என் மலர்
சிம்மம் - வார பலன்கள்
சிம்மம்
இந்தவார ராசிபலன்
13.5.2024 முதல் 19.5.2024 வரை
புதிய தொழில் முயற்சி வெற்றி தரும் வாரம். ராசி அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் நிற்கும். குருவுடன் சேருவதால் சிம்மத்திற்கு தொழிலில் வளர்ச்சி கூடும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெரியவர்களின் ஆதரவோடு புதிய தொழில் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் நிமித்தமான அலைச்சலான பயணங்கள் அதிகரிக்கும். தொழில் கடன் கிடைக்கும். சிலர் ஒரு கடன் வாங்கி மற்றொரு கடனை அடைக்கலாம்.
சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படலாம். அரசியல் பிரமுகர்களுக்கு ஆதரவான சூழல் நிலவும்.கண்டகச் சனியின் இன்னல்கள் குறையும். 2ம்மிட கேதுவால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், மன சங்கடங்கள் மறைந்து சகஜ நிலை திரும்பும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் மத்தியஸ்தர்கள் முன் பேசி சுமூகமாக தீர்க்கப்படும். ஆரோக்கியத்தை மேம்படுத்த உரிய வைத்திய முறையை அணுக வேண்டும். சுய வைத்தியத்தை தவிர்க்க வேண்டும். அரியர்ஸ் பாடத்தை மீண்டும் எழுதி பாஸ் பண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கும். சிலர் தாத்தா, பாட்டியாவார்கள். திருமணமான இளம் பெண்கள் கருத்தரிப்பார்கள். திருமணத் தடை அகலும். சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிபலன்
6.5.2024 முதல் 12.5.2024 வரை
எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும் வாரம் . ராசி அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் நிற்பதால் வசீகரமான தோற்றம் ஏற்படும். ஆன்ம பலம் பெருகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு ஏற்படும். யாரும் செய்யத் தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும்.சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்பிற்காக வெளியூர், வெளிநாட்டிற்கு செல்லலாம். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் நிலுவை சம்பளம் மனதை மகிழ்விக்கும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். வீண் செலவுகள், விரயங்கள் இருந்தாலும் சமாளிக்க முடியும்.விபரீத ராஜ யோகத்தால் உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும். பூர்வீகப் பிரச்சினைகள் தீரும்.தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிட்டும். திருமண, மறுமண முயற்சி வெற்றி தரும். புதிய சொத்துகள் சேரும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி பிறக்கும் யோகம் உள்ளது. 6.5.2024 அன்று மாலை 5.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உற்றார், உறவினர்கள் நண்பர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும் . முக்கிய தொழில் ஒப்பந்தங்களை ஒத்தி வைக்கவும். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிபலன்
29.04.2024 முதல் 05.05.2024 வரை
சங்கடங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம். பெறுவதோடு குரு தொழில் ஸ்தானத்தில் என முக்கிய கிரகங்கள் சாதகமாக இருக்கிறது. தொழிலில் நிலவிய சங்கடங்கள் விலகி முன்னேற்றத்திற்கான அறிகுறி தென்படும். புதிய தொழில் வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள். முன்னோர்களின் கூட்டுத் தொழிலில் பங்குதாரராக இணையும் வாய்ப்பு உள்ளது.
உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு என விரும்பிய மாற்றங்களால் உள்ளம் குளிரும். பங்கு வர்த்தகர்களின் வருமானம் கணிசமாக உயரும். தொழில், உத்தியோகம் காரணமாக சிலரின் தந்தை குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்லலாம். கணவன் மனைவியிடம் ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்திற்கு உங்கள் இன சமுதாயத்தில் இருந்து கவுரவமான நல்ல வரன் அமையும். புனித யாத்திரை செல்வீர்கள். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். சம்பந்தி சண்டைகள் முடிவுக்கு வரும். 4.5.2024 மாலை 4.38 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வீடு, வாகன பராமரிப்பு செலவால் விரயம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஸ்ரீஅதிர்ஷ்ட லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்தவார ராசிபலன்
22.4.2024 முதல் 28.4.2024 வரை
முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். ராசி அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம். புதிய கூட்டுத் தொழில் முயற்சி பலிதமாகும். தொழில், வியாபாரம், வேலையில் ஏற்பட்ட பின்னடைவுகள் ,சக பணியாளர்களால் ஏற்பட்ட இன்னல்கள் அகலும். மே1, 2024 முதல் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பிரிந்து தம்பதிகள் கூடி மகிழ்வார்கள்.குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் மறுமண முயற்சிகள் பலிதமாகும். வீடு,வயல், தோட்டம், மனை வாங்குவதில் நிலவிய சட்ட சிக்கல்கள் தீரும். தடைபட்ட கட்டுமானப் பணிகள் துரிதமடையும். கண்டகச் சனியால் ஏற்பட்ட உடல் உபாதைகள் அகலும். வழக்குகள் சாதகமாகும்.
தேவைக்கு பணம் கிடைக்கும். விண்ணப்பித்த கடன் தொகைக்கு ஒப்புதல் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மேல் விழுந்த கலங்கம் அகலும். சிலருக்கு வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய இடப் பெயர்ச்சி உண்டாகும். உடல் அசதி இருக்கும். குல, இஷ்ட, தெய்வ அனுகிரகம் கிடைக்கும். பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்ற உகந்த காலம். சித்ரா பவுர்ணமியன்று மகாலட்சுமிக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்தவார ராசிபலன்
15.4.2024 முதல் 21.4.2024 வரை
பாக்கிய ஸ்தானம் பலம் பெறும் வாரம். ராசி அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம். ராசிக்கு பாக்கியாதி செவ்வாயின் பார்வை என கிரக சஞ்சாரம் மிக சாதகமாக உள்ளது.புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தோன்றும்.பல புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இழந்த இன்பங்களை மீட்டெடுப்பீர்கள். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மாறும்.
நிறைந்த வருமானம் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் முயற்சி கைகூடும். சொத்து தொடர்பான முயற்சிகள் சித்திக்கும். வாடகை வீட்டுத் தொல்லை அகலும் .சிலர் தொழிலுக்காக, சொத்து வாங்குவதற்காக கடன் பெறலாம். அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.திருமண முயற்சி கைகூடும். அஷ்டம ராகுவால் ஆசை கடல் அலை போல் பெருகும். லெளகீக நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம் மற்றும் குறுக்கு வழியை நாடக்கூடாது. சிலர் வெளிநாட்டிற்கு பிழைப்பிற்காக இடம் பெயறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ராசியை சனி, செவ்வாய் பார்ப்பதால் பைரவரை செவ்வரளி பூவினால் அர்ச்சித்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்தவார ராசிபலன்
8.4.2024 முதல் 14.4.2024 வரை
குரு கடாட்சம் நிறைந்த வாரம். ராசி அதிபதி சூரியன் ராகுவுடன் சேருவது கிரகண தோஷம். தன, லாப அதிபதி புதன் வக்ரம், ராசிக்கு சனி, செவ்வாய் பார்வை என கிரக சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளது. ஆனால் ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விடும். இந்த ஒரு வாரம் புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டா மல் இருந்தால் தப்பிக்க முடியும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு, எண்ணங்கள் பூர்த்தி ஆக நல்ல வாய்ப்புகள் உண்டு.வாகனத்தை எக்சேஞ் ஆபரில் மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம் சில சூட்சுமங்களை கற்றுத்தரும்.
உத்தியோகம் அல்லது தொழிலில் மாற்றங்களை சந்திக்க நேரும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணி களையும் சேர்த்து பார்க்க நேரிடும். வாழ்க்கைத் துணை, நண்பர்கள், தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வீண் விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும்.இலாகா மாற்றம் மற்றும் இடமாற்றம் கவலையைத்தரும். தியா னம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். 9.4.2024 அன்று காலை 7.32 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சியில் வெற்றியும், லாபத்தையும் பெற சிவ னுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்தவார ராசிபலன்
1.4.2024 முதல் 7.4.2024 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் 8-ல் ராகுவுடன் மறைகிறார். ராசிக்கு செவ்வாய், சனி பார்வை. 2,11-ம் அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் வக்ரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி வக்ரம் என முக்கிய கிரகங்க ளின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளது.குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்க வேண்டும்.தம்பதிகள் ஈகோ பார்க்காமல் இருந்தால் தப்பி விடலாம். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதிகளின் அறிகுறி தோன்றும், அரசு காரியங்களுக்கு சிபாரிசுக்கு அலைய நேரும்.
எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக செயல்பட வேண்டும். ராசிக்கு குருப் பார்வை கவசமாக இருக்கிறது.திருமணத் தடை அகன்று நல்ல வரன்கள் தேடி வரும். மறுமண முயற்சியில் வெற்றி உண்டு. 7.4.2024 அன்று காலை 7.39-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது.தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை யாருக்கும் கடனாகத்தர வேண்டாம். இனம் புரியாத கவலை கற்பனை பயம் தோன்றலாம்.குலதெய்வ வழிபாடு உங்களை நன் முறையில் வழி நடத்தும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்தவார ராசிபலன்
25.3.2024 முதல் 31.3.2024 வரை
வெற்றிகரமான வாரம். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் தெய்வ சக்தி துணை வரும். சுறுசுறுப்பும், உற்சாகமும் நிறைந்து காணப்படும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். விமர்சன பேச்சுக்களை பொருட்படுத்த மாட்டீர்கள்.சவாலான பணிகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுப செலவுகள் அதிகரிக்கும். நீண்ட காலமாக தடைபட்ட முக்கிய பணிகளை ராசிக்கு குருப் பார்வை கிடைக்கும் இந்த காலகட்டத்தில் விரைந்து முடிப்பது நல்லது.
கண்டகச் சனியால் அவஸ்தையை அனுபவிக்கும் நீங்கள் நல்ல நேரம் நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்க ளுக்கு ஒரு அருமருந்தாக அமையும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வந்து சேரும். திருமணத்திற்கு முயற்சிக்கலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழநி முரு கனை ஆத்மார்த்த மாக வழிபட சாதகமான பலன்கள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இன்றைய ராசிபலன்
18.3.2024 முதல் 24.3.2024 வரை
மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சூரியன் 8-ல் தன. லாப ஸ்தான அதிபதி புதன் மற்றும் ராகுவுடன் மறைந்து குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்துடன் இணைந்து பழைய நினைவுகளைப் பேசி ஆனந்தம் அடைவீர்கள். அஷ்டம ஸ்தானம் பலம் பெறுவதால் அதிர்ஷ்டம் பற்றிய சிந்தனை மேலோங்கும் .வியாபாரம் பெருகும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். கடனால் பட்ட அவமானம், அசிங்கம் மறையும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலை மாறும். ராசிக்கு 7-ல் செவ்வாய், சனி, சுக்ரன் சேர்க்கை இருப்பதால் கண்டகச் சனியை மீறி காதல் திருமணம் நடக்கும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். பழைய பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். வாக்கு ஸ்தானத்திற்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் ராகு / கேது சம்பந்தம் உள்ளதால் அரசியல் பிரமுகர்கள் பொதுக் கூட்டத்தில் நாகரீ கமாக பேச வேண்டும். சாத்தியமற்ற வாக்குறுதியை கொடுப்பது அவமானத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமானம். குருவாயூரப்பனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்தவார ராசிபலன்
11.3.2024 முதல் 17.3.2024 வரை
எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நேரம். ராசி அதிபதி சூரியன் அஷ்டம ஸ்தான ராகுவை நெருங்குகிறார். இது கிரகண அமைப்பு. புண்ணிய பலன்களை அதிகரிக்க குடும்ப உறுப்பினர்கள் ஒன்றினைந்து பித்ருக்கடன் தீர்த்து முன்னோர்களின் நல்லாசி பெறும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.ராசிக்கு 7-ல் சனி செவ்வாய் சேர்க்கை இருப்பதால் தொழில் கூட்டாளி அல்லது நண்பர்கள் நடவடிக்கையால் மன அழுத்தம் உருவாகும். திருமண முயற்சி ஒரிரு வாரங்களுக்குப் பிறகு சாதகமாகும். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடிக்க சாதகமான சூழ்நிலை உண்டாகும். பங்குச்சந்தை முதலீட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
உடன் பிறந்த சகோதரருக்கு திருமணம் கை கூடும். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். மேலும் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், ராகு சேர்க்கை இருப்பதால் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய பேச்சு வார்த்தைகளை ஒத்தி வைக்கவும். 12.3.2024 இரவு 8.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தூக்க மின்மை, மன சஞ்சலம் உண்டாகலாம். தேவையில்லாத எண்ணங்களை தவிர்த்து நிம்மதியாக தூங்க தினமும் ராகு வேளையில் காளியை வழிபட வேண்டும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்தவார ராசிபலன்
4.3.2024 முதல் 10.3.2024 வரை
எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம். ராசிக்கு சனி, புதன், சூரியன் பார்வை. புத ஆதித்ய யோகம். நினைத்தது நிறைவேறும்.நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். மனதில் செய்ய நினைத்த காரியங்களை மறு நிமிடமே செய்து முடிப்பீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு யோகமான நேரம். பொதுச் சேவை செய்து மகிழ்வீர்கள். தாய் மாமாவால் மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அங்காளி, பங்காளிகள் மற்றும் குடும்ப உறவுகள் இணைந்து குடும்ப விழா கொண்டாடி மகிழ்வீர்கள். மகிழ்ச்சி தரும் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும். குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியே ஏற்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு, மன பாரம் குறையும்.
பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் உற்சாகத்தை அதிகரிக்கும்.நீண்ட நாட்களாக தாமதித்த காரியங்கள் துரிதமாக நடை பெறும். தாய், தந்தையின் ஆதரவு முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். சிவராத்தி ரியன்று விபூதி அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்தவார ராசிபலன்
26.2.2024 முதல் 3.3.2024 வரை
திருமணத்தடை அகலும் வாரம். ராசி அதிபதி சூரியன் களத்திர ஸ்தான அதிபதி சனி தன, லாபாதிபதி புதனுடன் இணைந்து ராசியை பார்ப்பதால் உங்கள் ஆழ்மன எண்ணம், ஆசைகள் நிறைவேறும்.இது வரை உங்களுக்கு தடையாக இருந்த அனைத்து செயல்களும் மாறும். சம சப்தம ஸ்தானத்தில் சனி. புதன், சூரியன் சேர்க்கையால் களத்திர ஸ்தானம் பலம் பெறும். சுய ஜாதக ரீதியாக திருமணத்திற்கு எவ்வளவு தடை இருந்தாலும் அகலும்.உடலின் ஐம்புலன்களும் மகிழ்ச்சியடையும். சொத்து, வீடு,வாகனம் அமையும். வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான முயற்சியில் வெற்றி உண்டு.
எதிர்பார்த்த தன லாபம் கிடைக்கும். உங்கள் புகழ், பெருமையை உற்றார், உறவினர் அறியப் போகிறார்கள். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் வீசப்போகிறது. தோற்றத்தில் மிடுக்கு கூடும்.செயலில் வேகம் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும்.சகோதர, சகோதரி களுடன் ஒற்றுமை நிலவும்.தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்கி அணிவீர்கள். அண்ணாமலையாரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






