என் மலர்
சிம்மம் - வார பலன்கள்
சிம்மம்
வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை
27.10.2024 முதல் 3.11.2024 வரை
லாபகரமான வாரம். ராசி அதிபதி சூரியன் சகாய ஸ்தானத்தில் யோகாதிபதி செவ்வாய் பார்வையில் சஞ்சாரம் செய்கிறார். சிலர் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து கூட்டுத் தொழில் துவங்கலாம்.புதிய தொழிலுக்கு முயற்சிப்பவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். குலத் தொழில் விருத்தியடையும். வேலை விஷயமாக குடும்பத்தை பிரிந்தவர்கள் மீண்டும் குடும்பத்தோடு ஒன்று சேருவார்கள். அன்னையின் அன்பும் அரவணைப்பு, உதவிகளும் ஆதரவாய் இருக்கும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சுபகாரிய நிகழ்ச்சிகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
உயர்ந்த வாகன வசதி அமையும். திருமணத் தடை அகலும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். தகவல் தொடர்பு சாதனங்களான வாட்ஸ் அப்,பேஸ்புக் போன்றவற்றை முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெரிய பணம் முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு பத்து முறை சிந்திக்க வேண்டும். அவசியமற்ற பயணத்தை தவிர்க்கவும். ஆதித்ய ஹ்ருதயம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை
20.10.2024 முதல் 26.10.2024 வரை
சிக்கல்கள் மற்றும் சிரமங்களில் இருந்து விடுபடும் காலம். ராசி அதிபதி சூரியன் மற்றும் 4,9ம் அதிபதி செவ்வாய் நீசம் பெறுவதால் விலகிச் சென்ற உறவுகள், உடன் பிறந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். வீண் மனஸ்தாபங்களை தவிர்த்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் சுப பலனை அடைய முடியும். உயர் அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்.நிறைவான தீபாவளி அன்பளிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் மற்றும் லாபம் அதிகரிக்கும். வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். செவ்வாய், சனி சம்பந்தம் இருப்பதால் பங்குச்சந்தை வியாபாரத்தை தவிர்க்கவும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பால் அசவுகரியங்கள் ஏற்படும். நவகிரக சூரியனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை
தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் நீசம் பெற்றாலும் தன, லாப அதிபதி புதன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதிற்கு நிம்மதியும் தன்னம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். தைரியம் மிகுதியாக இருக்கும். மனபலம், நிம்மதி கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ராசிக்கு 5ம்மிடத்தை பாக்கிய அதிபதி செவ்வாய் பார்ப்பதால் அதிர்ஷ்ட பொருள், பணம், உயில் சொத்து கிடைக்கும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீபாவளி விடுமுறையில் தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு செல்லலாம். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும்.
பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். 15.10. 2024 அன்று மாலை 4.48 முதல் 17.10.2024 அன்று மாலை 4.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப உறவுகளிடம் பழைய கதையைப் பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். சிலருக்கு தேவையற்ற பயணங்கள் உண்டாகும். சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை
6.10.2024 முதல் 12.10.2024 வரை
புதிய திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசிக்கு வக்ர சனியின் 7-ம் பார்வை. ராசி அதிபதி சூரியன் கேதுவுடன் இணைந்து நிற்கிறார். பெருந்தன்மையான செயல்களின் மூலம் மதிப்பு உயரும். பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையில் முட்டுக்கட்டையாக இருந்த பங்காளிகள் மனம் மாறுவார்கள். சகோதர சச்சரவுகள் விலகும். வயதானவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் சுப விசேஷங்களை முன்னின்று நடத்தும் கடமையும், பொறுப்பும் உங்களைத் தேடி வரும் ராசிக்கு 10-ல் குரு வக்ரமடைவதால் புதிய தொழில் முதலீடு செய்ய வேண்டாம். லாபம் எதிர்பார்க்க முடியாது.
பணப் பற்றாக்குறையை தவிர்க்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். நிலம், வாகனம், தங்க நகை வாங்கும் யோகம் உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல குடும்பம் அமையும். குடும்பத்தாருடன் வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது. சிம்ம ராசியினர் மார்ச் 2025. சனிப் பெயர்ச்சிக்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நல்லது. இந்த வாரத்தில் நன்மையும், தீமையும் சேர்ந்தே நடைபெறும். சிவசக்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)
29.9.2024 முதல் 5.10.2024 வரை
திட்டமிட்டு வெற்றியடையும் வாரம். ராசி அதிபதி சூரியன் உச்சம் பெற்ற தன, லாப அதிபதி புதனுடன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சேர்க்கை குடும்ப உறவுகளிடையே நிலவி வந்த சங்கடங்கள் மறையும். வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும்.மறுமண முயற்சியில் நல்ல தகவல் கிடைக்கும். அலைச்சலும், அசதியுமான உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு தொழில் பயணங்கள் உண்டாகும். பிரயாணங்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் உண்டாகும். எதிர்பாராத மாமனாரின் உதவி ஆச்சரியமூட்டும்.
உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு மறையும். கூட்டுத் தொழிலில் பொறுமை, நிதானம் முக்கியம். சகோதர்களால் வீண் விரயம் உண்டு. குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.விவசாய நிலத்திற்கு புதிய ஒப்பந்ததாரர், குத்தகைதாரர்கள் கிடைப்பார்கள். பெண்களின் சுய தொழில் முயற்சி கைமேல் பலன் கிடைக்கும். முக்கிய செயல்களைத் தெளிவாக செய்வதன் மூலம் நன்மைகளை அதிகரிக்கச் செய்ய முடியும். உடல் நிலை மேம்படும். அமாவாசை யன்று தாய், தந்தையிடம் நல்லாசி பெறவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (22.9.2024 முதல் 28.9.2024 வரை)
22.9.2024 முதல் 28.9.2024 வரை
நன்மைகள் நிறைந்த வாரம். ராசி அதிபதி சூரியன் உச்சம் பெற்ற தன, லாப அதிபதி புதனுடன் தன ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவது புத ஆதித்திய யோகம். இதனால் அபரிமிதமான சுப பலன்கள் உண்டாகும். தொழில், உத்தியோக முன்னேற்றம் என அனைத்து விதமான நன்மைகளும், மாற்றங்களும் நடைபெறும். தொழில், உத்தியோகத்தின் மூலம் லாபம் சதம் அடிக்கும்.தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும். வராக் கடன்கள் வசூலாகும். நண்பருக்காக பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்த ஜாமின் தொகை வந்து சேரும். தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும்.
குழந்தை பேறு கிடைக்கும். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளின் வருகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். தடைபட்ட வீடு கட்டும் பணி தொடரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் உடல் ஆரோக்கியமும் சிறக்கும்.கணவன்-மனைவி ஒற்றுமை, திருமணம் சுப காரியங்கள் நடப்பது போன்ற நற்பலன்கள் நடக்கும் 2024 மார்ச் சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடைபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் குறையும். எனவே திருமண விசயத்தில் அதிக கவனம் செலுத்தவும். கோதுமை தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)
15.9.2024 முதல் 21.9.2024 வரை
இன்னல்கள் சீராகும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன ஸ்தானம் செல்கிறார். 3,10ம் அதிபதி சுக்ரன் ஆட்சி. தன லாபாதிபதி புதன் ராசியில் சஞ்சாரம். லாப ஸ்தானத்தில் செவ்வாய் என பெரும் பான்மையான கிரகங்கள் சிம்மத்திற்கு சாதகமாக உள்ளது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைப்பதால் நீங்கள் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். மாமியார் ஆதரவால் பயனடைய வாய்ப்புள்ளது. மறைமுக நெருக்கடிகள் கடன் தொடர்பான நெருக்கடிகள் முழுமையாக விலகி தொழிலில் பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள். தொழிலில், நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும்.
குழந்தைகள் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்ல நேரும். சமூகப் பணிகளில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். திடீர் பயணங்களால் மாற்றம் ஏற்படும். 18.9.2024 அன்று காலை 5.44 முதல் 20.9.2024 அன்று காலை 5.15 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நெருக்கமானவர்கள் மூலம் சேமிப்புகள் குறையும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். சுப பலனை அதிகரிக்க ஆஞ்சநேயரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை
புத்துணர்ச்சியோடு செயல்படும் வாரம். ராசி அதிபதி சூரியன் லாப அதிபதி புதனுடன் ராசியில் இணைந்து புத ஆதித்ய யோகம் ஏற்பட்டுள்ளது. லாப ஸ்தானத்தில் 4,9-ம் அதிபதி செவ்வாய் என கிரக நிலவரம் மிகச் சாதகமாக உள்ளது. ஆன்ம பலம் பெருகி நற்சிந்தனைகள் அதிகமாகும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையை மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
புதிய தொழில் முயற்சி கைகூடும். அதிர்ஷ்டத்தை தேடி நீங்கள் செல்ல வேண்டியதில்லை. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுப விரயங்கள், மிகுதியாகும். தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள். 2025 மார்ச்சில் அஷ்டமச் சனி துவங்கும் முன்பு திருமணத்தை நடத்துவது நல்லது. புதிய முயற்சியில் வெற்றியும், லாபமும் பெற சிவனுக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)
1.9.2024 முதல் 7.9.2024 வரை
ஆன்மபலம் பெருகும் வாரம்.ராசி அதிபதி சூரியன் ஆட்சி. ஆன்ம பலம் பெருகி தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரம் பெருகும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டு பெற முடியும். புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும்.சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகமாகும். பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும்.சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழலாம்.
தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம். வக்ர சனியின் பாதிப்பால் சிறு சோர்வு, அசதி அலுப்பு அவ்வப்போது தோன்றி மறையும். பெண்கள் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். திருமணத்திற்கு நல்ல வரன் கூடி வரும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு நிற்பதாலும் முக்கியமான பணிகளை பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க கூடாது. குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)
25.8.2024 முதல் 31.8.2024 வரை
அனுகூலமான வாரம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று சனி பார்வை பெறுகிறார். ஆன்ம பலம் பெருகும். எதையும் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் கூடும். முன்னோர்களின் நல்லாசியால் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரும் அற்புதமான வாரம். தந்தை பூர்வீகச் சொத்து, பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விசயத்திற்காக கோபத்துடன் மன இறுக்கத்துடன் இருப்பார். தந்தையின் ஆரோக்கியத்திற்காக விட்டுக்கொடுக்க முயற்சிப்பீர்கள். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு ரெயில்வேயில் வேலை கிடைக்கும். புதுவிதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும்.
உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும்.சிலருக்கு கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் திரும்ப கிடைக்கும். விவசாயிகள் புதிய தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து பயன் பெறுவீர்கள். மறு திருமண முயற்சி தடையின்றி நடக்கும் சிலருக்கு விரும்பிய பெண்ணை நிச்சயம் செய்யும் வாய்ப்பு உள்ளது. அக்கம் பக்கத்தினருடன் பொதுச்சுவர், காம்பவுண்ட சுவர் தொடர்பான பிரச்சினையால் மன உளைச்சல் அதிகரிக்கும். அதிரசம், சீடை படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (19.8.2024 முதல் 25.8.2024 வரை)
19.8.2024 முதல் 25.8.2024 வரை
விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வாரம். ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி சூரியன் தன, லாப அதிபதி புதனுடன் சேர்க்கை பெறுவதால் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் உதயமாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு. இடமாற்றங்கள் ஏற்படலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். தடையில்லாமல் திருமணம் நடக்கும்.
பூமி, வீடு, வாகனம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 7-ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் பொறாமையால், கண்திருஷ்டியால் நண்பர்களே பகைவராகுவார்கள்.சிலருக்கு தந்தையுடன் சிறு மன பேதம் ஏற்படலாம். குழந்தைகளின் சீரான முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியைத் ஆதிகரிக்கும். 21.8.2024 இரவு 7.31 முதல் 23.8.2024 இரவு 7.55 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பழகும் போது சற்று கவனமாக இருக்கவும். மன சஞ்சலம் சற்று அதிகமாகும்.தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)
12.8.2024 முதல் 18.8.2024 வரை
வெற்றிகரமான வாரம். வார இறுதியில் ராசி அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று சுக்ரன், புதனுடன் இணைகிறார். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். ஆன்ம பலம் பெருகி மனம் மற்றும் உடல் புனிதமடையும். குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் வாழ்ந்தவர்கள் உறவுகளின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு தொட்டது துலங்கும். இரட்டிப்பு வருமானம் உண்டாகும். தொழிலில், நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு மாற்றமான அனுபவங்கள் கிடைக்கும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். பெரியோர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. பொழுதுபோக்கு விஷயங்களால் கையிருப்புகள் குறையும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். சுபச் செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். நண்பர்களுக்காக பணம் கடன் வாங்கிக் கொடுத்து அந்த கடனை நீங்களே ஏற்றுக்கொள்ள நேரலாம். உடல் நிலை மேம்படும். வரலட்சுமி வழிபாடு நன்மையை அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






