என் மலர்
சிம்மம் - வார பலன்கள்
சிம்மம்
வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை
6.10.2024 முதல் 12.10.2024 வரை
புதிய திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசிக்கு வக்ர சனியின் 7-ம் பார்வை. ராசி அதிபதி சூரியன் கேதுவுடன் இணைந்து நிற்கிறார். பெருந்தன்மையான செயல்களின் மூலம் மதிப்பு உயரும். பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையில் முட்டுக்கட்டையாக இருந்த பங்காளிகள் மனம் மாறுவார்கள். சகோதர சச்சரவுகள் விலகும். வயதானவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் சுப விசேஷங்களை முன்னின்று நடத்தும் கடமையும், பொறுப்பும் உங்களைத் தேடி வரும் ராசிக்கு 10-ல் குரு வக்ரமடைவதால் புதிய தொழில் முதலீடு செய்ய வேண்டாம். லாபம் எதிர்பார்க்க முடியாது.
பணப் பற்றாக்குறையை தவிர்க்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். நிலம், வாகனம், தங்க நகை வாங்கும் யோகம் உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல குடும்பம் அமையும். குடும்பத்தாருடன் வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது. சிம்ம ராசியினர் மார்ச் 2025. சனிப் பெயர்ச்சிக்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நல்லது. இந்த வாரத்தில் நன்மையும், தீமையும் சேர்ந்தே நடைபெறும். சிவசக்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)
29.9.2024 முதல் 5.10.2024 வரை
திட்டமிட்டு வெற்றியடையும் வாரம். ராசி அதிபதி சூரியன் உச்சம் பெற்ற தன, லாப அதிபதி புதனுடன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சேர்க்கை குடும்ப உறவுகளிடையே நிலவி வந்த சங்கடங்கள் மறையும். வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும்.மறுமண முயற்சியில் நல்ல தகவல் கிடைக்கும். அலைச்சலும், அசதியுமான உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு தொழில் பயணங்கள் உண்டாகும். பிரயாணங்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் உண்டாகும். எதிர்பாராத மாமனாரின் உதவி ஆச்சரியமூட்டும்.
உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு மறையும். கூட்டுத் தொழிலில் பொறுமை, நிதானம் முக்கியம். சகோதர்களால் வீண் விரயம் உண்டு. குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.விவசாய நிலத்திற்கு புதிய ஒப்பந்ததாரர், குத்தகைதாரர்கள் கிடைப்பார்கள். பெண்களின் சுய தொழில் முயற்சி கைமேல் பலன் கிடைக்கும். முக்கிய செயல்களைத் தெளிவாக செய்வதன் மூலம் நன்மைகளை அதிகரிக்கச் செய்ய முடியும். உடல் நிலை மேம்படும். அமாவாசை யன்று தாய், தந்தையிடம் நல்லாசி பெறவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (22.9.2024 முதல் 28.9.2024 வரை)
22.9.2024 முதல் 28.9.2024 வரை
நன்மைகள் நிறைந்த வாரம். ராசி அதிபதி சூரியன் உச்சம் பெற்ற தன, லாப அதிபதி புதனுடன் தன ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவது புத ஆதித்திய யோகம். இதனால் அபரிமிதமான சுப பலன்கள் உண்டாகும். தொழில், உத்தியோக முன்னேற்றம் என அனைத்து விதமான நன்மைகளும், மாற்றங்களும் நடைபெறும். தொழில், உத்தியோகத்தின் மூலம் லாபம் சதம் அடிக்கும்.தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும். வராக் கடன்கள் வசூலாகும். நண்பருக்காக பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்த ஜாமின் தொகை வந்து சேரும். தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும்.
குழந்தை பேறு கிடைக்கும். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளின் வருகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். தடைபட்ட வீடு கட்டும் பணி தொடரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் உடல் ஆரோக்கியமும் சிறக்கும்.கணவன்-மனைவி ஒற்றுமை, திருமணம் சுப காரியங்கள் நடப்பது போன்ற நற்பலன்கள் நடக்கும் 2024 மார்ச் சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடைபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் குறையும். எனவே திருமண விசயத்தில் அதிக கவனம் செலுத்தவும். கோதுமை தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)
15.9.2024 முதல் 21.9.2024 வரை
இன்னல்கள் சீராகும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன ஸ்தானம் செல்கிறார். 3,10ம் அதிபதி சுக்ரன் ஆட்சி. தன லாபாதிபதி புதன் ராசியில் சஞ்சாரம். லாப ஸ்தானத்தில் செவ்வாய் என பெரும் பான்மையான கிரகங்கள் சிம்மத்திற்கு சாதகமாக உள்ளது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைப்பதால் நீங்கள் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். மாமியார் ஆதரவால் பயனடைய வாய்ப்புள்ளது. மறைமுக நெருக்கடிகள் கடன் தொடர்பான நெருக்கடிகள் முழுமையாக விலகி தொழிலில் பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள். தொழிலில், நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும்.
குழந்தைகள் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்ல நேரும். சமூகப் பணிகளில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். திடீர் பயணங்களால் மாற்றம் ஏற்படும். 18.9.2024 அன்று காலை 5.44 முதல் 20.9.2024 அன்று காலை 5.15 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நெருக்கமானவர்கள் மூலம் சேமிப்புகள் குறையும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். சுப பலனை அதிகரிக்க ஆஞ்சநேயரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை
புத்துணர்ச்சியோடு செயல்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் லாப அதிபதி புதனுடன் ராசியில் இணைந்து புத ஆதித்ய யோகம் ஏற்பட்டுள்ளது. லாப ஸ்தானத்தில் 4,9-ம் அதிபதி செவ்வாய் என கிரக நிலவரம் மிகச் சாதகமாக உள்ளது. ஆன்ம பலம் பெருகி நற்சிந்தனைகள் அதிகமாகும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையை மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
புதிய தொழில் முயற்சி கைகூடும். அதிர்ஷ்டத்தை தேடி நீங்கள் செல்ல வேண்டியதில்லை. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுப விரயங்கள், மிகுதியாகும். தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள். 2025 மார்ச்சில் அஷ்டமச் சனி துவங்கும் முன்பு திருமணத்தை நடத்துவது நல்லது. புதிய முயற்சியில் வெற்றியும், லாபமும் பெற சிவனுக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)
1.9.2024 முதல் 7.9.2024 வரை
ஆன்மபலம் பெருகும் வாரம்.ராசி அதிபதி சூரியன் ஆட்சி. ஆன்ம பலம் பெருகி தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரம் பெருகும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டு பெற முடியும். புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும்.சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகமாகும். பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும்.சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழலாம்.
தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம். வக்ர சனியின் பாதிப்பால் சிறு சோர்வு, அசதி அலுப்பு அவ்வப்போது தோன்றி மறையும். பெண்கள் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். திருமணத்திற்கு நல்ல வரன் கூடி வரும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு நிற்பதாலும் முக்கியமான பணிகளை பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க கூடாது. குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)
25.8.2024 முதல் 31.8.2024 வரை
அனுகூலமான வாரம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று சனி பார்வை பெறுகிறார். ஆன்ம பலம் பெருகும். எதையும் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் கூடும். முன்னோர்களின் நல்லாசியால் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரும் அற்புதமான வாரம். தந்தை பூர்வீகச் சொத்து, பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விசயத்திற்காக கோபத்துடன் மன இறுக்கத்துடன் இருப்பார். தந்தையின் ஆரோக்கியத்திற்காக விட்டுக்கொடுக்க முயற்சிப்பீர்கள். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு ரெயில்வேயில் வேலை கிடைக்கும். புதுவிதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும்.
உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும்.சிலருக்கு கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் திரும்ப கிடைக்கும். விவசாயிகள் புதிய தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து பயன் பெறுவீர்கள். மறு திருமண முயற்சி தடையின்றி நடக்கும் சிலருக்கு விரும்பிய பெண்ணை நிச்சயம் செய்யும் வாய்ப்பு உள்ளது. அக்கம் பக்கத்தினருடன் பொதுச்சுவர், காம்பவுண்ட சுவர் தொடர்பான பிரச்சினையால் மன உளைச்சல் அதிகரிக்கும். அதிரசம், சீடை படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (19.8.2024 முதல் 25.8.2024 வரை)
19.8.2024 முதல் 25.8.2024 வரை
விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வாரம். ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி சூரியன் தன, லாப அதிபதி புதனுடன் சேர்க்கை பெறுவதால் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் உதயமாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு. இடமாற்றங்கள் ஏற்படலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். தடையில்லாமல் திருமணம் நடக்கும்.
பூமி, வீடு, வாகனம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 7-ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் பொறாமையால், கண்திருஷ்டியால் நண்பர்களே பகைவராகுவார்கள்.சிலருக்கு தந்தையுடன் சிறு மன பேதம் ஏற்படலாம். குழந்தைகளின் சீரான முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியைத் ஆதிகரிக்கும். 21.8.2024 இரவு 7.31 முதல் 23.8.2024 இரவு 7.55 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பழகும் போது சற்று கவனமாக இருக்கவும். மன சஞ்சலம் சற்று அதிகமாகும்.தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)
12.8.2024 முதல் 18.8.2024 வரை
வெற்றிகரமான வாரம். வார இறுதியில் ராசி அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று சுக்ரன், புதனுடன் இணைகிறார். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். ஆன்ம பலம் பெருகி மனம் மற்றும் உடல் புனிதமடையும். குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் வாழ்ந்தவர்கள் உறவுகளின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு தொட்டது துலங்கும். இரட்டிப்பு வருமானம் உண்டாகும். தொழிலில், நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு மாற்றமான அனுபவங்கள் கிடைக்கும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். பெரியோர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். சுபச் செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். நண்பர்களுக்காக பணம் கடன் வாங்கிக் கொடுத்து அந்த கடனை நீங்களே ஏற்றுக்கொள்ள நேரலாம். உடல் நிலை மேம்படும். வரலட்சுமி வழிபாடு நன்மையை அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)
5.8.2024 முதல் 11.8.2024 வரை
நினைத்த காரியங்கள் வேகமாக நடக்கும் வாரம். ராசியில் புதன், சுக்ரன் சேர்க்கை சனி, செவ்வாய் பார்வையில் அமர்ந்துள்ளது. புத்திசாலித்தனத்தால் உத்தியோகத்தில் பெரிய இலக்கை அடைவீர்கள். வேலையாட்களால் ஏற்பட்ட தொந்தரவு நீங்கும்.சிலர் அரசு வேலைக்கு முயற்சிக்கலாம்.புத்திர பாக்கியம் உண்டாகும்.வெளிநாடு முயற்சியில் முன்னேற்றம் உண்டு. சில ரியல் எஸ்டேட் தாரர்களுக்கு அரசுத் துறை நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிலர் வீட்டை பழுது நீக்கம் செய்யலாம். சிலருக்கு அரசின் இலவச வீடு, வீட்டு மனை கிடைக்கும். சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் நிச்சயமாகும். தொழில் நல்ல லாபத்தை அள்ளித்தரும். ஏழாமிடத்தில் சனி வக்ரமாக இருப்பதால் பங்கு தாரர்கள் மாறக்கூடும். சிலர் புதிய கூட்டாளிகளுடன் இணைந்து புதிய தொழில் கிளைகள் ஆரம்பிக்கலாம். சிலருக்கு கற்பனை பயத்தால் மனதடுமாற்றம் உண்டாகலாம். பெண்களுடன் அளவாகப் பழகுவது நல்லது. ஆடிப் பூர நன்நாளில் அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்தவார ராசிபலன்
29.7.2024 முதல் 4.8.2024 வரை
வளமான பலன்களைப் பெறும் வாரம். ராசியில் புதன், சுக்ரன் சேர்க்கை. தனலாப அதிபதி புதன் முயற்சி ஸ்தான அதிபதி, தொழில் ஸ்தான அதிபதி சுக்ரனுடன் சேருவதால் புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும், தொழில் ரீதியாக எடுக்கும் நடவடிக்கைகளில் பாராட்டு கிடைக்கும். கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் சிலர் பெரிய நிறுவனத்தின் கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெறுவார்கள். கூட்டு குடும்பத்தின் சில சிறிய விஷயங்களால் வாழ்க்கை துணையுடன் விரிசல் ஏற்படலாம். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடித்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது.
செலவுகள் அதிகரித்தாலும் சில புத்திசாலித்தனமான செயல் பாட்டால் செலவை கட்டுப்படுத்துவீர்கள். மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி படிப்பது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படும். நிம்ம தியான உறக்கம் உண்டாகும். மருத்துவ செலவு குறையும். ஆடிப்பெருக்கு அன்று சிவ சக்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்தவார ராசிபலன்
22.7.2024 முதல் 28.7.2024 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம் .ராசியில் தன, லாப அதிபதி புதன், சனி பார்வையில் சஞ்சரிக்கிறார். இயந்திரத்தனமான வாழ்க்கையி லிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு தொழி லில் செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். வேலையில் இடமாற்றங்கள் உண்டாகலாம். குடும்பத்துடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சனி பார்வையில் புதன் இருப்பதால் முக்கிய செயல்கள், ஆரோக்கி யத்தில் விழிப்புடன் செயல்படுவது அவசியம். 25.7.2024 அன்று காலை 10.44 முதல் 27.7.2024 அன்று பகல் 12.59 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தீய சிந்தனைகளால், டென்ஷன் ஏற்படும். தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப் பது நல்லது. மற்றவர்களுக்கு வாக்கு கொடுப்ப தையோ முன்ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். ஆடி வெள்ளிக்கிழமை வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களிடம் நல்லாசி பெறுவது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






