என் மலர்tooltip icon

    சிம்மம் - வார பலன்கள்

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    19.2.2024 முதல் 25.2.2024 வரை

    தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் வாரம் . ராசி அதிபதி சூரியன் தன, லாப அதிபதி புதனுடன் இணைந்து ராசியை பார்ப்பது புத ஆதித்ய யோகம். சிம்ம ராசியினருக்கு ராசியை சனி பார்த்துக் கொண்டு இருப்பதால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகி புத்துணர்வு உண்டாகும். ஆன்ம பலம் கூடுவதால் எதையும் சாதிக்கும் வல்லமை, தன்னம் பிகை. தைரியம் உங்களை வழி நடத்தும். தொட்டது துலங்கும். பட்டது பூக்கும். குடும்பத்தில் நிம்மதியும், ஆனந்தமும் நிறையும். அடுத்தவரின் கையை நம்பி நின்ற நிலை மாறி தன் கையே தனக்கு உதவி என்று புதிய பாதையை நோக்கி பயணிக்க துவங்குவீர்கள். தொழிலில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். வர்த்தகம் லாபத்துடன் நடக்கும்.

    சொத்துகள் வாங்க, கட்ட, விஸ்தரிக்கத் தேவையான பொருள் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை மனக்கசப்புகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணைக்கு பணிபுரியும் இடத்தில் சக நண்பர்களிடம் ஏற்பட்ட மனபேதம் தீரும். மாமியாரின் சில செயல்கள் வேதனை தரும் என்பதால் அனுசரித்து செல்லவும். மாசி மகத்தன்று சிவனுக்கு தேன் அபிசேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    12.2.2024 முதல் 18.2.2024 வரை

    துன்பமும், துயரமும் தீரும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார் .4,9-ம் அதிபதி செவ்வாய் உச்சம். இது சிம்ம ராசிக்கு மனம் விரும்பும் மகிழ்ச்சியான வாழ்க்கை யை வழங்கப் போகிறது. காலத்திற்கும் அழியாப் புகழ் உண்டாகும். தன்நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். சிலர் தொழிலுக்காக பூர்வீகத்தை விட்டு இடம் பெயரலாம். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதம் நீங்கும். சிலர் வீட்டிற்கு வர்ணம் பூசி புதுப்பிப்பார்கள்.

    கருத்து வேறுபாட்டால் பேசாமல் இருந்த சம்பந்திகள் பிள்ளைகள் நலன் கருதி அனுசரித்து செல்வார்கள். மண், மனை, பூமி, வீடு, வண்டி, வாகனம் வாங்கும், விற்கும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். சுப விரயங்கள் அதிகமாகும்.திருமணம் பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணம், கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள் குறையும்.14.2 2024 அன்று காலை 10.43 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் வீட்டுப் பெரியவர்களின் ஆலோசனையை மதித்து நடப்பது அவசியம். ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    5.2.2024 முதல் 11.2.2024 வரை

    லாபகரமான வாரம். ராசி அதிபதி சூரியன் உச்சம் பெற்ற 4,9-ம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்றிருக்கும் அற்புதமான வாரம். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தடைகள், தடுமாற்றங்கள் விலகும். புதிய முயற்சிகளில் முழுமையான வெற்றிகள் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொட்ட காரியங்கள் துலங்கும்.என்றோ வாங்கிய பங்குகள் இப்பொழுது நல்ல லாபத்தை பெற்றுத்தரும். நிலுவையில் உள்ள தொகைகள் கைக்கு வந்து சேரும்.

    மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தேங்கி கிடந்த பொருட்கள் விற்பனையாகும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க முடியும். ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சிலர் வில்லங்கமான, விருத்தியில்லாத சொத்தை வாங்கலாம். அல்லது சொத்து தொடர்பான வழக்குகள் உருவாகலாம் என்பதால் கவனம் தேவை. போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு உறுதி. பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. தை அமாவாசையன்று சிவ வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    29.1.2024 முதல் 4.2.2024 வரை

    இலக்குகளை அடையும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன லாபாதிபதி புதனுடன் சேர்க்கை. வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடும். எதிர்கால வளர்ச்சிக்கு புதிய மார்க்கம் தென்படும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள், கிடைப்பார்கள். நண்பர்களையும், துரோகிகளையும் இனம் காண்பீர்கள். புகழ், அந்தஸ்து உயரும், கவுரவப் பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் விலகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இடப்பெயர்ச்சி ஏற்படலாம். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கலாம்.

    நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவர்கள். குடும்ப பிரச்சினைகள் விலகும். சுமாராக படித்த மாணவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். குடும்ப பொது பிரச்சினைகளில் விவேகத்துடன் செயல்படவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். ஞாயிற்று கிழமை சிவன் கோவிலில் உழவாரப் பணிகள் செய்திட காரியசித்தி கிட்டும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    22.1.2024 முதல் 28.1.2024 வரை

    மன ஆற்றலும், மன உறுதியும் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு குரு மற்றும் சனியின் பார்வை. ராசிக்கு சனி பார்வையால் ஏற்படும் அவஸ்தைகளை குரு பார்வை நிவர்த்தி செய்யும். தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்று விடும். குழந்தைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும் தடைபட்ட பணவரவு சீராகும். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும். தொட்டது துலங்கும். உபரி சொத்துக்கள் மூலம் வாடகை வருமானம் கிடைக்கும். தந்தை மகன் உறவு சிறக்கும். விலகிச் சென்ற குடும்ப உறவுகள், நண்பர்கள் தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் உங்களிடம் வருவார்கள்.

    வழக்கறிஞர்கள் , ஆலோசகர், லீகல் அட்வைசர், பங்கு வர்த்தகர்களுக்கு மிகச் சாதகமான காலம்.அரசு உத்தியோக முயற்சி கைகூடும்.எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.சிலருக்கு வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்பு கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான நேரம். சமூக அந்தஸ்து உயரும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறக்கும். சிலருக்கு இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய நேரும். கணவன் மனைவி அன்பு சிறக்கும். தைப்பூசத்தன்று சிவ வழிபாடு செய்வது நல்லது.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    15.1.2024 முதல் 21.1.2024 வரை

    முயற்சிகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி சூரியன் 6-ல் மறைந்தாலும் ராசி, முயற்சி ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றிக்கனியை பறிக்காமல் விட மாட்டீர்கள். செவ்வாய், ராகு சம்பந்தம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் போது மிதந்த கவனம் தேவை. ரியல் எஸ்டேட் துறையினருக்கு ஏற்றமான நேரம். சிலர் புதியதாக ரியல் எஸ்டேட் தொழில் ஆரம்பிப்பார்கள். சிலருக்கு ரெயில்வே துறையில் வேலை கிடைக்கும். சிலர் ஒப்பந்த அடிப்படையில் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து பயன் பெறலாம். திருமண முயற்சி கைகூடும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். இளைய சகோதரத்தால், ஏற்பட்ட மன சங்கடம் தாய்மாமனின் அனுசரனையால் சீராகும். திருமணம், புத்திர பிராப்தம் போன்ற சுப பலன்கள் நடக்கும். 16.1.2024 அன்று காலை 12.37 மணி முதல் 18.1.2024 அன்று காலை 3.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிரி என்று ஒருவர் வெளியில் இருந்து வரத் தேவை இல்லை. உங்களின் செயல்பாடே உங்களுக்கு எதிரியாக மாறும். சிவனுக்கு விபூதி அபிசேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    8.1.2024 முதல் 14.1.2024 வரை

    பொருளாதார நிலை உயரும் வாரம். ராசி அதிபதி சூரியன் தனலாப அதிபதி புதனுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேருவது புத ஆதித்ய யோகம். மேலும் யோக அதிபதி செவ்வா யுடன் சேருவது உன்னதமான அமைப்பு இருண்டு கிடந்த வாழ்க்கையில் மெதுவாக வெளிச்சம் பரவும். எதிர்பாராத நல்லவை நடக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்க ளுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். வருமானம் உயரும். தடைபட்ட குத்தகை வருமானம் வந்து சேரும். நிலுவையில் உள்ள சம்பளபாக்கி கணிசமான தொகையாகச் சேர்ந்து கிடைக்கும். குடியிருப்பு களுக்கு புதிய வாடகைதாரர்கள் வரலாம்.

    என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். உங்களின் வீடு கட்டும் கனவு நினைவாகும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். பணவரவு உண்டு. தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வழக்குகள் சாதகமாகும். அரசு வேலை கிடைப்பதில் நிலவிய தடைகள் விலகும். திருமணத்திற்கு ஏற்ற காலம். குழந்தை பேறு முயற்சி பலன் தரும். அமாவாசையன்று சிவ வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    1.1.2024 முதல் 7.1.2024 வரை

    வசந்தமான வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம்.பாக்கிய ஸ்தானத்தில் குருபகவான். பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் பலம் பெறுவதால் சூரியனும், குருவும் பல்வேறு பாக்கிய பலன்களை கொண்டு வந்து சேர்ப்பார்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் அகலும்.தொழில், வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். திருமணம், பிள்ளைப் பேறு, புதிய சொத்து சுகம் சேர்க்கை என மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.

    விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்பனையாகும். ஒரு பெரும் பணம் சொத்து விற்பனையில் கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். பிள்ளைகளால் நிம்மதி கூடும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். ஆரோக்கி யத்திற்கான செலவுகள் குறையும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட தொல்லைகள் சீராகும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பெண்களின் முயற்சிக்கு கணவரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    25.12.2023 முதல் 31.12.2023 வரை

    வாழ்க்கை வளமடையும் வாரம்.ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம். பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குரு ராசியை பார்ப்பதால் லவுகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களும் வந்து சேரும். தொழில், உத்தி யோகத்தில் நிலவிய தடைகள் அகலும். பண வரவு அதிகரிக்கும்.நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வரும். பகைவர் தொல்லை மறையும். உறவினர் நண்பர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். வேலை தேடும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி நடைபெறும். 2-ல் கேது இருப்ப தால் குடும்ப உறவுகளிடம் அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் விலகும். வம்பு வழக்குகள் சாதக மாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். சொத்துக்களின் மதிப்பு ஏறும்.

    இறையருள் உண்டாகும். களவு போன திருடு போன பொருட்கள் கிடைக்கும். கண்டகச் சனியின் காலம் என்பதால் அதீத முயற்சிக்குப் பிறகு புத்திர பிராப்தம், திருமணத் தடையில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். கண் பாதிப்பு அல்லது மூட்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.ஆரோக்கியம் அதிகரிக்கும். விநாயகரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    18.12.2023 முதல் 24.12.2023 வரை

    நெருக்கடிகள் விலகும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன, லாப அதிபதி புதனுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குருவின் பார்வையில் சேர்க்கை. இந்த கிரக அமைப்பு புத ஆதித்ய யோகம். உங்களின் பல வருட எதிர்பார்ப்புகள் இந்த வாரத்தில் நிறைவேறும். அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் வந்து சேரும்.

    வெளிநாட்டு வேலை, அரசு வேலை முயற்சிகள் வெற்றி தரும். பெண்கள் பிறந்த வீட்டின் பெருமையையும், புகுந்த வீட்டின் கவுரவத்தையும் காப்பார்கள்.உடல் ஆரோக்கிய மடையும். வீண் செலவுகள் கட்டுப்படும். கடன் பட்டு சொத்து வாங்குவீர்கள்.கை மறதியாக வைத்த பொருட்கள், காணாமல் போன பொருட்கள் கிடைக்கும். திருமண விஷயங்கள் சித்திக்கும். 21.12.2023 இரவு 10.08 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கோபம் கூடவே இருந்து குழி பறிக்கும். விட்டுக் கொடுத்து செல்லும் போது பின்நாட்களில் வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ஏகாதசி அன்று பச்சைக்கற்பூரம் அபிசேகம் செய்து மகா விஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    11.12.2023 முதல் 17.12.2023 வரை

    திட்டமிட்டு செயல்படும் வாரம். 3, 10-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி, 4, 9-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி என முக்கிய கிரகங்களின் நிலைப்பாடுகள் சிம்மத்திற்கு மிகச் சாதகமாக உள்ளது. எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் மனோ தைரியமும் கூடும். தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் சங்கடங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.சிறிய உழைப்பில் நல்ல வருமானம் கிடைக்கும். நிலையான வருமானத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை கிடைக்கும். வீண் விரயத்தை தவிர்க்க சுப விரயத்தை அதிகப்படுத்துவது உத்தமம். ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு அகலும்.

    வீடு மாற்றம், இடமாற்றம், வேலை மாற்றம் உருவாகும். திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆடம்பர விருந்துகளில் கலந்து கொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வாக்கு ஸ்தானத்தில் கேது நிற்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்.கோபத்தை கட்டுப்படுத்தி இனிமையான வார்த்தை யை பேசுங்கள். அமாவாசையன்று சிவசக்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    4.12.2023 முதல் 10.12.2023 வரை

    தடைபட்ட காரியங்கள் துரிதமாகும் வாரம்.ராசி அதிபதி சூரியன் 4,9-ம் அதிபதி செவ்வா யுடன் சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். தைரியசாலியாக இருப்பீர்கள். பயம் என்பதே இருக்காது. கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் சீராகும்.புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்து லாபம் ஈட்டும் மார்க்கம் தென்படும்.

    பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல் வாங்கல் சீராகும்.குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். தந்தையின் கட்டளைக்கு இணங்குவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடை பெறும். அலைச்சல், டென்ஷன் ஆரோக்கிய பாதிப்புகள் அகலும்.கால பைரவ அஷ்டகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×