என் மலர்
சிம்மம் - வார பலன்கள்
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
10.10.2022 முதல் 16.10.2022 வரை
தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும் வாரம்.ராசி அதிபதி சூரியனை குரு பார்ப்பதால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஆன்ம பலம் பெருகும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. தொலைந்து போன, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். பணவசதி சிறப்பாக இருக்கும்.
பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். பிள்ளைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். தீபாவளி சீசன் பொருள் விற்பனையாளர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் சகோதரரிடம் கருத்து வேறுபாடு உண்டாகலாம். பெண்களுக்கு கணவரிடம் இருந்து எதிர்பாராத வெளிநாட்டு பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும்.
10.10.2022 மாலை 4.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிக வேலைப்பளுவினால் மனஅழுத்தம் உருவாகும்.மனதில் கலக்கம் தோன்றும். ஞாபக சக்தி குறையும். இரட்டைப் பிள்ளையாரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
3.10.2022 முதல் 9.10.2022 வரை
தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் தன லாப அதிபதி புதன் மற்றும் 3,10-ம் அதிபதி சுக்ரனுடன் சேர்க்கை பெற்று குருப் பார்வையில் சஞ்சரிப்பதால் தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் பலப்படும். காழ்புணர்சியால், தவறான புரிதலால் பிரிந்த உடன் பிறப்புகள் உங்களை புரிந்து கொள்வார்கள். பங்குச் சந்தை ஆதாயம் மகிழ்ச்சி தரும். அடமான நகைகள் மீண்டு வரும்.
வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். அசையாச் சொத்துகளின் மதிப்பு உயர்வதால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காதல் திருமணம் கைகூடும்.உத்தியோகத்தில் நினைத்த இடமாற்றம் கிடைப்பது உறுதி. அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டிய சூழல் நிலவும். 7-ம் அதிபதி சனி வக்ரம் பெற்றதால் தம்பதிகளிடையே அவ்வப்போது வாக்குவாதம் தோன்றி மறையும். அதனால் படபடப்பும் நிதானமற்ற நிலையும் நீடிக்கும். ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பயம் அகலும்.
8.10.2022 பகல் 11.23 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எதிர்மறை விவாதங்களைத் தவிர்த்து விடாமுயற்சி மற்றும் வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும். பராசக்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
26.9.2022 முதல் 2.10.2022 வரை
அதிர்ஷ்ட தேவதை அரவணைக்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் 2,11-ம் அதிபதி புதன் மற்றும் 3,10ம் அதிபதி சுக்ரனுடன் குருப்பார்வையில் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் தேடி வரும். ரியல் எஸ்டேட், ஒப்பந்த தொழில் புரிபவர்கள் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் உண்டு. அடிமைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சொந்தத் தொழில் செய்யும் சூழல், ஆர்வம் உருவாகும்.
தொழிலில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு உயரும். ஏழில் சனி வக்ரமாக இருப்பதால் தொழிலில் கூட்டாளிகளிடம் கவனமாக செயல்படவும்.பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயர நேரலாம். காது,மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும்.
பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வாரிசுகளின் திருமண முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத் துணைடன் சிறு சிறு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். சிவ வழிபாடு முன்னேற்றத்தை அதிகரிக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
19.9.2022 முதல் 25.9.2022 வரை
கலக்கலான வாரம். ராசிக்கு யோக அதிபதி செவ்வாயின் பார்வை. 3,10-ம் அதிபதி சுக்ரன் வார இறுதி வரை ராசியில் நிற்கிறார்கள். தன ஸ்தானத்தில் ராசி அதிபதி சூரியன், புதன் என அபரிமிதமான சுப பலன்களை கிரகங்கள் வழங்க உள்ள நல்ல நேரம். தொழில், உத்தியோக முன்னேற்றம் என அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். தொழில், உத்தியோகத்தின் மூலம் லாபம் சதம் அடிக்கும்.
புதிய தொழில் ஒப்பந்தம் தேடி வரும்.தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும். வராக் கடன்கள் வசூலாகும். நண்பருக்காக பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்த ஜாமீன் தொகை வந்து சேரும்.தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும். குழந்தை பேறு கிடைக்கும். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளின் வருகை மகிழ்சியை இரட்டிப்பாக்கும். தடைபட்ட வீடு கட்டும் பணி தொடரும்.
குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் உடல் ஆரோக்கியமும் சிறக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை, திருமணம் சுப காரியங்கள் நடப்பது போன்ற நற்பலன்கள் நடக்கும் வாரம். அமாவாசையன்று கோதுமை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
12.9.2022 முதல் 18.9.2022 வரை
எதிர்பாராத புதிய திருப்பங்கள் உண்டாகும் வாரம். முயற்சி ஸ்தான அதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிப்பதால்தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல் மேலோங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாகும். வீடு கட்ட,அல்லது புதிய தொழில் துவங்க கடன்கிடைக்கும். குருப் பார்வையில் உள்ள தன, லாப அதிபதி புதனின் சாதகமான நிலை சிம்ம ராசியினருக்கு ராஜயோக அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் இருந்து வந்து சர்ச்சைகள் விலகும். குழந்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். குருபகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் வருமானமும்,சந்தோஷமும் அதிகரிக்கும். குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். திருமண முயற்சிகள் நல்ல முன்னேற்றம் தரும். ஒரு சிலர் வீடு, வேலை மாற்றம் செய்ய நேரும். சனி பகவான் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகளை அகற்றி எதிர்ப்புகள் இல்லாத நிலையை வழங்குவார்.
13.9.2022 காலை 6.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். அனைவரிடமும் பொறுமையாக அன்பாக பழகுவது நல்லது. நலிந்த அந்தணர்களுக்கு ஆடை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
5.8.2022 முதல் 11.9.2022 வரை
கடன் சுமை குறையும் வாரம்.
ராசி அதிபதி சூரியன் ஆட்சி பெற்று 3,10-ம் அதிபதி சுக்ரனுடன் ராசியில் சேர்க்கை. தன லாப அதிபதி புதன் உச்சம் என கிரக நிலவரம் சாதகமாக இருப்பதால் தொடர்ச்சியான தொழில் முன்னேற்றத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலர் புத்திக் கூர்மையால் அதிகம் சம்பாதிப்பார்கள். சேமிப்பு அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும்.
அடமான நகை, சொத்துக்களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். பிள்ளைகளால் ஆதாயமுண்டு. அரசின் ஒப்பந்ததா ரர்களுக்கு ஆதாயம் மிகுதியாக இருக்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும்.தீய பழக்கதில் இருந்து விடுபட சிகிச்சை பெற்றவர்களுக்கு சிகிச்சை பலன் தரும். உப்புக்கு பெறாத பிரச்சினைக்காக ஒட்டாமல்இருந்த உறவுகள் இணைவார்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும்.
பெண்களுக்கு மாமியார், மாமனாரால் எற்பட்ட பிரச்சினைகள் சீராகும். வீடு, வேலை மாற்றும் எண்ணம் நிறைவேறும். சிலர் பிழைப்பிற்காக ஒப்பந்த அடிப்படையில் வெளியூருக்கு இடம் பெயரலாம். ஞாயிற்று கிழமை காலை 6 முதல் 7 மணிவரையான சூரிய ஓரையில் நெய் தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் தொழிலில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
29.8.2022 முதல் 4.9.2022 வரை
புதிய எழுச்சியுடன் வலம் வரும் வாரம். ராசி அதிபதி சூரியன் ராசியில் ஆட்சி. தன, லாப ஸ்தான அதிபதி புதன் உச்சம் என கிரக நிலவரம் சாதகமாக இருப்பதால் மனோபலத்தால் நன்மைகள் அதிகரிக்கும். உறவுகளின் வருகையால் குடும்பத்தில் குதூகலம் கூடும். வயது முதிர்ந்தவர்களுக்கு பேரன், பேத்தி கிடைக்கும். இளம் வயதினருக்கு புத்திர பிராப்தம் கிடைக்கும்.
தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும்.
வெளியூர் பணி மாற்றம், உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். வேலை, தொழிலில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகும். கூலித் தொழிலாளிகள் மற்றும் சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் திருமணம், எதிர்காலம் போன்றவற்றை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள்.
பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் அகன்று திருமணம் நடக்கும். மறுமணத்திற்கு வரன் பார்க்க ஏற்ற நேரம். உயர் கல்வி முயற்சி சித்திக்கும். வீடு, வாகனம் மற்றும் சுப நிகழ்விற்காக விண்ணப்பித்த கடன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் நலனில் அதிக அக்கறை வேண்டும். மறைமுக தொந்தரவு கொடுத்தவர்கள் பலம் இழப்பார்கள். குச்சனூர் சென்று ஸ்ரீ சனி பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
22.8.2022 முதல் 28.8.2022 வரை
ஆன்ம பலம் பெருகும் வாரம். ராசி அதிபதி சூரியன் யோகாதிபதி செவ்வாய் பார்வையில் ஆட்சி பலம் பெருகுவதால் உள்ளத்தில் குடிகொண்ட அகக் கழிவுகளான பொறாமை, தீய எண்ணம் நீங்கி ஆன்ம பலம் அதிகரிக்கும். நிம்மதியற்ற நிலை டென்ஷன், நோய் தாக்கம் குறைந்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.
மருத்துவ மனையில் இருந்தவர்கள் வீடு திரும்புவார்கள். வாழ்க்கை முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் உருவாகும். வெகுநாள் இழுத்து கொண்டிருந்த விவகாரங்கள் முடிவிற்கு வரும். உறவுகள் உங்கள் மீது சுமத்திய வீண் கலங்கங்கள் மாறும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள்.
5, 8-ம் அதிபதி குரு ஆட்சி பலம் பெறுவதால் இன்சூரன்ஸ் பாலிசி, முதிர்வு தொகை, உயில் சொத்து கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். தொழிலில் கவனக் குறைவாக செயல்பட்டவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்திற்காக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒரே இடத்திற்கு மாற்றலாவார்கள். திருமண வாய்ப்புகள் வீடு தேடி வரும். மாணவர்களுக்கு புத்திக் கூர்மை அதிகரிக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
15.8.2022 முதல் 21.8.2022 வரை
நிலையான வருமானத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டும் வாரம். ராசி அதிபதி சூரியனும் தன, லாப அதிபதி புதனும் ராசியில் சஞ்சரிப்பதால் சிறிய உழைப்பில் நல்ல வருமானம் கிடைக்கும். சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள்.
கொடுத்த வாக்கைநிறைவேற்றுவீர்கள். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். யோக அதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் பிடிவாதமாகஎந்தக் காரியத்தையும்முயற்சி செய்து அதில்வெற்றியும் பெறுவீர்கள். அரசுத் துறை வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி.
பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வுநினைத்தபடி கிடைக்கும். 16.8.2022 இரவு 9.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் தோன்றும். உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. தினமும் ஆதித்ய இருதயம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
8.8.2022 முதல் 14.8.2022 வரை
தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும் வாரம்.ராசி அதிபதி சூரியன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்விரையங்கள் சற்று அதிகமாகும்.6-ம் அதிபதி சனி வக்ரம் பெற்றதால் சேமிப்பு கரையும். ஆரோக்கிய தொல்லை ஏற்படும். உரிய மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது.
அரசியல்வாதிகள் மவுனமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆளுமை மேலோங்கும். பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு உண்டு.பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடும்.
7-ல் உள்ள வக்ர சனியால் தம்பதிகள் ஈகோவால் பிரியலாம். கிரக நிலைகள் சற்று சாதகமற்றுஇருந்தாலும்ஒரு கதவை அடைத்தாலும் மறுகதவு திறந்து விடுபவர்கள் தான் நவகிரகங்கள். எனவே நம்பிக்கை மிக முக்கியம்.14.8.2022 மாலை 4.15- மணிக்கு சந்திராஷ்டமம் துவங்குவதால் கவனம் தேவை. சிவாச்சாரியார்களுக்கு உதவவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
இந்த வார ராசிப்பலன்
1.8.2022 முதல் 7.8.2022 வரை
விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வாரம். தன லாப அதிபதி புதன் ராசியில் சஞ்சரிப்பதால் எதையும் சாதிக்கும் திறனும், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும்.
உத்தியோகஸ்தர்களின் திறமை மிக்க செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.நல்ல உணவு, விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். சிலருக்கு தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம்.
3-ல் கேது நிற்பதால் மனைவி வழி சொத்திற்காக மாமனாரிடம் கருத்து வேறுபாடு, வம்பு வழக்கு தோன்றும். 9-ல் செவ்வாய் ராகு சேர்க்கை இருப்பதால் தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். ராசி அதிபதி சூரியன் 12-ல் மறைவதால் எல்லா வசதிகளும் இன்பமும் இருந்தாலும் ஏதாவது மனக்குறை உங்களை வாட்டும். செவ்வாய்கிழமை சுப்ரமணிய புஜங்கம் படிக்கவும்.
கன்னி
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சிம்மம்
வார ராசி பலன்கள்
25.7.2022 முதல் 31.7.2022 வரை
சுமாரான வாரம். ராசி அதிபதி சூரியனும் தனம், வாக்கு ஸ்தான அதிபதி புதனும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்ஆன்மீக இயக்கங்கள், சமூக சேவையாற்றும் நிறுவனங்களில்கவுரவப் பதவிகள் கிடைக்கும். சேவை மனப்பான்மையுடன் சமூக சேவை செய்வீர்கள். தான தர்மங்கள் செய்வீர்கள்.சிலர் வீட்டை சீர்திருத்தலாம்.
பிள்ளைகள் உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்வார்கள். சிலருக்கு செயல் திறன் குறைவுபடும். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட முடியாது. வரவை விட செலவு மிகுதியாகும். பெண்கள் உயர் அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு வேறு இடத்துக்கு வேலை மாற்றமுற்படுவார்கள்.
ஆரோக்கிய குறைபாடு சீராகும். மூட்டு அறுவை சிகிச்சை நல்ல பலன் தரும். வாழ்க்கை துணையின் பூர்வீகச் சொத்தில் மைத்துனரால் ஏற்பட்ட தடைகள் அகலும். சில ஆண்கள் வாழ்க்கை இழந்த பெண்ணுக்கு மறுவாழ்வு தரசம்பதிப்பார்கள்.
சிக்கனத்தை கடைபிடித்து எந்த ஒரு காரியத்தையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செயல்பட்டால் உன்னத நிலையை அடையலாம். பிரதோசத்தன்று சிவனுக்குபச்சைக்கற்பூர அபிசேகம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






