 2025
காரிய வெற்றி காண கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத கவலை தோன்றும். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 5 பிப்ரவரி 2025
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பணத்தேவைகளைப் பால்ய நண்பர்கள் பூர்த்தி செய்வர். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2025
புதியவர்களின் சந்திப்பு கிடைக்கும். சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். தொழிலில் தனலாபம் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2025
முயற்சி கூடும் நாள். வருமானம் எதிர்பார்த்த படியே வந்து சேரலாம். பூமியோகம் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள். இனிமையான அனுபவங்கள் ஏற்படும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தோன்றும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாடு மாற்றம், வீடுமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.






